Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Thursday, March 08, 2012

பணம்


இது நேற்றைய வாழ்வின் மூலதனம். இன்று, வாழ்வின் ஒரு பகுதி. நாளை, கொலைகாரன். உலகம் முழுவதும் உள்ள மக்கள் மொழி, இனம் ஆகியவற்றால் வேறுபட்டு உள்ளனர். ஆனால், அனைவரையும் ஒன்றாக ஆட்டி படைக்கும் சர்வ வல்லமை பொருந்தியது இந்த பணம். தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. இன்று பணத்திற்காக ஒருவரை ஒருவர் கொலை செய்து கொண்டு இருக்கிறோம்.

மேற்கு தொடர்ச்சி மலைகளையும், அரபிக், பசுபிக் கடல்களையும் தான் இன்னும் மனிதன் பணத்திற்காக விற்காமல் வைத்திருக்கும் சொத்து. நாட்டில் ஆங்காங்கே சிறு சிறு மலைகளை விலைக்கு வாங்கும் கும்பலும் இருக்கிறது.

உலகம் பொருளாதாரம் என்பது ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சி, வீழ்ச்சியை வைத்து தீர்மானிக்கபடுகிறது. சமீபத்தில், டாலர்கள் விலை சரிந்த போது, இது தான் சந்தர்ப்பம் என்று காத்துகொண்டிருந்த சீனா தனது என்(yen) நாணயத்தை உலக அளவில் டாலர்களுக்கு மாற்றாக கொண்டு வர பெரிதும் முயற்சி எடுத்தது. இப்படி, ஒவ்வொரு நாடும் தான் என்ற நினைப்புடன் செயல்பட்டால் நாட்டிலுள்ள நடுத்தர மக்களின் நிலைமை என்னவாகும்.

ஏற்கனவே, விலைவாசி உயர்வு கொஞ்சம் கொஞ்சமாக உயிர் கொலை செய்கிறது. இதில், அரசுக்கு செலுத்தும் வரிகள் வேறு பட்டியல் போட்டு நீள்கிறது.

ஒரு விவசாயி தான் விளைவிக்கும் பொருளுக்கு தான் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை. இடைத்தரகர்கள் நோகாமல் நோம்பி கும்பிடுகின்றனர். பசியால் விவசாயி செத்தான் என்ற நிலைமை ஏற்படுவதற்கு காரணமும் இந்த பணம் தான். மாதம் 20,000  சம்பாதிக்கும் ஒருவரால் தன் குடும்பத்தை நடத்த கடன் வாங்கி சமாளிக்க வேண்டியுள்ளது. அப்படியானால், மாதம் மூவாயிரம் சம்பாதிப்போரின் நிலைமை?

ஒரு கும்பல் முகமுடி அணிந்து துப்பாக்கி வைத்து மிரட்டி கொள்ளை அடிக்கிறது. மற்றொரு கும்பல் கதர் ஆடை உடுத்தி, ஜனநாயகம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறது. பத்தாயிரம் சம்பாதிப்பவருக்கோ ஒரு லட்சம் வேண்டும் என்ற ஆசை. கோடியில் சம்பாதிப்பவருக்கோ எத்தனை பேர் பசியால் செத்தாலும் பரவாயில்லை கொடிகளை தாண்டி சம்பாதிக்கும் கேடியாய் இருக்க வேண்டும் என்ற எண்ணம். ஆசை, மனிதனை ஆட்டிபடைக்கும் சைத்தான். பணம் வெறும் சிறு துடுப்புதான்.  

இப்படி இந்த பணம் பலர் வாழ்வில் விளையாடுவது மட்டுமல்லாது, மனநிம்மதியையும் கெடுகின்றது. எத்தனையோ, வீடுகளில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்று விடுகின்றனர். வீட்டில் பிள்ளைகள் மட்டும் தனியாக வளர்வதால், பலர் வழிமாறுகின்றனர். பல பிள்ளைகள் பெற்றோரின் பாசத்திற்காக ஏங்கி தவிக்கின்றனர். எல்லாம் இருந்து அனாதையாக இருப்போரின் எண்ணிக்கையே அதிகம்.

