Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Wednesday, October 24, 2012

ரைம்ஸ் வரலாறு:

Rain Rain go away :: எலிஸபத் அரசி காலத்து பாடல் இது
1533-1603 காலகட்டத்தில் ஸ்பெயினும் இங்கிலாந்தும் எப்பொழுதும் சண்டைக்கோழிகள். 1588 வாக்கில் ஸ்பெயின் தனது கப்பற்படையோடு இங்கிலாந்துடன் சண்டைக்கு சென்றது. ட்யூக் ஆஃப் மெடினா, செடோனியா தலைமை வகித்த இப்படையில் 130க்கும் மேற்பட்ட பெரிய போர்க்கப்பல்கள் இருந்தன. அட்மிரல் லார்டு ஹோவர்டு தலைமை வகித்த ஆங்கிலப்படையிடம் இருந்ததோ 34 சிறிய போர்க்கப்பல்களும் 163 வணிக கப்பல்களும்.. ஆனால் ஆச்சரியமாக ஸ்பெயின் படுதோல்வி அடைந்தது.. இந்த தோல்விக்கு ஆங்கிலப்படையின் சிறிய கப்பல்களின் விரைந்து தாக்கும் திறன் மட்டுமல்ல, சூறாவளி மழையும் முக்கிய காரணம்.. சூறாவளியில் ஸ்பெயினின் பெரிய கப்பல்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை... எனவே தான்

Rain rain go away,
Come again another day.
We want to go outside and play
Come again some other day.

Jack and Jill :: பதினாறாம் லூயி சிரச்சேதம் செய்யப்பட்ட காலகட்டத்திய பாடல் இது

ப்ரெஞ்சு அரச பரம்பரையில் வந்த பதினாறாம் லூயி அவரது முன்னோடிகளோடு ஒப்பிடும் போது வலிவற்றவராக, அறிவு குறைந்தவராக, எளிதில் திசை திருப்பப்படுபவராக கருதப்பட்டார். 1770ல் மேரி ஆண்டோனெடை கல்யாணம் செய்த பின் மன்னரின் முடிவுகளில் மேரியின் ஆதிக்கம் மேலொங்கி இருந்தது (அப்பவே இப்படித்தானா?) (Jack and Jill)

இவர்கள் அரசனாகவும் அரசியாகவும் 1774ல் ஆனார்கள் (went up the hill)

அந்த காலகட்டத்தில் ப்ரான்ஸில் கடுமையான நிதி நெருக்கடி. ஆகவே மன்னர் கடுமையாக வரிவிதித்தார். அதனால் மன்னரின் மேல் மக்களுக்கு பற்று குறைந்து போராட தயாரானார்கள். மக்களை ஒடுக்குவதற்காக மன்னர் மேலும் வரி விதித்து நிதி மற்றும் சட்டத்தால் கசக்கி பிழிய ஆரம்பித்தார் (To fetch a pail of water)

ப்ரெஞ்சு மத்திய தர வர்க்கத்தால் இதை தாக்கு பிடிக்க முடியவில்லை. 1789ல் பரீஷிய நகர மக்கள் ஒன்று சேர்ந்து கோட்டையை முற்றுகை இட்டு மன்னரையும் அரச குடும்பத்தினரையும் சிறை பிடித்தார்கள் (Jack fell down)

1792ல் ப்ரான்ஸ் குடியாட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு மன்னர் மேல் வழக்கு தொடரப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்டது. பாரிஸில் 1793 ஜனவரியில் கில்லட்டின் கொண்டு மன்னர் சிரச்சேதம் செய்யப்பட்டார் (and broke his crown) 


அரசி மேரி அவர் மகனிடமிருந்து பிரிக்கப்பட்டு தீர்ப்பாணையத்திற்கு அனுப்பப்பட்டார். அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பாரிஸில் அக்டோபர் 1793ல் சிரச்சேதம் செய்யப்பட்டார் (And Jill came (தலை உருண்டது) tumbling after)

Jack and Jill went up the hill
To fetch a pail of water;
Jack fell down
and broke his crown,
And Jill came tumbling after.

