Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Monday, December 19, 2011

தாகம்


மாலை வேளையில்
காதல் புரிகையில்
கண்கள் இருளையில்
இதழ்கள் சிவக்கையில்
மோகமும், தாகமும் கூடுதே!

இரவும் பகலும்
நம்மை வாட்டிடுதே!
காதல் வலியை
அது ஏற்றிடுதே!

பகலின் கொடுமை
நீங்கிடுமே!
இரவின் பசியை
அது தீர்த்திடுமே!

விடியும் தருணம்
துயல் கலைந்திடுமே!
காரணம் இன்றி
அது நடந்திடுமே!

காதல் இன்றி
வாழ்க்கை தொடங்கிடுமா!
ஊடல் இன்றி
அது முடிந்திடுமா!

போர்வைக்குள்ளே
ஒரு மயக்கம்,
உன் பார்வை பட்டாலே
அது தெரிக்கும்.

நதியில் வெள்ளம்
பெருகிடுதே,
சேரும் இடத்தில்
தொலைத்திடுதே.

இரவின் குளிரை
தனித்திடவா, நம்
இளமை பசியை
தீர்த்திடவா.

உறவின் அர்த்தம்
அது எதுவோ!
அர்த்தம் அறியவே
சேர்ந்திருப்போம்!

பூவில் வண்டு
தேன் பருக,
உன் இதழில்
முத்தம், நான் பருக..

கூந்தலை
நீ, கோதிடவே!
அதில் பூவை சூடி
நான், மகிழ்ந்திடவே!

வெட்கம் வந்து
நீ தலைகுனிய,
ஆடை சற்றே
அது நழுவ,
பாதி என்னில், நீயடி
உனது மடியில்,நானடி...

Friday, December 09, 2011

கலுழி


சொந்தம் ஒன்று  ஏதுமில்லை
சொல்லித் தெரிய ஆளுமில்லை
பந்தம் பாசம் ஏதுமில்லை
பணம் காசு அது கிட்டவில்லை

தினந்தோறும் பசியாற்றவில்லை
பசியாற்ற உணவுமில்லை
படுத்து உறங்க பாயுமில்லை
பாவி மகன் பிறந்தேன் எதற்கோ

திக்குமுக்கு ஆடிவிட்டேன்
தினந்தோறும் தேடிவிட்டேன்
வேலை ஏதும் கிட்டவில்லை
வெளியில் யாரும் மதிக்கவில்லை

நாளும் கிழமையும் ஓடிப்போச்சு
நட்டநடு ராதிரியாச்சு
பிச்சை எடுக்க மனமுமில்லை
பிழைக்க வேற வழியுமில்லை

சாவு என்னை தள்ளி வைக்குது
சமயம் பார்த்து அழைக்க நினைக்குது
ஊரு உலகம் வெறுக்குது
பாவி மனசு தவிக்குது

இதற்கு முடிவு கிடைக்குமோ
நாளும் கடந்து போகுமோ
என்று தான் விடியுமோ
நானும் இதற்கு காரணமோ....

Sunday, December 04, 2011

அன்பே


அன்பே,
இதயம் அழைக்குதடி
உள்ளுர நினைக்குதடி
கண்ணோடு இணையடி
என் கண்கள் நீயடி

இன்பம் பெருகுதடி
உன் பின்பம் தெரியுதடி
என் சொந்தம் நீயடி
அடுத்த தாயும் நீயடி

காலமும் கடந்ததடி
இன்னும் தாமதம் ஏனடி
நிலவும் சாய்ந்ததடி
கண்ணில் தடுமாற்றம் ஏனடி
அட, பொழுதும் நமக்குச் சொந்தமடி

என் பாடலின் வரிகள் நீயடி
அதற்கு அர்த்தமும் நீயடி
காதலுக்கு மொழியும் நீயடி
என் கனவுகளுக்கு காரணமும் நீயடி

தமிழில் செய்யுள் இல்லையடி
அழகே! உன்னை வர்ணிப்பதெப்படி

உன்னை கண்டாலே திகைக்குதடி
புலவனின் ஓலைசுவடிகளடி
உன் கூந்தலில் சூடடி
பூக்களும் குடியேறத் துடிக்குதடி

குளிரில் வெப்பம் நீயடி
கங்கையின் ஓடம் நானடி
நதியில் நீராடடி
கடலில் சேரலாம் நாமடி.
 

வந்து போனவுங்க