Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Wednesday, July 27, 2011

என் அருகே வாராயோ


என் அருகே வாராயோ  
உன் வழியில் நான் விளையாட
விளையும் பயிர்கள் ஆயிரம்
நீ விளைக்கும் பயன்களும் ஆயிரம்
நதியின் மீது நீ நடனமாட
உன் இடையின் மீது நான் வதனமாட
நெஞ்சம் இங்கு ஊமையாகுதே
அதில் நஞ்சும் வந்து கலந்து சேறுதே
உன் விழிகள் பேசும் மொழிகள் யாவும் விண்மீன்கள் போல
கடலில் கலக்கும் நதிகள் யாவும் உன்னை[ப் போல
நிலவில் எழும் ஒளியை போல உன் பார்வை
அதில் மயங்கும் உன் மன்னவன் நான்.

Monday, July 18, 2011

இந்தியா ஓர் அலசல்

இந்தியா வளரும் நாடுகளில் ஒன்று.பெரும் பணக்காரர்களை கொண்ட நாடுகளில் ஒன்று,அகிம்சையை கடைபிடிக்கும் நாடுகளில் ஒன்று,ஜனநாயக நாடுகளில் ஒன்று,சுதந்திரம் அடைந்த நாடுகளில் ஒன்று.

உலக அரங்கில் இந்தியா என்று சொன்னால், எல்லோர்க்கும் மகாத்மா காந்தியும் அவரது அகிம்சை கொள்கைகளும் தான் நினைவிற்கு வரும். அப்படி பட்ட இந்த மண்ணில் இன்று நடப்பவை என்ன?

சுதந்திரம் நள்ளிரவில் பெற்றதால் தான் என்னவோ இன்றும் பல இந்தியர்கள் தங்கள் வாழ்வில் விடியல் என்ற ஒன்றை காணவேயில்லை. அதற்கு காரணம் யார் வெள்ளையர்களா?,பணக்காரர்களா?,அரசியல் வாதிகளா? இல்லை ஒட்டு மொத்த இந்தியர்களுமே தான் காரணம். ஆம் நல்லதோர் அரசை தேர்ந்தெடுக்க தவறியது நம் குற்றம். அவர்கள் நாட்டை அழிவுப் பாதையில் அழைத்து செல்கின்றனர் என்று தெரிந்தும் அமைதி காப்பது நம் குற்றம், பணத்திற்காக நம் உரிமையை விட்டுக்கொடுப்பது, எல்லா வற்றிருக்ககும் மேலாக சுயநலமாக சிந்திப்பதே மிகப் பெரிய குற்றம்.இப்படி பட்ட குற்றங்களினால் நம் தேசம் சந்தித்தவை எவை? இதோ, உங்களுக்காக ஒர் இந்தியா அலசல்

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளை கடந்த பிறகும் இந்தியர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படாதது ஏன்? அப்படி இங்கு என்னதான் நடக்கிறது. ஆட்சியாளர்கள் செய்யும் தவறினால் பாதிக்கபடுவது ஏழை மக்கள். ஆட்சியில் உள்ளவர்களும், அரசை வழி நடத்தி செல்பவர்களும் சுகமாக வாழ்கின்றனர்.

காலை முதல் மாலை வரை தன் இரத்தத்தை வேர்வையாக சிந்தி உழைக்கும் விவசாயியோ அல்லது கூலித் தொழிலாலியோ ஒரு வேலை உணவிற்கு குறைந்தது ரூ15 செலவிட வேண்டி இருக்கும் நிலையில் பாராளமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாக அமர்ந்திருப்போர்க்கு அதுவும் ஆயிரக்கணக்கில் சம்பளம் பெருவோர்க்கு மட்டும் குறைந்த விலையில் பாராளமன்ற உணவகத்தில் உணவு வழங்குகின்றனர். ஒரு வருடத்திற்கு ஒரு பாராளமன்ற(MP) உறுப்பினர்க்கு சம்பளம், வீடு, மின்சாரம், போக்குவரத்து செலவு, தொலைபேசி செலவு என மொத்தம் ரூ56,93,000 செலவாகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஊதிய உயர்வு கேட்டு அவர்கள் போராடியத் சரியா? பாராளமன்ற செயலாளர்களை விட தங்களுக்கு அதிகப்படியான ஊதியம் கோரியது நியாயமா? ஆசியன் வளர்ச்சி வங்கியின் அறிக்கை படி 82% இந்தியர்களின் மாத வருமானம் ரூ2,070 மட்டுமே. இந்தியாவில் வசிக்கின்ற நடுத்தர குடும்பங்களின் எண்ணீக்கை 26,70,00,000. இவர்களின்  எதிர் காலம் தான் என்ன?

