Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Wednesday, July 25, 2012

உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு!


தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய முதற்தாய் மொழிவாயிலாகவும் நாம் நன்கறிகிறோம்.
தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர்.


          குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.


1. தொலைமேற்கில் கிரேக்க நாடு

2. மேற்கில் எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா

3. வடமேற்கில் மென் ஆப்பிரிக்கா

4. தொலை கிழக்கில் சீன நாடு

5. கிழக்கில் பர்மா, மலேசியா, சிங்கப்பூர்

6. தெற்கில் நீண்ட மலைத் தொடர்


          இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

          இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன. கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.

          இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் நாவலன் தீவு என்று அழைக்கப்பட்ட குமரிப்பெருங்கண்டம்”.

          கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையதுதான்.

          நக்கீரர் இறையனார் அகப்பொருள்என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள தென்மதுரையில்கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரம்நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன்நடத்தப்பட்டது.

          இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் தொல்காப்பியம்மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையில்கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

          வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.

வரலாற்றுத் தேடல் தொடரும்..!


20 comments:

  1. தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!!

    ReplyDelete
  2. இனி நாம் இரண்டாயிரம் ஆண்டு பழமையானவன் என்று கூறாமல் இருபதாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவன் என்று நாம் மார்தட்டக் கூறலாம்.

    கல் தொண்டா மண் தொண்டா காலத்தே உருவான மொழி எங்கள் மூத்த தமிழ்.

    நமது இந்த பெருமை எத்தனைப் பேருக்கு தெரியும்?

    ReplyDelete
  3. இது போன்று நமது வரலாறுகளையும், இழந்த பெருமையையும் நாம் எப்போது மீட்போம்?

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இருப்பதையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம். முதலில் இங்கு அனைவரையும் பிழையின்றி தமிழ் பேச வைக்கவேண்டும்.

      Delete
    2. அது சிறு கடினம் தான் நண்பரே, அனைவரும் ஆங்கில மோகத்தில் கிறங்கிப் போய் உள்ளனர், மாற்றுவது கடினம்.

      இங்கிலாந்துக்காரன் ஒலிம்பிக் அதிகாரப்பூர்வ காணொளியில் 'வணக்கம்' என்ற நம் மொழியின் வார்த்தையை உபயோகிக்கிறான். நம் ஹிந்திக்காரன், திராவிடன் என்று புழுத்திக் கொள்ளும் மனிதர்களை யோசிக்க வைக்க வேண்டும் நண்பரே...

      Delete
  4. நண்பரே கிரேக்க நாடு என்று கூறுவதைவிட யவன நாடு என்று கூறினால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. பலருக்கு யவன நாடு என்றால் தெரியாது. ஆதலால், தான் கிரேக்கம் என்றே கூறிவிட்டேன்.

      Delete
  5. migavum arumai thodarattum ungal pani vazthugal
    krish

    ReplyDelete
  6. தமிழர்களின் வரலாற்றைப் பற்றிய தகவல் மிகவும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. தமிழன் வரலாறு படித்தேன்.நாற்பபட்டு மூன்று வயதில் போர் புரிய ஆசை வந்து விட்டது.

      Delete
    2. தமிழன் வரலாறு படித்தேன்.நாற்பபட்டு மூன்று வயதில் போர் புரிய ஆசை வந்து விட்டது.

      Delete
  7. ஏன் அஞ்ஜவேண்டும் அடுத்தவனுக்கு...... கை நீட்டி சொல்வேன் இவ்வுலகமே எங்களுடையது என்று.

    ReplyDelete
  8. கைநீட்டி சொல்வேன் இவ்வுலகமே தமிழனது என்று..

    ReplyDelete
  9. ஏன் அஞ்ஜவேண்டும் அடுத்தவனுக்கு...... கை நீட்டி சொல்வேன் இவ்வுலகமே எங்களுடையது என்று.

    ReplyDelete
  10. Tamilan endru solu Thalai Nimirthu nilu da

    ReplyDelete
  11. இங்கே இருக்கும் பிளவுகளே நம்மை பற்றி நமக்கே தவறான செய்திகளை பரப்பும் சில மதகுருமார்கலாலும் அவற்றை நம்பும் அப்பாவி மக்கலளாலும் நமது பூர்வீகத்தை நாமே கிண்டல் செய்வது இப்போது வெகுசகஜமாயிற்று வருத்தம் மிக வருத்தம் நம் பண்பாடு என்பது அவர்களும் இருந்தனர் என்பதை மறந்துவிட்டனர் ஞாபகபடுத்துவோம்

    ReplyDelete
  12. Nanbare tamilil type seivathu yeppadi thmilarin varalaru migavum arputham.

    ReplyDelete

 

வந்து போனவுங்க