Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Wednesday, May 30, 2012

கிரிக்கெட் ஜாலம்


மேற்கு வங்காளம் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரை வென்றது அந்த மாநிலத்தையே திருவிழா கொண்டாட செய்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் அசைக்க முடியாத சக்தியாகி விட்டது. தேசிய விளையாட்டை மறக்கும் அளவிற்கு கிரிக்கெட்டின் ஆதிக்கம் இங்கே கால் பதித்துவிட்டது. சிறுவர்கள் விளையாட சென்றால் கூட கிரிக்கெட் தான் அவர்களுக்கு வருகிறது. எந்த குழந்தையும், இளைஞனும் கால்பந்திலோ, ஹாக்கியிலோ அல்லது வேறு விளையாட்டிலோ தங்கள் ஆர்வத்தை காட்ட மறுக்கின்றனர்.
இந்தியாவில் கிரிக்கெட் என்பது பணம் சம்பாதிக்கும் தொழிலே  தவிர, விளையாட்டல்ல. காரணம் கிரிக்கெட்டை ஏற்று நடத்தும் தனியார் சம்மேளனம். அவர்கள் அதிலே பணம், அரசியல் போன்றவற்றை மட்டுமே புகுத்தியுள்ளனர். பணத்தை வாரி இறக்கும் விளையாட்டு, பணத்தை சம்பாதிக்கும் விளையாட்டு, எல்லாவற்றிற்கும் மேலாக மற்ற விளையாட்டை வளர விடாத விளையாட்டு.
அதிலும் இந்த  ஐ.பி.எல் வந்த பிறகு மக்கள் தங்கள் வேலையையும் மறந்துவிட்டனர். இன்றைய காலகட்டத்தில் எங்கும் கிரிக்கெட், எதிலும் கிரிக்கெட் என்று ஆனா பிறகு கிரிக்கெட்டை தவிர்ப்பது என்பது மிகவும் கடினம். இந்த ஐ.பி.எல் மூலம் பல கருப்பு பணம் நாட்டில் புழக்கத்தில் உள்ளது என்று பல செய்திகள் வந்தாலும் அரசும் மக்களும் இதை ஒரு பொருட்டாவே எடுத்துக்கொள்ளவில்லை. ஐ.பி.எல் நடக்கும் காலகட்டங்களில் நாட்டில் பல வர்த்தகங்களும் கூட ஸ்தம்பித்துள்ளது. மாணவர்கள் தேர்வு பாதித்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக நேரம் வீணடிக்கபடுகிறது.
நேற்று கொல்கத்தாவில் நடந்த கூத்தை பார்த்தல் நாட்டின் நிலைமை இவ்வளவு கேலிக்கூத்தாக உள்ளதே என்று மனம் வருந்துகிறது. கொல்கத்தா ஐ.பி.எல் தொடரை வென்றது ஏதோ குஜராத்தை போன்று முதல் மாநிலமாக வந்துவிட்டதாக எண்ணி கொண்டாடினர். முதல்வர் மம்தாவும் ஏதோ ராணுவ வீரர்களை கவுரவ படுத்துவதாக எண்ணி கிரிக்கெட் வீரர்களுடன் சேர்ந்து அவரும் கூத்து அடித்துள்ளார். ஏற்கனவே பண மூட்டைகளுடன் வந்து இறங்கிய அவர்களை  தங்க சங்கிலி அணிவித்து வரவேர்துள்ளார். இது வரை எத்தனையோ வங்காள ராணுவ வீரர்கள் எல்லையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் ஆனால் அவர்களுக்கு கிடைத்த மரியாதை என்ன?
நான் தமிழன் சென்னை ஐ.பி.எல் தொடரை இழந்த வருத்தத்தில் இதை எழுதுகிறேன் என்று வங்காளிகளும் மற்றவர்களும் எண்ணினால் அதற்க்கு உங்கள் பார்வையே காரணம். நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் “சக்தே இந்தியா” பாடல் “சக்தே பெங்காலி” என்று ஒழிக்கப்பட்டது. அவர்கள் தான்  இதற்க்கு காரணம். ஒரு வேலை சென்னை ஐ.பி.எல் தொடரை கைபற்றியிருந்தால் இதே போன்று இங்கும் இவ்வளவு கேலி கூத்துகள் அரங்கேறி இருக்கலாம். ஆனால் ஜெயலலிதா இது போன்று கொண்டாடங்களில் ஈடுபட்டிருக்க மாட்டார். 