     டிசம்பர், 6, 1992 எந்த ஒரு முஸ்லிமும் மறக்க முடியாத ஆண்டு. அன்றைய தினம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களை பின்பற்றும் மக்களும் ஒன்றாய் இருக்கும் தருனத்தில் எப்படி அது நிகழ்ந்தது. 1528 முதல் 1855 எறத்தால 320 ஆண்டுகள் பாபர் மசூதி தொடர்பாக எந்த ஒரு பிரச்சனையும் எழாத தருனத்தில் நம்மை ஆண்டு வந்த வெள்ளையர்கள் “Divide and Rule” கொள்கையை பின்பற்றியது தான் காரணம்.

   ஒவ்வொரு குடிமகனும் கட்டுபட வேண்டியது நீதிமன்றத்திற்கு மட்டுமே. ஆட்சியாளர் முதல் ஆண்டி வரை எவரையும் கேள்வி கேட்கும் உரிமை கொண்ட நீதிமன்றங்களின் இன்றைய நிலை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. உச்சநீதிமன்ற அறிவுரைகளை பின்பற்ற வேண்டியது மாநில அரசின் கடமை . அனால் கேரளா அரசு முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் அவற்றை பின்பற்றாதது ஏன்? இது நீதிமன்ற அவமதிபில்லையா? சீனா மற்றும் வளரும், வளர்ந்த நாடுகளின் நீதிமன்றங்கள் அனைத்தும் கணினி மயமாக்க  பட்ட நிலையில் இங்கு இருக்கும் சில நீதிமன்றங்களில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி ,இருக்கைகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருபது மிகவும் அவலநிலை! நீதிமன்றம் வழக்கை விரைவாகவும், நேர்மையாகவும் விசாரணை செய்ய வேண்டும். ஆனால் நம் நாட்டில் பல வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. உதாரணமாக 1984 டிச.3 போபால் யூனியன் கார்பைட்  விசா வாய்வு கசிவு நடந்த தினம், ஏறத்தாள 15,000திற்கும்  மேற்பட்ட மக்களை பலிகொண்ட சம்பவம் . இதன் விசாரணையை நடத்தி முடிக்க நம் நீதிமன்றத்திற்கு தேவைப்பட்டது 26 ஆண்டுகள். அந்த வழக்கில் ஓர் குற்றவாளியாக உள்ள ஆண்டர்சன் வெளிநாட்டில் சுகமாய் வாழ்ந்துகொண்டிருகிறார்.

     2008 நாடாளமன்ற தேர்தல் வாக்குறிதியில்  நமது பாரத பிரதமர் அவர்கள் அறிவித்ததில் ஒன்று “100 நாட்களுக்குள் வெளி நாடுகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணம் இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் “ என்று கூறினாரே அந்த வாக்குறிதி என்ன ஆனது. ஊழல் என்ற வார்த்தைக்கு உலக நாடுகள் இந்தியாவிடம் தான் அர்த்தம் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும் . ஒரு காலத்தில் ஆயிரம்,லட்சம் என்று நடந்து கொண்டிருந்த ஊழல் இன்று லட்ச கோடிகளை எட்டி சாதனை படைத்துள்ளது.இந்த ஊழல் பணமும், பணக்காரர்கள் வரி ஏய்ப்பு நடத்திய பணமும் தான் கருப்பு பணமாக சுவிஸ் வங்கியில் உள்ளது.இப்படி பட்ட சுழலில் இங்கு விலைவாசி உயர்வு நடுத்தர மக்களின் வாழ்வை கேள்விக் –குறியாக்கிவருகிறது. மக்கள் நொடிந்து விழும் நேரத்தில் இந்தியா பொருளாதாரம் உயர்ந்து என்ன பயன்.