சமீபத்தில் நடந்த வங்கி கொள்ளையின் விலை ஐந்து உயிர்கள். ஐவரும் வாலிபர்கள், எப்படியாது விரைவில் உயர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணம். வழிப்பறி, பிக்பாக்கெட் என்று எல்லா வழியிலும் பணத்திற்காக உயிரை கொடுத்து உயிர் எடுக்கின்றனர்.

இன்று எத்தனையோ வீடுகளில் பணத்திற்காக தினம் ஒரு உலக போர் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி கணவன் மனைவி சண்டையிட்டு பிள்ளைகளின் எதிர்காலத்தில் திருமணம் என்றால் அச்சம் உருவாகும் நிலைமையை ஏற்படுத்துகின்றனர். இருந்தால் பணக்காரனாக இருக்க வேண்டும், இல்லையெனில் சாலைகளில் வசிபவர்களுள் ஒருவராக இருக்க வேண்டும். நடுத்தரமக்களாக இருக்க கூடாது. அதை விட ஒரு கொடுமை தேவையில்லை. 

நான் பத்தாவது படித்து கொண்டிருக்கும் போது நண்பர்கள் எல்லாம் ஒன்றாக ஊர் சுற்றி திரியும் சமயம் மனநலம் பாதித்த ஒருவரை அடிகடி காண்போம். அப்போது, அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் மக்களிடம் அவர் 50 பைசா தானமாக கேட்பார். ஒரு சிலர் கொடுப்பர். யாராவது அதற்க்கு அதிகமாக கொடுத்தால் அவரிடம் சில்லறை இருந்தால் மீதியை கொடுப்பார். இல்லையெனில் வாங்கவே மாட்டார். இதை நாங்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. எப்போதும் போல நாங்கள் எங்கள் வேலையை( சைட்டு  அடிப்பது) சரியாக செய்து வந்தோம். ஒரு நாள் இரவு நானும் எனது நண்பனும் பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டிருந்தோம் (பேருந்திற்காக, வேறு யாருக்கும் இல்லை). அன்று மனநலம் பாதித்தவர் என்று நாங்கள் நினைத்த நபர் ஒருவரிடம் ஆங்கிலத்தில் சரளமாக பெசிகொண்டிருந்தார். அதை பார்த்தவுடன் எங்களுக்கு ஆச்சரியம். அது பற்றி அருகில் இருந்த பூக்கடைகாரரிடம் கேட்டோம். அவர் கூறியது, மனநலம் பாதித்த அந்த நபர் வெளி நாட்டில் படித்து இங்கு வசதியாய் வாழ்ந்திருக்கிறார். சொந்தம் என்று யாரும் இல்லாததால் அவராகவே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அது தான் அவர் செய்த தவறு. அந்த பெண்மணி அவரின் பணத்திற்காகவே அவரை திருமணம்  செய்திருக்கிறாள். அவரை மயக்கி சொத்தை அபகரித்து வெளியே அனுப்பிவிட்டு, வேறு ஒருவரை அவள் திருமணம் செய்துகொண்டாள். அதிலிருந்து தான் அவர் இப்படி ஆனதாக கூறினார்.

இப்படி பணத்திற்காக ஒருவருக்கு ஒருவர் துரோகம் செய்துதான் வாழவேண்டுமா? என்ன உலகமடா இது.  

Monday, March 05, 2012

இலக்கு

உன் இலக்கினை நிற்னயித்திடு
அதற்கு ஓர் வழி வகுத்திடு
தனியென்று நினைத்துவிட்டால்
துனை ஒன்றை தேடிக்கொள்
துனையிடம் தோழமையாக இரு
தோளினிலே துணிவிருந்தால்
தோல்வி என்றும் நெறுங்காது
இலக்கினை அடைந்தாலும்
இயல்பாக வாழ்ந்திடு
வெற்றியியை இலாபமாய் எண்ணாமல்
கூலியாய் நினைத்திடு
உன் வழி வருவோர்க்கு
வழிகாட்டியாய் வாழ்ந்திடு
 

வந்து போனவுங்க