Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Monday, December 19, 2011

தாகம்


மாலை வேளையில்
காதல் புரிகையில்
கண்கள் இருளையில்
இதழ்கள் சிவக்கையில்
மோகமும், தாகமும் கூடுதே!

இரவும் பகலும்
நம்மை வாட்டிடுதே!
காதல் வலியை
அது ஏற்றிடுதே!

பகலின் கொடுமை
நீங்கிடுமே!
இரவின் பசியை
அது தீர்த்திடுமே!

விடியும் தருணம்
துயல் கலைந்திடுமே!
காரணம் இன்றி
அது நடந்திடுமே!

காதல் இன்றி
வாழ்க்கை தொடங்கிடுமா!
ஊடல் இன்றி
அது முடிந்திடுமா!

போர்வைக்குள்ளே
ஒரு மயக்கம்,
உன் பார்வை பட்டாலே
அது தெரிக்கும்.

நதியில் வெள்ளம்
பெருகிடுதே,
சேரும் இடத்தில்
தொலைத்திடுதே.

இரவின் குளிரை
தனித்திடவா, நம்
இளமை பசியை
தீர்த்திடவா.

உறவின் அர்த்தம்
அது எதுவோ!
அர்த்தம் அறியவே
சேர்ந்திருப்போம்!

பூவில் வண்டு
தேன் பருக,
உன் இதழில்
முத்தம், நான் பருக..

கூந்தலை
நீ, கோதிடவே!
அதில் பூவை சூடி
நான், மகிழ்ந்திடவே!

வெட்கம் வந்து
நீ தலைகுனிய,
ஆடை சற்றே
அது நழுவ,
பாதி என்னில், நீயடி
உனது மடியில்,நானடி...

Friday, December 09, 2011

கலுழி


சொந்தம் ஒன்று  ஏதுமில்லை
சொல்லித் தெரிய ஆளுமில்லை
பந்தம் பாசம் ஏதுமில்லை
பணம் காசு அது கிட்டவில்லை

தினந்தோறும் பசியாற்றவில்லை
பசியாற்ற உணவுமில்லை
படுத்து உறங்க பாயுமில்லை
பாவி மகன் பிறந்தேன் எதற்கோ

திக்குமுக்கு ஆடிவிட்டேன்
தினந்தோறும் தேடிவிட்டேன்
வேலை ஏதும் கிட்டவில்லை
வெளியில் யாரும் மதிக்கவில்லை

நாளும் கிழமையும் ஓடிப்போச்சு
நட்டநடு ராதிரியாச்சு
பிச்சை எடுக்க மனமுமில்லை
பிழைக்க வேற வழியுமில்லை

சாவு என்னை தள்ளி வைக்குது
சமயம் பார்த்து அழைக்க நினைக்குது
ஊரு உலகம் வெறுக்குது
பாவி மனசு தவிக்குது

இதற்கு முடிவு கிடைக்குமோ
நாளும் கடந்து போகுமோ
என்று தான் விடியுமோ
நானும் இதற்கு காரணமோ....

Sunday, December 04, 2011

அன்பே


அன்பே,
இதயம் அழைக்குதடி
உள்ளுர நினைக்குதடி
கண்ணோடு இணையடி
என் கண்கள் நீயடி

இன்பம் பெருகுதடி
உன் பின்பம் தெரியுதடி
என் சொந்தம் நீயடி
அடுத்த தாயும் நீயடி

காலமும் கடந்ததடி
இன்னும் தாமதம் ஏனடி
நிலவும் சாய்ந்ததடி
கண்ணில் தடுமாற்றம் ஏனடி
அட, பொழுதும் நமக்குச் சொந்தமடி

என் பாடலின் வரிகள் நீயடி
அதற்கு அர்த்தமும் நீயடி
காதலுக்கு மொழியும் நீயடி
என் கனவுகளுக்கு காரணமும் நீயடி

தமிழில் செய்யுள் இல்லையடி
அழகே! உன்னை வர்ணிப்பதெப்படி

உன்னை கண்டாலே திகைக்குதடி
புலவனின் ஓலைசுவடிகளடி
உன் கூந்தலில் சூடடி
பூக்களும் குடியேறத் துடிக்குதடி

குளிரில் வெப்பம் நீயடி
கங்கையின் ஓடம் நானடி
நதியில் நீராடடி
கடலில் சேரலாம் நாமடி.

