Rain Rain go away :: எலிஸபத் அரசி காலத்து பாடல் இது
1533-1603 காலகட்டத்தில் ஸ்பெயினும் இங்கிலாந்தும் எப்பொழுதும் சண்டைக்கோழிகள். 1588 வாக்கில் ஸ்பெயின் தனது கப்பற்படையோடு இங்கிலாந்துடன் சண்டைக்கு சென்றது. ட்யூக் ஆஃப் மெடினா, செடோனியா தலைமை வகித்த இப்படையில் 130க்கும் மேற்பட்ட பெரிய போர்க்கப்பல்கள் இருந்தன. அட்மிரல் லார்டு ஹோவர்டு தலைமை வகித்த ஆங்கிலப்படையிடம் இருந்ததோ 34 சிறிய போர்க்கப்பல்களும் 163 வணிக கப்பல்களும்.. ஆனால் ஆச்சரியமாக ஸ்பெயின் படுதோல்வி அடைந்தது.. இந்த தோல்விக்கு ஆங்கிலப்படையின் சிறிய கப்பல்களின் விரைந்து தாக்கும் திறன் மட்டுமல்ல, சூறாவளி மழையும் முக்கிய காரணம்.. சூறாவளியில் ஸ்பெயினின் பெரிய கப்பல்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை... எனவே தான்
Rain rain go away,
Come again another day.
We want to go outside and play
Come again some other day.
Jack and Jill :: பதினாறாம் லூயி சிரச்சேதம் செய்யப்பட்ட காலகட்டத்திய பாடல் இது
ப்ரெஞ்சு அரச பரம்பரையில் வந்த பதினாறாம் லூயி அவரது முன்னோடிகளோடு ஒப்பிடும் போது வலிவற்றவராக, அறிவு குறைந்தவராக, எளிதில் திசை திருப்பப்படுபவராக கருதப்பட்டார். 1770ல் மேரி ஆண்டோனெடை கல்யாணம் செய்த பின் மன்னரின் முடிவுகளில் மேரியின் ஆதிக்கம் மேலொங்கி இருந்தது (அப்பவே இப்படித்தானா?) (Jack and Jill)
இவர்கள் அரசனாகவும் அரசியாகவும் 1774ல் ஆனார்கள் (went up the hill)
அந்த காலகட்டத்தில் ப்ரான்ஸில் கடுமையான நிதி நெருக்கடி. ஆகவே மன்னர் கடுமையாக வரிவிதித்தார். அதனால் மன்னரின் மேல் மக்களுக்கு பற்று குறைந்து போராட தயாரானார்கள். மக்களை ஒடுக்குவதற்காக மன்னர் மேலும் வரி விதித்து நிதி மற்றும் சட்டத்தால் கசக்கி பிழிய ஆரம்பித்தார் (To fetch a pail of water)
ப்ரெஞ்சு மத்திய தர வர்க்கத்தால் இதை தாக்கு பிடிக்க முடியவில்லை. 1789ல் பரீஷிய நகர மக்கள் ஒன்று சேர்ந்து கோட்டையை முற்றுகை இட்டு மன்னரையும் அரச குடும்பத்தினரையும் சிறை பிடித்தார்கள் (Jack fell down)
1792ல் ப்ரான்ஸ் குடியாட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு மன்னர் மேல் வழக்கு தொடரப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்டது. பாரிஸில் 1793 ஜனவரியில் கில்லட்டின் கொண்டு மன்னர் சிரச்சேதம் செய்யப்பட்டார் (and broke his crown)
அரசி மேரி அவர் மகனிடமிருந்து பிரிக்கப்பட்டு தீர்ப்பாணையத்திற்கு அனுப்பப்பட்டார். அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பாரிஸில் அக்டோபர் 1793ல் சிரச்சேதம் செய்யப்பட்டார் (And Jill came (தலை உருண்டது) tumbling after)
Jack and Jill went up the hill
To fetch a pail of water;
Jack fell down
and broke his crown,
And Jill came tumbling after.