Ring around the rosies :: பொதுவாக சிறுவர்கள் கை கோர்த்துக்கொண்டு இப்பாடலை பாடியபடியே வட்டமாக சுற்றி வந்து கடைசி வரியில் கீழே விழுவார்கள்

1600ல் கடுமையான ப்ளேக் காய்ச்சலால் அவதிப்பட்டது இங்கிலாந்து. ப்ளேக்கின் ஆரம்ப அறிகுறி தோலில் ரோஸ் நிறத்தில் வரும் சொறி. (Ring around the rosies)

அப்போது எலிகளால் காற்றின் மூலம் ப்ளேக் பரவுவதை டாக்டர்கள் அறிந்திருக்கவில்லை. பிணங்களின் துர்நாற்றத்திலிருந்துதான் ப்ளேக் பரவுவதாக அவர்கள் நினைத்தனர்.. ஆகவே வேர்கள், மூலிகை, பூக்களின் இதழ் போன்றவற்றை கொண்டு அவர்கள் முகமூடி ;) அணிந்தனர் (A pocket full of posies)

ப்ளேக்கின் அடுத்த அறிகுறி தும்மல் (A-tishoo! A-tishoo!) > பிற்காலத்து பாடல்கள் தும்மலை மாற்றி ashes என்று பாடப்பட்டது. அது எரிக்கும் போது வரும் சாம்பலை குறிக்கும் < குழந்தைகள் கடைசி வரி பாடும் பொழுது அவர்களை அறியாமலேயே வீழ்ந்த அவர்களின் முன்னோரை நினைவு கூறுகின்றனர் (We all fall down) 


Ring around the rosies, 
A pocket full of posies, 
A-tishoo! 
A-tishoo! 
We all fall down. 

Humpty Dumpty sat on a wall :: ஹம்டி டம்டி என்பது கூன் விழுந்த ராஜாவான மூன்றாவது ரிச்சர்டை குறிக்கும்

அவர் wall என்ற பெயரில் ஒரு குதிரை வைத்திருந்தார் (Humpty Dumpty sat on a wall ஷேக்ஸ்பியர் கவிதையான ரிச்சர்டு III லும் இது வரும்)

போஸ்வொர்த் போரில் அவர் குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டார் ( Humpty Dumpty had a great fall)

அவரின் எதிரிகள் அவரை சூழ்ந்து அவரை அங்கேயே கண்ட துண்டமாக வெட்டிப்போட்டு விட்டார்கள் (Couldn’t put Humpty together again)

Humpty Dumpty sat on a wall,
Humpty Dumpty had a great fall.
All the king’s horses,
And all the king’s men,
Couldn’t put Humptytogether again.

Baa baa, Black Sheep :: கடுமையான வரிவிதிப்பை சொல்லும் பாடல்

உழைப்பில் மூன்றில் ஒரு பங்கு ராஜாவுக்கு (மாஸ்டர்), ஒரு பங்கு ட்யூக் டச்சஸ் போன்ற உயர்குடி மக்களுக்கு (dame), கடைசி ஒரு பங்குதான் உழைப்பாளிக்கு (little boy) என்பதை சொல்லும் பாடல்.

Baa baa, Black Sheep,
Have you any wool?
Yes, marry, have I,Three bags full:
One for my master,
One for my dame,
And one for the little boy
That lives in the lane!

****

 மழை சேகரிப்பு காலகட்டத்தில் இருக்கும் நாம் ஏன் இன்னமும் rain rain go away என்று பாடிக்கொண்டிருக்கிறோம் என்று எனக்கும் ரொம்ப நாளாக ஒரு கேள்வி உண்டு... ஒரு நாள் அலுவலகத்தில் இது பற்றி கேட்ட பொழுது ஸ்பெயினை பிறப்பிடமாக கொண்ட சக ஊழியர் "ரெயின் ரெயின்" பின்னால் ஒரு அரச பரம்பரை கதை உண்டு என்ற செய்தியை சொன்னார். பின்பு வலையாராய்ச்சியில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் இந்த பதிவு. இதில் சில பாடல்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகள் உண்டு... 


