Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Friday, August 31, 2012

முகமூடி - திரை விமர்சனம்



ஜீவா, நரேன், பூஜா ஹெட்கே, நாசர் ஆகியோர் நடித்த இத்திரைப்படத்தை மிஸ்கின் இயக்கியுள்ளார். யூ டிவி நிறுவனம் தயாரித்துள்ளது.
Martial Arts கலையை பயன்படுத்தி எடுத்துள்ளதாக பெரியஅளவில் விளம்பரம் செய்து வந்தார் இயக்குனர் மிஸ்கின். அதுமட்டுமல்லாது சூப்பர் ஹீரோ திரைப்படம் என்று வேறு சகட்டு மேனிக்கு அல்லிதேளித்தார். கடைசியில் படம் பே பே. டைட்டில் கார்டு போடும் முன்பே இத்திரைப்படம் ப்ருஸ் லீக்கு சமர்ப்பணம் என்று குறிபிட்டு இருந்தார். இந்த மேட்டர் மட்டும் அவருக்கு தெரிஞ்சிருந்துது மவனே உங்கள கைமா பண்ணாம விட்டுருக்கமாட்டார்.
கதை பழைய தேய்த்த பாத்திரம் தான். முகமூடி அணிந்து ஒரு கும்பல் நகரில் கொள்ளை அடித்து கொண்டிருக்கிறது. இதை கண்டுபிடிக்க நாசர் நியமிக்கப்பட்டார். அவர் எப்படி அந்த கும்பலை எப்படி அளிக்கிறார் என்பது தான் கதை(ஒரு எழவும் செய்யலை என்பது தனிக்கதை).
ஜீவா காமெடிக்காக போடும் முகமூடி கேரக்டர் ஒரு வழியாக கதைக்குள் நுழைக்கபடுகிறது. நரேன் கும்பலுடன் எப்படி மோதுகிறார் என்பது தான் மீதி கதை(கதையே இல்லை என்பது தனிக்கதை.) கதையின் நாயகியை பாடலுக்காகவே சிலர் வைப்பார்கள். இதில் எதற்கு என்றே தெரியவில்லை.
படம் ஆரம்பமாகும் முதல் நிமிடமே நம்மை இது மிஸ்கின் படமா என்று யோசிக்க வைத்துவிடும். அந்த அளவுக்கு சொதப்பலோ சொதப்பல். படம் போட்ட 20 நிமிடத்தில் இரண்டு பாடல். தனியாக கேட்பதற்கு இரண்டும் ஓகே தான். ஆனால், திரையில் சகிக்கள. ஒரு பீலிங்கும் வரலை.
ஹீரோயின் என்ட்ரி செம காமெடி.அரங்கமே தலையில் கைவைத்து தேய்க்க ஆரம்பித்துவிட்டது. அஞ்சாதே படத்தில் ஒரு கையுடன் நரேன் நண்பராக வரும் நபர இதிலும் வருகிறார். இது போக ரட்சகன் படத்தில் நாயகியின் தந்தையாக வரும் நபரும் வருகிறார். எல்லாம் காமெடி பீஸ்.
படத்தின் இசையமைப்பாளர் கே என்ற கிருஷ்ணமூர்த்தி. பாடல்கள் அனைத்தும் நன்று(ஒன்லி ஆடியோ). அனால், பின்னணி இசை சப்பா முடியல. சும்மா வயொளின் இருக்குது என்பதற்காக ஒரே அடியாக தேய் தேய் என்று தேய்த்துவிட்டார். காட்சிக்கு தகுந்தாற்போல் இசை இல்லை.
சூப்பர் ஹீரோ என்றாலே ஒரு உயரமான இடத்தில் நிற்கவைத்து கேமரா ஆங்கிளை கீழே இருந்து சுத்தி சுத்தி காட்டுவது என்பது எழுதப்படாத நியதி ஆகிவிட்டது. படத்தை நாம் கிண்டல் அடிக்கவேண்டியது இல்லை, நரேனே சூப்பர் மேன், பேட் மேன், அயன் மேன், முகமூடி என்று அடிக்கடி நக்கல் அடிப்பார்.
நச்சுன்னு நாலு:
1.       நச்சுன்னு நாலு சொல்ற அளவுக்கு படத்தில் ஒரு வசனம் கூட இல்லாமல் இருப்பதால், மிச்ச மீதி சுமார இருக்கும் மூன்று வசனங்கள் இதோ.
2.       என்னால முடியல, அப்படின்னா வா டாக்டர் கிட்ட போலாம். தாத்தா, அந்த முடியல இல்லை, இது வேற முடியல.
3.       எனக்கு போலீஸ் வாடைன்னா பிடிக்காது. ஆனா, சாவு வாசனை ரொம்ப பிடிக்கும்.
4.       அவள பார்க்கணும், பார்த்து? கன்னத்தில அறையனும், அவ கமிஸ்னர் பொண்ணு டா. அப்ப, ரெண்டு கன்னத்துளையும் அறையனும்.
கொசுறு:
மிஸ்கின் தனது பாணியை விட்டு மாறி வேறு ஏதோ பாதையில் செல்கிறார். அதுக்கு அவர் சரிபட்டு வரமாட்டார். பேசாம கோட்டர் அடிச்சிட்டு குப்புற படுத்து தூங்குங்க.

