Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Sunday, February 26, 2012

விழிகளில் ஒரு வானவில்


சொர்கத்தை கண்டேனே
என்னவளின் விழியிலே!
கேட்பதற்கு ஒன்றுமில்லை
அவளின் பேச்சை தவிர

வகுப்பெல்லாம் பட்டாம்பூச்சி
பறக்கிறேனே அதனுடன் நான்
உனதருகே நெருங்கியதும்
சிறகுகளும் உரைகிறதே!

இமைகளின் மறைவினிலே
ஒளிந்திருக்கும் எனதுயிரே
ஒருமுறை தான் பாரம்மா!
பைத்தியம்தான் பிடிக்குதம்மா!

கார்மேக முகில்போல
படர்ந்திருக்கும் கூந்தலிலே
மல்லிகையின் வாசனை முகர
பரிவர்த்தனை தருவாயா!

சிவந்திருக்கும் இதழினிலே
மேலிருப்பது தாமரையா!
பார்த்தாலே இழுக்குதே
சுவைத்தாலே இனிக்குதே!

Thursday, February 16, 2012

வினை


பிச்ச கேட்டு திரியுரனே
ஒத்த வேளை சோத்துக்கு
பட்டதெல்லாம் போதுமடா
பைத்தியம்தான் பிடிக்குதடா

காடும் வீடும்
கையைவிட்டு போச்சு
காலம் என்னை
கடனாளியா ஆக்குச்சு

கூலி குடுத்த நேரம் போயி
கூலியாய் நின்னாச்சு
கைய கட்டி நின்னவனும்
கைநீட்டி பேசுறான்

பெத்தமக கேட்டாளே
பாசிமணி வேணுமுன்னு
வாங்கித்தர காசுயில்ல
காரணஞ் சொல்ல முடியவில்ல 

ஊதாரியா திரிஞ்சனே
ஊரு உலகம் சுத்திக்கிட்டு
பாட்டன் சொத்து கரஞ்சதும்
பட்டினிய உணர்ந்தனே...