எவ்வளவு சோகமான வரலாறுகளை உள்ளடக்கிய பாடல்களை குழந்தைகளுக்கு ஜாலியாக சொல்லிக்கொடுக்கிறோம் என்று சிலருக்கு தோன்றலாம். முதலில் ஆங்கில பாடல்களே நம் குழந்தைகளுக்கு தேவையா என்றும் சிலருக்கு தோன்றலாம். எனக்கு தோன்றியதென்னவோ, எனக்கு இந்த அர்த்தமெல்லாம் தெரியாமலே இருந்திருக்கலாம் என்றுதான்...

Sunday, October 14, 2012

தமிழ் அறிவும்! உணர்வும்!

தமிழ் அறிவு எ‎ன்பதற்கும் தமிழ் உணர்வு எ‎ன்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. தமிழ் ‏இலக்கண இலக்கியங்களைப் படித்தும் சிறந்த தேர்ச்சியும் பெற்ற ஒருவர் தமிழ் அறிவு பெற்றவராக ஆக முடியும். ஆனால், அவர் தமிழ் உணர்வு பெற்றவராக ஆக முடியும் எ‎ன்பது நிச்சயமல்ல. தமிழைப் பற்றி ஒருவர் அறிந்து வைத்திருக்கி‎ன்ற செய்திகளை வைத்து தமிழ் அறிவு உண்டாகும். எந்தச் சூழலிலும் சொந்த மொழியையும் இனத்தையும் பண்பாட்டையும் பேணிக்காக்கும் மனவுறுதியே தமிழ் உணர்வு எ‎ன்பதாகும்.

எ‎ன் தாய்மொழியை நான் இழக்க முடியாது; என் தாய்மொழியை அழிக்க இன்னொரு மொழ¢க்கு இடந்தர முடியாது; எத்தனை மொழிகளைக் கற்றாலும் எ‎ன் தாய்மொழியைக் கல்லாமல் இருக்க முடியாது என்பவ தமிழ் உணர்வி‎ன் சில அடையாளங்கள்.

தமிழ் அறிவு ‏இருந்து தமிழ் உணர்வு இல்லாதவர்கள் தமிழுக்காகப் பெரிதாக எதுவும் செய்யமாட்டார்கள். தமிழ் உணர்வு ‏இருந்து தமிழ் அறிவு இல்லாதவர்கள் தமிழுக்குச் செய்வதாக எண்ணி இலக்கு தெரியாமல் எதையாவது செய்துவிடுவார்கள். தமிழ் அறிவோடு தமிழ் உணர்வும் பற்றவர்கள்தாம் தமிழுக்காகச் செய்யவேண்டிய உருப்படியான செயல்களைச் செவ்வனே செய்துமுடிப்பார்கள்.

தமிழால் கிடைக்கும் எல்லாவகையான ஏந்து(வசதி)களையும் வாய்ப்புகளையும் எப்பாடுபட்டாகிலும் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ ஆளாய்ப்பறக்கும் நம்மவர்கள் சிலர், தமிழுக்காக ஒரு சிறு ந‎ன்மையும் செய்வது கிடையாது. இவர்களி‎ன் இப்போக்கு மாறவேண்டும்; இவர்கள் உள்ளத்தில் தமிழ் உணர்வை ஏற்கவேண்டும்.

Saturday, October 06, 2012

காந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சே யின் வாக்குமுலம்,


குறிப்பு: இது  என் சொந்த பதிவு அல்ல. இணையத்தில் படித்தது. மற்றவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல் என்பதால் இங்கே பகிர்கிறேன். நன்றி....


ஆதாரம் MAY I PLEASE YOUR HONOUR

காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை" என்று கோட்சே கூறினார். டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கோட்சே தொடர்ந்து வாக்குமூலம் அளித்தார். வாக்கு மூலத்தின் பின்பகுதி வருமாறு:-

ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்.

தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது.

காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும். மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், காந்தியடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை.

பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.

நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.

சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்தி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார்.

முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.

15
ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான். "தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.

பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை.

சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.

பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. `கொலைக்கு நானே பொறுப்பு' என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன்.

1948
ஜனவரி 17_ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன். இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." இவ்வாறு கோட்சே கூறினார்.

நண்பர்களே உங்கள் கருத்துக்களை நீங்கள் கூறலாம், நான் மேற்கோள் காட்டிய அனைத்தும் MAY I PLEASE YOUR HONOUR என்ற ஆங்கில புத்தகத்தை ஆதராமாகக் கொண்டது.