     கல்வி இதுதான் இன்றைய புதிய வியாபாரம். கல்வி கற்று தொழில் செய்து உயர்ந்தவர் என்ற நிலைமாறி, கல்வியை தொழிலாக்கி உயர்ந்தவர்கள் பலர். இன்றைய சூழ்நிலையில் பணம் படைத்தவர்கள் மட்டுமே எந்தவித நெருக்கடியின்றி கல்வி கற்க முடியும். காரணம் தனியார் கல்வி நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணம். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகபடியான கட்டணத்தை பெறுகிறார்கள். ஏழை குடும்பங்களை அரசு பள்ளிகளில் மட்டுமே படிக்க முடியும். இந்தியாவில் இதுவரை 259 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இன்னும் சில ஆண்டுகளில் இது அதிகரிக்க கூடும். கல்வி கட்டணமும் அதிகரிக்கும். கல்வி நிறுவனங்களை எடுத்து நடத்தவேண்டிய அரசு இங்கு மதுபான கடைகளை நடத்திவருகிறது. கேத்தன் தேசாய் இவர் முன்னால் மருத்துவ கவுன்சில் தலைவர். இவர் முறைகேடாக சேர்த்த பணம் 80,000 கோடி,1500 கிலோ தங்கம். இது இவர் தன் குடும்பத்தினருக்காக சேர்த்த சொத்து. பல கல்லூரிகளில் இவருக்கு என்று தனி இட ஒதிக்கீடு உண்டு. இவரை போன்றோர்கள் தங்கள் பணியை தவறாக பயன்படுத்துவதால் தான் கல்வி நிறுவனங்கள் பகல் கொள்ளையில் ஈடுபடுகின்றன.

    உள்நாட்டு பாதுகாப்புப் பிரச்னையில் அரசு மெத்தனமாகவே இருக்கிறது. ஆதலால் தான் மும்பை தாக்குதல், கோவை குண்டுவெடிப்பு, நக்சல், மாவோயிஸ்ட் தாக்குதல்கள் போன்றவை நடைபெறுகின்றன. சமீபத்தில் மாவோயிஸ்ட் ஒரு மாவட்ட ஆட்சியரை கூட சுலபமாக கடத்திச் சென்றனர். பின்பு அவர் விடுவிக்கபட்டார். மேற்கு வங்கத்தில் அரசின் ஆப்பிரேசன் “கிரீன் ஹன்ட்”  என்ற இயற்கை வேட்டையை கைவிடக்கோரி ஒரு பக்கம் போராட்டம், தனி தெலுங்கான கேட்டு போராட்டம், என இந்த தேசம் பல இன்னல்களை சந்தித்து வருகிறது. இன்னோர் புறம் கொலை,கொள்ளை, ஆள்கடத்தல்,பாலியல் குற்றம், மோசடி என பலவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது போன்ற குற்றங்களை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்காமல், இந்தியா இறையாண்மைக்கு எதிராக பேசியவர் என நாம் தமிழர் இயக்கத் தலைவர் “சீமானுக்கு” சிறை, மனித உரிமை போராளியுமான, எழுத்தாளருமான “பினாயக் சென்” போன்றோர்க்கு சிறை(தற்போது விடுவிக்கபட்டார்). இது போன்ற கீழ்த்தரமான செயல்களை தொடர்ந்து செய்து வரும் அரசு என்றுதான் நேர்வழியில் நடக்குமோ?

     தீவிரவாதம் எந்த ஒரு நாடும் ஏற்று கொள்ளாதது. அனால் இன்றும் ஒரு சில நாடுகள் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது. தாவுத் இப்ராஹிம் தற்போது இன்டர்போலில் வான்டட் நம்பர் ஒன். 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி, நிழல் உலக தாதா என அடைமொழிகளை சுமந்து கொண்டு தற்போது சுதந்திரமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு நபர். அவன் இருக்கும் இடம் தெரிந்தும் இத்தனை வருடங்களாக அவனை பிடிக்கமுடியவில்லை. காரணம் தேசிய பாதுகாப்பை விட இங்குள்ளவர்களுக்கு வேற பல முக்கிய வேலைகள் உள்ளது என்று நினைக்கிறேன். அதனால் தான் இந்தியாவில் தொடர்ந்து குண்டுவெடிப்பு நடக்கிறது. மும்பை ரயில்நிலையம்,தாஜ் ஓட்டல், தற்போது 3 இடங்களில் நாளை எங்கோ? என்று தெரியவில்லை. உலகில் இராணுவ பலத்தில் இரண்டாவுது இடத்தில் இருந்தும் எந்த ஒரு தீவிரவாத தடுப்பு செயலிலும் இறங்காமல் உறங்கிக்கொண்டிருந்து என பயன். இரானவத்திலும் உழல் தலைவிரித்து  ஆடுகிறது. பீரங்கி,போர்விமானம் வாங்கியதில் உழல், மிலிட்டரி கேண்டீன் உழல், சவப்பெட்டி உழல், ஆயுதம் வாங்குவதிலும் உழல். இரண்டாம் தரம் ஆயுதத்தையே நாம் வாங்குகின்றோம்.

