Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Thursday, December 29, 2011

எனக்கும் முதல்வர் நாற்காலி வேண்டும்...


பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில துணை பொது செயாளருமான வேல்முருகன் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடபட்டதாக கூறி பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
 
இதையடுத்து வேல்முருகன் தனது ஆதரவாளர்களை திரட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். பா.ம.க.வுக்கு மாற்றாக புதிய இயக்கத்தை உருவாக்கப்போவதாக கூறினார்.  
 



இந்த நிலையில் வேல்முருகன் நேற்று சேத்தியாதோப்பில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்,

      ’’நான் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளேன். ஜனவரி 15-ந் தேதி தை முதல்நாளில் இந்த கட்சி தொடங்கப்படும். கடசியின் பெயர், மற்றும் கொடி போன்றவை பின்னர் முடிவு செய்யப்படும்.

ஜனவரி 15-ந் தேதி மக்களை திரட்டி பொது கூட்டம் நடத்துவேன் அப்போது கட்சியின் பெயரை அறிவிப்பேன்.  

      இந்த கிராமத்தில் ஏராளமான வன்னியர்கள் உள்ளனர். இட ஒதுக்கீட்டுக்காக தீவிரமாக போராட்டம் நடத்தியவர்கள் எனவேதான் இந்த பகுதியை தேர்வு செய்து எனது கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளேன்.

      முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிறமுகர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு கட்சி பெயரை முடிவு செய்வேன். மேலும் தமிழக தேர்தல் அலுவலகம், இந்திய தேர்தல் கமிஷன் ஆகியவற்றிடமும் ஆலோசனை நடத்தி கட்சி பெயரை தேர்வு செய்வோம். இதற்காக விரைவில் டெல்லி சென்று தேர்தல் கமிஷனிடம் பேச இருக்கிறோம். 

      எங்கள் கட்சி தாய் தமிழர்களுக்காக போராடும் சாதி, மதம் சார்பற்ற கட்சியாக இருக்கும். எல்லாதரப்பு மக்களையும் கவரும் வகையில் கட்சியை நடத்துவோம். நாங்கள் கட்சி தொடங்கியதும் ஏராளமான பிரமுகர்களும், தொண்டர்களும் எங்கள் கட்சியில் சேர உள்ளனர்’’

அட கட்சிக்கு பேரே இன்னும் யோசிகளையா, சரி விடுங்க உங்க கட்சிக்கு கொலைவெறி முன்னேற்ற கழகம்னு வச்சிகோங்க. கட்சி ஆரம்பிச்ச உடனேயே நீங்க பெரிய ஆளாகீடுவீங்க. பா.ம.க கட்சியே இருக்குற இடம் தேரில இதுல இவரு வேற. அய்யய்யோ, ஒரு கடசீல இருந்து வெளிய வந்தா புது கட்சி ஆரம்பிக்கனுமா, அப்ப நம்ம சசிகலா அவர்களும் உடனே புது கட்சி ஆரம்பிபாங்கனு சொல்லுங்க. வேண்டும்னா நீங்க ரெண்டு பேரும் அடுத்த தேர்தல்ல கூட்டணி வச்சிக்ங்க. அப்ப சசிகலவோட கட்சி பேரு என்ன “மன்னார்குடி மாபியா கழகமா”.

5 comments:

  1. நி வருங்கலதுல நல்ல அரசியல்வாதி ஆகா போற அதாவது நா என்ன சொல்ல வர்ணன இந்த மாதிரி ஆட்களைஎல்லாம் விரட்டி விடலாம் விடு தோழா....

    ReplyDelete
  2. நகைச் சுவையாகத்தான் இருக்கிறது என்ன தோழர் செய்வது?

    ReplyDelete
  3. நகைச் சுவையாகத்தான் இருக்கிறது என்ன தோழர் செய்வது?

    ReplyDelete
  4. @Vimal Vநான் அரசியலுக்கு வந்தா உனக்கு தான் ஈரோடு மாவட்ட செயலாளர் பதவி...

    ReplyDelete
  5. “மன்னார்குடி மாபியா கழகமா”.
    // ithuthaan super..

    http://sakthistudycentre.blogspot.com/2011/12/blog-post_31.html

    ReplyDelete

 

வந்து போனவுங்க