Thursday, October 04, 2012

காதல்:திருமணம் :மனைவி

மாலைப் பேருந்தில் வீட்டை நோக்கி, முன்னிருக்கை நடுத்தர வயது ஆசாமிகளின் பேச்சுவார்த்தை காதிலும் மனதிலும்...."நீ யாரையாவது லவ் பண்ணீருக்கியா?" அடுத்தவன் வெறுமையாய் சிரிக்க, "தப்பிச்சே" என்றான் கேட்டவன். திருமணங்களில் காதல்னா என்ன? அது எங்கே இருக்கு? எப்படி வருது? எங்க போய் முடியுது? ,கூழாங்கற்களாய் மனதில் சரிந்த கேள்விகளை நோக்கியதே இந்தப் பதிவு.

"எதிர்பார்ப்புகள் இல்லாமல் வருவது காதல்", சரி இந்த இலக்கணத்தோடான மனதை எங்கே தேடுவதாம்? அவன் என்னை மட்டுமே நேசிக்க வேண்டுமென்கிற எதிர்பார்ப்பிலேயே இந்த காதல் இலக்கணம் பொய்த்து விடுகிறதே?.சில விஷயங்களை உணர்வுகளால் மட்டுமே அணுபவிக்கவும் கொண்டாடவும் முடியும் அந்த வகையில்தான் என்னுடைய காதல் சேர்த்தி என நினைக்கிறேன். வார்த்தைகள் பொய்த்துப் போய் நினைவுகளும் நிஜங்களும் என்னைக் கொண்டாடும் உணர்வுகள்தான் காதலாய் இருக்க முடியுமோ?

கல்யாணம் பண்ணிக் கொண்டவர்கள் எல்லாம் தங்கள் இனையை காதலித்துக் கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு சரியாக இருக்க முடியும்?. என் பார்வையில் எல்லா தம்பதியரிடமும் காமம் மிகுந்திருக்கும் அளவிற்கு காதல் மிகுந்திருக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி.எனக்குத் தெரிந்து சமுதாய நிர்பந்தங்களுக்காய் குடும்ப கட்டுக்குள் உழலும் தம்பதியர்தான் பெரும்பான்மையினர்.
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான் திருமணத்தின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கிறது.எதிர்பார்ப்புகளுடன் கூடிய திருமண உறவில் இந்தக் காதலின் விளைவுகள் எத்தகையது? ஆதரவாய் சாய்ந்து கொள்ள தோளும், அதைக் கொடுக்கும் பக்குவமும் இல்லாத போதுதான் அதன் விளைவுகள் குடும்ப கட்டமைப்பை மீறி பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்த்து வரை எதிரொலிக்கிறது.
வெற்றிகளைக் சேர்ந்து கொண்டாடத் தெரிந்த தம்பதியர் தோல்வியென வரும் போது தோளோடு தோள் நின்று எதிர்கொள்ளாது ஒருவரை ஒருவர் காயப்படுத்தி காதலையும் குடும்பத்தையும் தெரிந்தே அழிப்பது வேதனையான வேதனை.

பொருளாதார தேவைகளுக்கு இருவரும் போராடும் குடும்பங்களில் ஆண்களை விட பெண்களுக்கே தன் இனையின் ஆதரவும், அங்கீகாரமும், அருகாமையும் அதிகமாய் தேவைப்ப்டுகிறது.ஏனெனில் பொருளாதார பங்களிப்பையும் தாண்டி பெண்களின் பங்கு குடும்ப நிர்வாகம் முதல் குழந்தை வளர்ப்பு வரை நீள்வதை யாரும் மறுக்கமுடியாது.சகிப்புத்தன்மை, பரஸ்பர அங்கீகாரம், ஒத்த முடிவெடுக்கும் பாங்கு, பிரச்சினைகளை ஒரு சேர எதிர்கொள்ளும் நம்பகத்தன்மை இத்தனையும் தருவது காதல்தானே!