Friday, August 24, 2012

The Expendables -2



முந்தய பாகத்தின் வெற்றியை உறுதி செய்யும் பொருட்டு இந்த பாகம் வெளிவந்துள்ளது. Sylvester Stallone ஸ்க்ரீன் ப்ளே அமைத்த இந்த களத்தில் Arnold, Jet li, chris hemsworth, Bruce willis, van damm, Jasan Stathom  என ஒரு பிரபல பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இது எல்லாம் Sylvester Stallone என்ற ஒற்றை மனிதரின் சாமர்த்தியம் தான்.
கதை என்று பார்த்தல் வழக்கம் போல வரும் பழிவாங்கும் கதை தான். ஆனால், அதை கொஞ்சம் கீட போர் அடிக்காத வாறு எடுத்துள்ளனர். முந்தய பாகத்தில் இடம்பெற்றதை போல இதிலும் பெரிய பெரிய துப்பாக்கிகள் தான் எல்லாற்றையும் விட பெரிய ஹீரோ. வழக்கம் போல bruce willis  ஒரு வேலையை கொடுக்கிறார் அதை செய்யும்போது chris hemsworthதை வில்லன் கொன்று விடுகிறார். பின்னர் வில்லனை பலி வாங்குவதே கதை. சுருக்கமாய் சொன்னாலும் இழுத்து சொன்னாலும் அவ்வளவுதான்.
அதிகம் எதிர்பார்த்த ஜெட்லியின் சண்டை இதில் இல்லை. முதல் காட்சியில் வரும் ஒரு சண்டையுடன் அவர் காணாமல் போய்விட்டார். எதிர்பார்க்காத விதத்தில் Arnold டிற்கு ஒரு என்ட்ரி. நேபாளில் ஆரம்பமாகும் கதை இறுதி காட்சியில் பிரான்ஸ்சில் முடிவடைகிறது. இப்படத்தின் வசனகர்த்த மிகவும் நகைச்சுவை உணர்வு உள்ளவர் போல. எல்லா இடங்களிலும் நையாண்டியை புகுர்த்தியுள்ளார்.\
வில்லனாக வரும் வான் டாம் பற்றி யாருக்கும் சொல்ல தேவையில்லை. இவர் ஒரு மா பெரும் திறமைசாலி என்பது இவர் கிக் பாக்ஸ்ஸிங்கிள் வாங்கிய மெடல்களின் எண்ணிக்கையே இவரை காற்றும். 19 முறை போட்டியில் கலந்து கொண்டு 18 முறை சாம்பியன் பட்டம் வென்றவர். இதில் வில்லனாக சிறப்பாக நடித்துள்ளார்.
முதல் பாகங்களில் வருவது போல அல்லாமல் அர்னால்டும், ப்ருஸ் வில்லிஸ்சும் இதில் ஒன்றாக இணைந்து கடைசியிலும் வருகின்றனர். மூன்று சூப்பர் ஸ்டார்களும் இணைந்தால் எப்படி இருக்கும் என்பதை திரைஅரங்கில் ரசிகர்களின் கைதட்டலில் தெரிகிறது.


நச்சுனு நாலு:
1.    பிரீன்ட்லியா ஒரு அட்வைஸ், தயவு செஞ்சு கொஞ்சமாது சிரி. மூஞ்சி பாக்க சகிக்கல.
2.    இங்க ஏதோ பார்ட்டி நடக்குதுனு சொன்னாங்க, யாருப்ப பார்ட்டி நடத்துறது.ஹ்ம்ம் நான் தான் வந்து துப்பாக்கியோட கலந்துக்கோ.
3.    இங்க ஆளுங்க நிறையா இருக்காங்க ஒரு பீரங்கி இருந்தா சமாளிசிருவேன். இருக்கு ஆனா, அவுங்ககிட்ட.
4.    அர்னால்ட்- எனக்கும் ஒரு துப்பாக்கி கொடு டா. கொஞ்சம் பெருசா!! டெர்ரி கிரேவ்-யோவ், வயசான காலத்துல கம்முனு இருயா. ஜாசன் ஸ்டாதம்-போதும் உங்க அண்ணன் தம்பி பாசத்தை ஒரே அடியா கொட்டி தீர்துடாத.

கொசுறு:
முழுக்க முழுக்க துப்பாக்கிகளோடு வரும் படம் என்பதால் நல்ல சவுண்ட் சிஸ்டம் இருக்கும் அரங்கில் சென்று பாருங்கள். எனக்கு உள்ளே, இடி இடித்தது போல இருந்தது. நம்ம ஊரில் இது லேட் ரிலீஸ். 19.08.2012  அன்றே பல நாடுகளில் வெளியாகிவிட்டது.
 

வந்து போனவுங்க