Tuesday, February 14, 2012

காதல்



    “காதல்” பிரபஞ்சமே இந்த ஓர் வார்த்தைகாகவும் அதன் அன்பிற்காகவும் ஏங்கித் தவிக்கின்றது. ஐந்தறிவு ஜீவனானாலும் சரி, ஆறறிவு ஜீவனானாலும் சரி காதல் என்ற ஒன்றை உணரவில்லை எனில் உலகமே இன்று சுடுகாடுதான். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் முழங்கியதால் மட்டும் இன்று ஜாதி சண்டை, மத சண்டை நீங்கி விடவில்லை. காதல் என்ற உணர்வை மனிதன் உணர்ந்ததால் தான் இன்று சம மனித நாகரீகத்தை உணர்ந்து கொண்டான். காதலை பற்றி சங்ககால இலக்கியங்களில் பல பாடல்கள் எழுதப்பட்டு இருந்தாலும், நம் நாட்டில் உள்ளவர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால என்று இருந்ததால் தான் இன்று அனைத்திலும் அயல்நாட்டவரை காட்டிலும் சற்று பின்னால் உள்ளோம். இனி, காதலின் எனது கோணம்.
ஒரு தாய் தான் பெற்றெடுத்த பிள்ளையிடம் காட்டுவது தாய் பாசம். வேறு குழந்தையை கொஞ்சுவது அன்பு. அப்படியானால் தாய் பாசமும், அன்பும் வேறு வேறோ. இல்லை, “யாழும் குழலும் இனிது என்போர் மழலை சொல் கேளாதோர்” என்று ஓர் பழமொழி உண்டு. எந்த ஒரு மனிதருக்கும் குழந்தையின் சிரிப்பும் அதன் விளையாட்டு போக்கும் மிகவும் பிடிக்கும். அது எந்த குழந்தையாக இருந்தாலும் சரி. தன பிள்ளை என்று வரும்போது அவளுக்கு தோன்றுவது தன் வம்சம் நிலைக்க பிறந்த குழந்தை, தன் ரத்தம் என்ற ஓர் அதிகபடியான உணர்வு தோன்றுகிறது.
அந்த உணர்வுதான் குழந்தை வளர்ந்த பிறகும் உலகில் மற்றவருடன் இருந்து அவனை(ளை) வேறுபடுத்தி காட்ட உதவுகிறது. இது மானுட பிறவிக்கு மட்டும் உள்ளதள்ள அனைத்து ஜீவராசியிடமும் உள்ளது.
இந்த அன்பு என்ற வார்த்தை பல தருனம் கொண்டவையாக மாறும் போது காதல்,தாய்பாசம், நட்பு, சகோதரி, துணைவி, பிள்ளை என்று காலத்திற்கு ஏற்றார் போல் மாறுபடுகின்றது. இதில் சகோதர(ரி) பாசத்தை இழந்தவர்கள் தான் அதிகம். காரணம் “நாம் ஒருவர், நமக்கு ஒருவர்” தான்.
அவனை பார்த்தவுடன் எனக்குள் ஏதோ ஒரு தாக்கம். அவனிடம் பேசும் போதும், பழகும் போதும் ஓர் இணைபிரியாத மாற்றம். காரணம் என்னவோ என்றால் இதுவும் காதல் தான். நட்பு என்ற காதல். எனக்கு ஒரு உடன்பிறந்தவன் இல்லை என்ற கவலையை நீக்க வந்தவன் நீ என்ற எண்ணம நமக்குள் தாமாக குடிகொள்கின்றது. சோகம் பகிர்ந்து, மகிழ்ச்சி கூட்ட எனக்கும் ஒரு நண்பன் இருக்கிறான் என்று நாமே நமக்கு ஏற்றார் போல் ஒருவரிடம் அன்பு காட்டத்தான் செய்கிறோம்.(மன்னிக்கவும் காதலிக்கிறோம்).
இப்படி ஒவ்வொரு பருவத்திலும் யாரையாது காதலிக்கும் நாம் பருவ வயதில் ஒரு மங்கையை காதலிக்கிறோம். இக்காலத்தில் ஒரு சிலர் மட்டுமே “மணந்தால் மகாதேவி இல்லையெனில் மரணதேவி” என்று உள்ளனர். பெரும்பாலும் எதிர் பாலின கவர்ச்சியை கண்டு அதில் மயங்கி அவரையும் காதலிக்கிறோம். பின்னாளில் மனைவி, குழந்தை, பேரக்குழந்தை என்று நம் காதல் கதை நீண்டு கொண்டே போகிறது.

Wednesday, February 08, 2012

சென்னை: நரகத்தின் சங்கமம்


பள்ளிப் படிப்பை தொடங்கிய இடத்திலே கல்லூரி படிப்பை நிறைவு செய்யபோகிறோம் என்று எண்ணி ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஈரோட்டிலலிருந்து சென்னை நோக்கி பயணித்தேன்.எழில்மிகு சென்னை,சிங்கார சென்னை என்னையும் வரவேற்றது.இந்த ஊரில் நாகரீக வளர்ச்சி சற்று வியக்கும்படியாகவே வளர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரம் தமிழ் நாகரீகத்தின் கொலை நகரமாக மாறிவிட்டது.


தொழில் புரட்சியாலும், அன்னிய முதலீட்டாலும் இன்று பண்டைய தமிழ் கலாச்சாரம் இருந்த இடம் தெரியாமல் போனதற்கு உதாரணம் தான் சென்னை. மற்ற ஊர்களிலிருந்து பிழைக்க வழிதேடி சென்னை வருபவர்களும்,மேல்படிப்பிற்காக வருபவர்களும் இந்த ஊருக்கு ஏற்றார் போல் மாறிவிடுகின்றனர்.எங்கு பார்த்தாலும் போக்குவரத்துக்கு நெரிசல், 108இன் சத்தமும், 300 வினாடிகளை தாண்டும் போக்குவரத்துக்கு சிக்னல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் இவை அனைத்தும் மனிதனை ஓர் சுழல் சக்கரமாக மாற்றிவிட்டது.