Sunday, October 30, 2011


கல்நெஞ்சுக்காரி,  
கரைய மாட்டியா
உள்நெஞ்சம் இங்கு
ஊமையானது.

கண்ணுக்குள் ஏக்கம்
அது கண்ணீரின் தாக்கம்
நெஞ்சுக்குள் ஏக்கம்
இது உன்னினைவின் தாக்கம்.

கல்நெஞ்சம் ஏனம்மா
என்னை கொஞ்சம் பாரம்மா
உன்னாலே தான் நான்
பூ மனதானேன்.

உன் பூமுகம் பார்த்து
புன்னகை செய்தேன்
எனக்குள் ஏதோ
மாற்றம் தந்தாய்.

 தேன் சிந்தும் விழியை 
தினந்தோறும் பார்த்தேன்
வண்டாக ஆனேன்
காதலில் விழுந்தேன்.

தித்திக்கும் உன் பேச்சில்
நான் தத்தளித்தேன்
கரையேறும் கயிறு
உன்வார்த்தை தானே.

மல்லிகை பூவை
நீ சூடி வந்தால்
மதுரை மாநகரே
உன் பின்னால்தானே.

காதோர கம்மல்
கவிபாடும் செம்மல்
கவிக்காக தானே
இசைக்கலைஞன் ஆனேன்.

 முத்தான பற்கள் 
கற்கண்டு போலே
தித்திக்குதே,
என் நெஞ்சிலே.

பூமாலை கழுத்து
என் தோள்மீது சாய
சுமைதாங்கும் நெஞ்சம்
அசைந்தாடும் கொஞ்சம்.

வளைந்தாடும் இடுப்பு
உடுக்கைக்கு சொந்தம்
பாம்பாட்டி நானே
பார்ப்பதும் நானே.

படியேறும் உன்பாதம்
சலங்கைக்கு சொந்தம்
சலங்கையின் சத்தம்
என்வாழ்வின் அர்த்தம்...

Wednesday, October 26, 2011

தனிமை


இயற்கையை வெறுக்கிறேன்
அதன் நியதியை மறுக்கிறேன்
தனிமையை அடைகிறேன்
அந்த கொடுமையை உணர்கிறேன்

தடைகளை தகர்த்தெரிந்தேன்
தனிமை என்னை பின்தொடர்ந்தது
வந்து உதவ ஆளில்லை
எதிர்த்து நிற்கவும் ஆளில்லை

காலம் இதற்கு காரணமோ  
பாவம் நான்செய்தது, காரணமோ
மரணம்வரை இது நீடிக்குமோ
இல்லை மறுபிறவியிலும் தொடருமோ

கண் எதிரே மரணவாசல்
முடித்துக்கொள்ள புறப்பட்டேன்
சமுத்திரத்தில் பலியானேன்
உயிரினத்திற்கு விருந்தானேன்....