Tuesday, May 08, 2012

அமெரிக்காவின் ஆதிக்கம்


ஒருத்தன் கிட்ட ஒண்ணுமே இல்லைனாலும் எல்லாம் இருக்குற மாதிரி சீன் போடுற நாடுகள் வரிசைல அமெரிக்காவுக்குத்தான் முதலிடம். எப்ப எவன் வீட்ல சண்டை வரும் பஞ்சாயத்துக்கு நாம உள்ள போலாம்னு அடுத்தவன் டவுசர பாக்குறதே அமெரிக்காவுக்கு பொழப்பா போச்சு. உலகத்துல இருக்குற எல்லா நாடுகள் உள்விவகாரங்கள்ளையும் தலகிட்டு அவுங்களுக்கே புத்திமதி சொல்ல வேண்டியது. மத்த நாடுகள் மாதிரி ரஷ்யா மட்டும் சும்மா இருக்காம பதிலுக்கு எல்லாம் எங்களுக்கு தெரியும் நீங்க மூடுங்கனு சொல்லி பல்பு குடுக்குறாங்க.
இப்ப கூட ஹிலாரி கிளின்டன் இந்தியாவுக்கு வந்தமா போனமானு  இல்லாம நமக்கே புத்திமதி சொல்லிட்டு போறாங்க. இந்தியா இரான்ல எண்ணெய் இறக்குமதி செய்றத குறைக்க வேண்டுமாம். இரான் அணு ஆயுதம் தயாரிக்குறாங்க, அது மத்த நாடுகளுக்கு அச்சத்தை எற்படுதிள்ளதுனு ஒரு காரணத்த சொல்றாங்க. ஏன், அமெரிக்கா கிட்ட அணு ஆயுதம் இல்லையா என்ன?நீங்க மட்டும் அணு ஆயுதத்துல பெரிய நாடா இருக்கணும் மத்தவன் எல்லாம் கை கட்டி வாய் பொதி இருக்கணுமா? இந்தியாவும் தான் அக்னி ஏவுகனையை சோதனை செஞ்சிது. அப்ப எங்கடா போனீங்க? உங்களுக்கு என்ன இராக்க அழிச்சு எல்லா எண்ணையையும் கொள்ளை அடிச்சிடீங்க. இங்க நாங்க பெட்ரோலுக்கு சிங்கி அடிக்கணுமா? அதோட நிருத்தவேண்டியதுதான அதுஎன்ன இந்தியால இருந்துட்டு சீனா, ஜப்பான், இஸ்ரேலுக்கு புத்திமதி சொல்றது.
இஸ்ரேல் 30 ஆண்டுகளாக தங்களை காபாத்திக்குறாங்க, பின்னாளில் இரான் தனது அணு ஆயுதத்தை பயன் படுத்தி தாக்கினால் இஸ்ரேலின் நிலைமை என்ன ஆகும் என்று கேட்கிறது. இது இஸ்ரேலுக்கு எச்சரிக்கையா இல்லை இரானுக்கு ஐடியாவா?. பாலஸ்தீனதுக்கு ஆயுதாத்தை விற்று இஸ்ரேல் மீது போர் தொடுத்து உங்க கஜானாவ நிரப்பியாச்சு இப்ப ஊருக்கு நல்லவன் வேஷம் போடுறது.
ரஷ்யாவ எப்டியாது அளிச்சிர வேண்டும்னு அமெரிக்காவுக்கு நீண்ட கால எண்ணம். நேட்டோ படைகள்ள முன்னாள் சோவித் நாடுகளையும் இப்போது இணைத்து ஏவுகளை ஆராய்ச்சியில் அமெரிக்கா இறங்கி உள்ளது. இதுக்கு ரஷ்யா தகுந்த பதிலடி கொடுத்து மிரட்டி உள்ளது. நேட்டோ படையின் ஏவுகணை தளத்தையே அளித்து விடுவோம் என்று எச்சரித்துள்ளது.
எங்க தில்லிருந்தா ரஷ்யாகிட்ட மோதி நீ பெரிய பருப்புன்னு நிருபி பார்க்கலாம்?
 

வந்து போனவுங்க