உணவு, உடை, பேச்சு என்று எல்லாம் இங்கு பாழடிக்கப்பட்டு விட்டது. பல வெளிநாட்டு புகழ்பெற்ற உணவகங்கள் தங்களின் கிளைகளை சென்னையில் தொடங்கி லாபகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. கூட்டம் கூட்டமாக, ஜோடி ஜோடியாக மக்களும் தங்களின் டெபிட் கார்டுகளை தேய்தவன்னமுள்ளனர். இப்படி எல்லாவற்றிலும் சென்னை உயர்ந்தும் பல இடங்களில் பிச்சை எடுப்பவர்கள், மனநலம் பாதித்து சாலைகளில் திரிப்பவர்கள், வீடு இன்றி சாலையோரங்களில் மற்றும் லோக்கல் ரயில் நிலையங்களில் வசிப்பவர்கள் என அவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

பெண்கள் பாவாடை தாவணி, சுடிதார் அணிந்த காலம் மாறி ஜீன்ஸ், டிசர்ட் அதுவும் மாறி பல இடங்களில் உள்ளாடைகளை அணிந்து வெளியில் திரியும் அவல நிலைமை வந்துவிட்டது. ஆண் பெண் சமம் என்ற கோட்பாடை சென்னையில் தான் பெண்கள் சரியாக புரிந்து ஆண்களுக்கு இணையாக புகை, மது என்று அனைத்திலும் சமமாக உள்ளனர். ராஜா ராம் மோகன் ராயும், மவுண்ட் பேட்டன் பிரபுவும் சதியை(sati) ஒழித்து பெண்களுக்கு மறுவாழ்வு கொடுத்தனர். ஆனால், இங்கு பல பெண்கள் திருமணத்திற்கு முன்னதாகவே சிலரிடம் வாழ்ந்து விடுகின்றனர். இதற்கு இவர்கள் மட்டும் காரணம் அல்ல ஆண்களும் தான். இருந்தாலும் இங்கும் சில ராணி லக்ஷ்மி பாய், கண்ணகி போன்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

“உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் “ என்றிருந்த காதல் “வாடி வாடி க்யூட் பொண்டாட்டி” என்று மாறுவதற்கு காரணம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், அதனால் ஏற்பட்ட நாகரீக மாற்றமும் தான். இரண்டு வருடங்களுக்கு முன்னால் நாளிதழில் ஓர் செய்தியை படித்தேன், துப்புரவு தொழிலாளர்கள் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் செப்டி டேங்கை சுத்தம் செய்து கழிவுகளை வேறு இடத்தில் அப்புற படுத்தினர். அப்போது, அதில் அதிக அளவில் ஆணுறைகள் இருந்ததை கண்டனர். காதல் என்ற போர்வையில் காமம் அரங்கேறி கொண்டிருப்பதற்கு  இதுவே சாட்சி.

தமிழக அரசு கடைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் தமிழில் பெயர் பலகை வைத்திருக்கவேண்டும் என்று ஓர் ஆணை பிறப்பித்தது. பலகை வைத்தால் மட்டும் தமிழ் வளர்ந்திடுமா? இங்குள்ள பல பள்ளிகள் இரண்டாம், மூன்றாம் மொழியாக வைத்துவிட்டு மற்ற மொழிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றது. தமிழில் அளபெடை பிரிக்க தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, ஓர் அளவிற்காது எழுத படிக்க தெரிய வேண்டும். கிராமம், தமிழர் பண்பாடு, போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் திரைப்படங்கள் குறைந்து, நகரம் (நரகம்), வன்முறை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கும் திரைப்படங்களும் தான் அதிகம். இத்தகைய நாகரீக மாற்றத்திற்கு இது போன்ற திரைப்படங்களும் ஓர் காரணம்.

இன்னும் எவ்வளவோ அசிங்கங்கள் இங்கு நடைபெற்று கொண்டிருக்கிறது. அவை அனைத்தையும் எழுத நினைத்தால் இன்னும் பத்து பதிவுகள் தொடர்ந்து எழுத வேண்டும். சென்னை கார்ப்பரேஷன் என்று இருந்த எனது பிறப்பு சான்றிதழை பார்க்கும்போது, எப்போது சென்னை செல்வோம் ஏங்கி கொண்டிருந்தேன். தற்போது அதற்காகவே வருந்துகிறேன். விரைவில் என்னை வாழவைத்த எனது பெரியார் மாவட்டத்திற்கு வேப்ப மர காற்றிற்காகவும், அன்னையின் அன்பிற்காகவும், மனநிம்மதிக்காகவும் பயணிக்க உள்ளேன்...நீங்களும் விரைவில் உங்கள் சொந்த ஊர்களுக்கே சென்று மண்வாசனையை  உணருங்கள்....
 

வந்து போனவுங்க