Ring around the rosies :: பொதுவாக சிறுவர்கள் கை கோர்த்துக்கொண்டு இப்பாடலை பாடியபடியே வட்டமாக சுற்றி வந்து கடைசி வரியில் கீழே விழுவார்கள்
1600ல் கடுமையான ப்ளேக் காய்ச்சலால் அவதிப்பட்டது இங்கிலாந்து. ப்ளேக்கின் ஆரம்ப அறிகுறி தோலில் ரோஸ் நிறத்தில் வரும் சொறி. (Ring around the rosies)
அப்போது எலிகளால் காற்றின் மூலம் ப்ளேக் பரவுவதை டாக்டர்கள் அறிந்திருக்கவில்லை. பிணங்களின் துர்நாற்றத்திலிருந்துதான் ப்ளேக் பரவுவதாக அவர்கள் நினைத்தனர்.. ஆகவே வேர்கள், மூலிகை, பூக்களின் இதழ் போன்றவற்றை கொண்டு அவர்கள் முகமூடி ;) அணிந்தனர் (A pocket full of posies)
ப்ளேக்கின் அடுத்த அறிகுறி தும்மல் (A-tishoo! A-tishoo!) > பிற்காலத்து பாடல்கள் தும்மலை மாற்றி ashes என்று பாடப்பட்டது. அது எரிக்கும் போது வரும் சாம்பலை குறிக்கும் < குழந்தைகள் கடைசி வரி பாடும் பொழுது அவர்களை அறியாமலேயே வீழ்ந்த அவர்களின் முன்னோரை நினைவு கூறுகின்றனர் (We all fall down)
Ring around the rosies,
A pocket full of posies,
A-tishoo!
A-tishoo!
We all fall down.
Humpty Dumpty sat on a wall :: ஹம்டி டம்டி என்பது கூன் விழுந்த ராஜாவான மூன்றாவது ரிச்சர்டை குறிக்கும்
அவர் wall என்ற பெயரில் ஒரு குதிரை வைத்திருந்தார் (Humpty Dumpty sat on a wall ஷேக்ஸ்பியர் கவிதையான ரிச்சர்டு III லும் இது வரும்)
போஸ்வொர்த் போரில் அவர் குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டார் ( Humpty Dumpty had a great fall)
அவரின் எதிரிகள் அவரை சூழ்ந்து அவரை அங்கேயே கண்ட துண்டமாக வெட்டிப்போட்டு விட்டார்கள் (Couldn’t put Humpty together again)
Humpty Dumpty sat on a wall,
Humpty Dumpty had a great fall.
All the king’s horses,
And all the king’s men,
Couldn’t put Humptytogether again.
Baa baa, Black Sheep :: கடுமையான வரிவிதிப்பை சொல்லும் பாடல்
உழைப்பில் மூன்றில் ஒரு பங்கு ராஜாவுக்கு (மாஸ்டர்), ஒரு பங்கு ட்யூக் டச்சஸ் போன்ற உயர்குடி மக்களுக்கு (dame), கடைசி ஒரு பங்குதான் உழைப்பாளிக்கு (little boy) என்பதை சொல்லும் பாடல்.
Baa baa, Black Sheep,
Have you any wool?
Yes, marry, have I,Three bags full:
One for my master,
One for my dame,
And one for the little boy
That lives in the lane!
****
மழை சேகரிப்பு காலகட்டத்தில் இருக்கும் நாம் ஏன் இன்னமும் rain rain go away என்று பாடிக்கொண்டிருக்கிறோம் என்று எனக்கும் ரொம்ப நாளாக ஒரு கேள்வி உண்டு... ஒரு நாள் அலுவலகத்தில் இது பற்றி கேட்ட பொழுது ஸ்பெயினை பிறப்பிடமாக கொண்ட சக ஊழியர் "ரெயின் ரெயின்" பின்னால் ஒரு அரச பரம்பரை கதை உண்டு என்ற செய்தியை சொன்னார். பின்பு வலையாராய்ச்சியில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் இந்த பதிவு. இதில் சில பாடல்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகள் உண்டு...
எவ்வளவு சோகமான வரலாறுகளை உள்ளடக்கிய பாடல்களை குழந்தைகளுக்கு ஜாலியாக சொல்லிக்கொடுக்கிறோம் என்று சிலருக்கு தோன்றலாம். முதலில் ஆங்கில பாடல்களே நம் குழந்தைகளுக்கு தேவையா என்றும் சிலருக்கு தோன்றலாம். எனக்கு தோன்றியதென்னவோ, எனக்கு இந்த அர்த்தமெல்லாம் தெரியாமலே இருந்திருக்கலாம் என்றுதான்...
குறிப்பு: இது என் சொந்த பதிவு அல்ல. இணையத்தில் படித்தது. மற்றவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல் என்பதால் இங்கே பகிர்கிறேன். நன்றி....
Source : http://mugamoodi.blogspot.com/2005_08_01_archive.html