இதெல்லாம் தன் இனையிடம் கிடைக்காமல் ஏமாற்றமும், இயலாமையும் சூழ புழுங்கும் ஆனோ பெண்ணோ வெளியில் சின்னதாய் ஒரு ஆறுதல் கிடைத்தாலும் கொம்பினைச் சுற்றும் கொடியாய் பற்றிக் கொள்வது இயல்புதானே! பிறகு அழுது ஆர்ப்பாட்டம் செய்வதால் யாருக்கு பயன்? இதை தவிர்க்க ஒரே வழி, உங்கள் இனையை ஆதரிப்பதுதான். எல்லா வகையிலும்.
திருமணமாவர்களே உங்கள் காதலைக் கொண்டாடுங்கள்.

உன்மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ...

Tuesday, October 02, 2012

அலி ஜி- இண்டா ஹவுஸ்சேச்சா பேரான் கோஹேன் இவர் நடித்து கதை திரைகதை அமைத்து இயக்கிய இந்த படம் 2006இல் ரிலீஸ் ஆகி செம ஹிட் ஆனது. இந்த படம் ஐரோப்பா நாடுகளில் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டது. காரணம் இவரது முந்தய படமான போராட் படத்தின் காட்சி அமைப்பு அதை ஆசியா நாட்டில் ரிலீஸ் செய்ய விடாமல் செய்துவிட்டது.
இந்த படத்தில் கதை என்பது ஓரளவு இருக்கு என்றே வைத்துகொன்டாலும் அதை பின்னுக்கு தள்ளுவது படத்தின் காட்சியமைப்பு தான். போராட் பார்த்தவர்களுக்கு இது எப்படி இருக்கும் என்று தெரியும்.
சும்மா சுத்திட்டு திரியும் நாயகன் அவனுக்கு எல்லா பழக்கமும் உண்டு. ஒரு பள்ளியில் பாடமும் நடத்துகிறார். அது வாழ்க்கை பாடமே தவிர ஏட்டு சுரக்காய் அல்ல. திடீரென அந்த பள்ளிக்கு நிதி உதவி நிறுத்த படுகிறது. இதை எதிர்த்து ஹீரோ ஒரு வித்யாசமான முறையில் உண்ணாவிரதமிருக்கிறார்.
அப்போது, தான் பிரதமர் பதவிக்கு வரவேண்டும் என்று துணை பிரதமர் துடிக்கிறார். நடக்கவிருக்கும் இடை தேர்தலில் நாயகனை நிக்க வைத்தால் கண்டிப்பாக தோற்று விடுவோம். இதை காரணம் காட்டி மத்த எம்பி க்களின் ஆதரவை நாம் பெற்றுவிடலாம் என்றும் திட்டம் தீட்டி. நாயகனை தனது கட்சியின் வேட்பாளராக அறிவிக்கிறார்.
நாயகன் பிரச்சாரம் செய்யும் விதம் ஒரு தினுசாக இருக்கிறது. இருந்தும் நாயகன் எப்படியோ வெற்றி பெற்று விடுகிறார். இதன் பிறகு பல சுவாரசியமான காட்சிகள் படத்தில் இருக்கிறது.
 அவை அனைத்தும் சிரிப்பதர்க்கே தவிர. கதையா காணோமே என்று யோசித்தால் நீங்கள் புத்திசாலி ஆகிவிடலாம்.
நச்சுன்னு நாலு
மத்த படத்தின் விமர்சனம் எழுதுவது போல இதுல நாலு வசனம் எழுதினா அப்புரம் என்ன விரட்டி விரட்டி அடிப்பாங்க. ஏன்னா, ஒவ்வொரு வசனமும் அந்த அளவுக்கு ரன கொடுரமா இருக்கும். இருந்தாலும் ஒரு வசனம் எனக்கு புடிச்சத மட்டும் கஷ்டப்பட்டு கண்டுபுடிசிருக்கேன். இதோ,

1.நீ துணை பிரதமரா எனக்கு வலது கையா இருக்கனும். முடியுமா?
இல்ல, நான் வழிய காட்டேன். இனி நீங்க தான் பாத்துக்கணும்
கொசுறு:
இது அமெரிக்கன் பை, வான் வில்தர் சீரியஸ் போன்ற படம். இதை தனியாகவே பார்க்குமாறு அறிவுருதபடுகிறது. எடாகுடமா மாட்டிகிட்டா கம்பெனி பொருப்பல்ல>>>> 
 

வந்து போனவுங்க