     லோக்பால் சட்டத்தை நடைமுறை படுத்துவதில் தாமதம் எதற்கு என்று எல்லோர்க்கும் தெரியும், ஒருவேளை இச்சட்டம் நடைமுறைபடுதபட்டால் தாமும் மாட்டிகொள்வோமோ என்று பயம். பிரதமரை விசாரணை வளையத்தில் கொண்டுவரவேண்டும் என்று ஒரு தரப்பும், வேண்டாம் என்று ஒரு தரப்பும் முட்டிகொள்கிறது. பிரதமராக உள்ளவர் நியாயமாக நடந்துகொண்டால் எதற்கு பயப்படவேண்டும். ஒருவேளை மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பு ஏற்றிருந்தாலும் இப்படி தான் இழுப்பறி நடக்கும்.அவர்களும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல.ஜனநாயக நாடு இப்படி நடந்துகொண்டிருப்பதை பார்த்தால் ஒருநாள் கண்டிப்பாக நம் நாட்டு மக்கள் புரட்சியில்  ஈடுபடுத்த முடியும் போல் இருக்கிறது.

     நீண்ட காலமாக எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கியா அல்லது கிரிகெட்டா  என்று. ஹாக்கிக்கு முக்கியத்துவம் தராமல், கிரிகெட் வீரர்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பரிசு, பணம்.இந்தியாவில் கால்பந்து அணி இருந்தும் நம்மால் ஒரு கால்பந்து உலககோப்பைக்கு கூட தகுதி பெற முடியவில்லை. காரணம் எல்லாவற்றிலும் அரசியல் விளையாடுகிறது. ஒலிம்பிக் விளையாட்டில் கடைசி வரிசையில் மட்டுமே இருக்கிறோம். இது போன்று மற்ற விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து பயிற்சி தரவேண்டும் . தற்போது உள்ள கிரிகெட் ஒரு விளையாட்டு அல்ல, அதுவும் ஒரு வியாபாரம் தான்.

     பல வருடங்களாக நாம் சொல்லிவருவது, நம் நாட்டின் வளத்தை எல்லாம் வெள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டனர். அதனால் தான் நாம் இன்னும் கஷ்டபடுகின்றோம். இதை சொல்வதற்கு நாம் வெட்க பட வேண்டும். ஏனெனில், அவர்கள் சென்ற பிறகு தான் நம் நாட்டில் உழல் குற்றமே அதிகரித்துள்ளது. அவர்கள் கட்டிய கட்டடங்கள்,அணைகள்,ரயில் பாதைகள் இன்னும் ரம்மியமாய் உள்ளது. அனால் நாம் கட்டும் கட்டிடம் இரண்டு ஆண்டுகளுக்குள் ஆட்டம் காண ஆரம்பிக்கின்றன. அவர்கள் பின்பற்றிய விதிமுறைகளை தான் நாம் இன்றும் பின்பற்றிவருகிறோம். இனியாது , அடுத்தவர்களை காரணம் காட்டாது வாழ்வோம்.

           வா தோழனே
           புகுந்து விளையாடுவோம்  
           சுதந்திர காற்று       
           சுவாசம் கொள்ளும்வரை

           அரசியல் மேடையில்
           அரங்கேற்றம் செய்வோம்
           எவரேனும் ஆழலாம்!
           எவரேனும் வாழலாம்!.

Saturday, July 09, 2011

அவள்


தனியே வந்தாளே!!
கனவினில் நுழைந்தாளே!!
இதயம் வென்றாளே!!
பாதம் படிந்ததே!!
பயணமும் தொடர்ந்ததே!!
என்னை எற்றிடு
தயக்கத்தை உடைத்திடு
இதையத்தில் இணைத்திடு
ஒரு சொல் சொல்லிடு
மௌனத்தை கலைத்திடு
ஓவியம் நீ, ஓவியன் நான்
கவிதை நீ, கவிஞன் நான்
கடலலையாய் வந்தாயே!!
இந்த கயவனை இழுத்தாயே!!

Tuesday, July 05, 2011

வேண்டும் விடுதலை


பொருத்தார் பூமியாழ்வார்
இனி பொருத்தும் பயனில்லை,பூமியும் ஆழவில்லை
வேண்டும் விடுதலை, வேண்டாம் இனபடுகொலை
காக்கை குருவியும் ஒன்றாய் சேர்ந்தது
மனிதற்கு மட்டும் ஏன் இந்த பிரிவினை
வேண்டாம் இந்த படுகொலை
நமக்கு வேண்டியது விடுதலை
யாவும் என் வசம் இல்லை
அதுவே எதிரியின் பேரலை
சிந்தினோம் இரத்தத்துளிகள் விடுதலைக்காக
சிந்தினோம் உயிர்த்துளியை மானத்துக்காக
தொடரும் எந்தன் போராட்டம்
வேண்டாம் இந்த ஏமாற்றம்.
 

வந்து போனவுங்க