Tuesday, October 11, 2011

இதுதான்டா அரசியல்


வர வர நம்ம அரசியல் வாதிங்க அடிக்குற காமெடிக்கு அளவே இல்லாம போய்டுச்சு.பின்ன என்னங்க ஏப்ரல்ல ஒரு பேச்சு அக்டோபர்ல ஒரு பேச்சு பேசுறாங்க. இந்த ஆளும் கட்சியோட கூட்டணி சேர்ந்து ஒரு வருடம் கூட ஆகல அதுக்குள்ள வெளியேறி இப்ப அந்த கட்சியவே விட்டு கிழி கிழின்னு கிழிக்குறாங்க. இதுல நம்ம கேப்டன் ஆளும் கட்சிய ஆறு மாசத்துக்கு விமர்சிக்கமாட்டோம்னு வேற பேட்டியெல்லாம் கொடுத்தாரு.இப்ப அந்த கூட்டணியே ஆறு மாசம் கூட நிலைக்கவில்லை.அந்த அம்மாவ பத்தி தெரிஞ்சும் இப்படி மாட்டிகுட்டு முளிகுறாரே.ஆளும் கட்சி மெஜாரிட்டில இருக்குறதுனால யாரு கூட்டணியும் தேவையில்லை.தே மு தி க ஒரு புறம் தனியா களம் இறங்க மற்றொரு புறம் எல்லா கட்சியும் இந்த தேர்தல தனியாவே சந்திகுறதுனு முடிவு எடுதுருக்கு.அட நம்ம தி மு க நினச்ச மாதிரியே காங்குரச கழட்டி விட்டுச்சு. போன தேர்தல்ல முட்டி மூக்க ஓடைகாம இருந்த நம்ம பம்பரம்  இப்ப களம் இறங்கிருக்கு, பார்போம் பம்பரம் சுத்துதா இல்ல சாயுதாணு. ஒரு மாசத்துக்கு முன்னாடி நம்ம வி.சி தலைவரும் மாம்பழ தலைவரு ஒன்ன வலம் வந்தாங்க.வி.சி தலைவரு கூட நம்ம ரெண்டு பேரும் ஒன்னாயுடுவோம், அப்ப கண்டிப்பாக நம்ம பலம் இந்த நாட்டுக்கே தெரியும்னு வீர வசனம் எல்லாம் பேசுனாரே அவர யாராது கண்டுபிடிசீங்கன்னா கூட்டணிய பத்தி கேளுங்க.
நம்ப மாம்பழ டாக்டர் (மன்னிக்கணும் மருத்துவர் )அய்யா நேத்து பேப்பர்ல ஒரு பேட்டி கொடுத்திருக்காரு பாருங்க, படிச்ச உடனையே சிரிப்பு வந்துருச்சு.இனிமே  பா.ம.க யாரு கூடையும் கூட்டணி சேராது,சிங்கம் சிங்குலாதான் களம் இறங்கும் அப்படின்னு சொல்லிருகாறு.அவருக்கு எதுக்கு இந்த பேச்சு அடுத்த தேர்தல்ல கண்டிப்பா அந்த பக்கம் போக போறாரு, இதுல வீண் பேச்சு பேசி நம்மல வேற கடுப்பு ஏத்துராறு மை லார்ட் .இதுல இடை தேர்தல் வேற, திருச்சி பாவுங்க எத்தன நாள் தான் இந்த கஸ்டத்தைஎல்லாம் தாங்குமோ.கிருஸ்ணசாமினு ஒருத்தர் இருக்காரு அவர் கட்சில எனக்கு தெரிஞ்சு  ஆயிரம் பேராது இருப்பாங்களாங்குறதே சந்தேகம். ஏன்னா அவர் கட்சியில் அவர் தான் தலைவர் அவர் மட்டும்தான் எம் எல் ஏ. அவரும் ஆளும் கட்சிய திட்ட ஆரம்பிச்சுட்டாரு.சட்டசபை கூட்டம் நடக்குறப்ப முதல்வரை புகழ்ந்து தள்ளுனாரே இப்ப ஏன் இப்படி.
இப்ப தான் நம்ம முக்கியமான  இடத்துக்கே வந்துருக்கோம், தி.மு.க இந்த கட்சி இப்ப பாவபட்ட நிலமைல இருக்கு, தலைவர் பேச்சை கேக்குறதுக்கு ஆளு இல்ல, பிரச்சாரம் பண்றதுக்குகூடஆளு இல்ல அட இது பரவால இடைதேர்தல்ல வேட்பு மனு தாக்கல் பண்றதுக்கே வேட்பாளர் வரலைனா பாருங்களேன்,அய்யா கொஞ்சம் வேலையா உள்ள இருந்தார் அதான் வர முடியல்ல.நேத்து பருதி இளம்வழுதி அய்யாவும் கட்சி பதிவியே வேண்டாம்னு ஒதுங்கீட்டாறு. இன்னும் கொஞ்சம் நாள்ல மிச்ச மீதி இருக்குற மாஜிங்களையும் உள்ள தள்ளாம விட மாட்டோம்னு ஆளும் கட்சி திரியுது.உள்ளாட்சி தேர்தல் நடக்குறது நாட்டுக்கோ இல்ல நமக்கோ இல்லைங்க இந்த கட்சில இருக்குற எடுப்பு துடுப்பு எல்லாம் பொலைக்குற துக்கு தான்.அடுத்த தேர்தல்ல பார்ப்போம் எல்ல கட்சியும் இதே கொள்கையுடனும் வைராக்கியதுடனும் இருபாங்கலானு...    
 

வந்து போனவுங்க