மாதவன் மற்றும் பிபாசா பாசு நடித்த இத்திரைப்படம் பெரும் விளம்பரத்துடன் வெளிவந்தது. பெயருக்கு ஏற்றாற்போல் இதில் இவர்கள் தொழிலும் அதுதான். மாதவன் சித் என்ற கதாபாத்திரத்திலும், பிபாசா சோனாலி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்டு வாழும் ஜோடிகளை இவர்கள் பிரிகின்றனர். இதுவே இத்திரைப்படத்தின் கதை.
மாதவன் ஏற்கனவே விவாகரத்து ஆனவர் என்பதால் அதையே தொழிலாக்கி சம்பாரிகின்றார். இடையில் வந்து பிபாசாவும் ஒட்டிகொல்கிறார். ஆரம்பம் முதல் ஜோடிகளை பிரித்து வரும் இவர்கள் ஒரு ஜோடியை மட்டும் சேர்த்து வைக்க முயல்கின்றனர். அந்த இடத்தில இடைவேளை வருகிறது மற்றும் திரைக்கதையில் ஒரு திருப்பமும் ஏற்படுகிறது. மாதவனின் முதல் மனைவியை வேறு ஒருவரோடு அவர் சேர்த்துவைத்து தான் மாத மாதம் செலுத்த வேண்டிய அளிமோனி தொகையில் இருந்து தப்பித்து கொள்கிறார்.
பின்னர் அவருக்கும் நாயகிக்கும் முட்டிக்கொண்ட பிறகு பிரித்த ஜோடியை மீண்டும் இணைக்க முயல்கிறார். அப்படியே தனது பிரிவையும் சரிசெயா முயல்கிறார்.இறுதியில் எப்படி ஒன்று சேர்கின்றனர் என்பதே கதை. படத்தில் பாடல் அனைத்தும் சுமார் ரகம் தான். சலீம் சுலைமான் ஜக ஜாலம் எடுபடவில்லை.
நச்சுன்னு நாலு.
1. மாதவனின் தோழனாக வரும் த்ரீ இடியோட்ஸ் சைலேன்செர் சாமியாராக வரும் காட்சி.
2. வசனம் எழுதிவைத்த தாளுக்கு பதிலாக பாரின் மெனு கார்டை வைத்து அவர் அடிக்கும் லூட்டி, அத்தனையும் இரட்டை அர்த்தம.
3. பாபா ராம்தேவ் இவரிடம் சிக்கி காம்தேவ் ஆனார்.
4. அடுத்த காட்சியில் சைலேன்செர் மருத்துவமனையில் க்ளுகோஸ் ஏத்தும் காட்சி அதன் நோக்கத்தை தெளிவாக காட்டுகிறது.
கொசுறு:
படம் ஒன்னும் விருவிருப்ப்பாக எல்லாம் ஒன்றும் இல்லை. சும்மா வேற வேலையில்லேன்னா பாக்கலாம். மத்தபடிக்கு இது ஒரு தோல்வி படமே. அங்கங்க ஓட்டி பாக்கவேண்டிய நிலைமை. இத பாக்குறதுக்கு வேற வேலை இருந்தா பாருங்க.
0 comments:
Post a Comment