சைப் அலி கான் மற்றும் கரீனா கபூர் நடித்த இத்திரைப்படம் ஒரு தமிழரால் இயக்கப்பட்டது. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை தீவிரவாதம், புலனாய்வு என்றே செல்கிறது. நாயனாக வரும் சைப் அலி கானிற்க்கு படத்தில் குறிப்பாக ஒரு பெயர் இல்லாமல் ஒவ்வொரு தருணத்திலும் ஒரு பெயரில் வளம் வருகிறார். இதில் இவரது பெயர் ஏஜென்ட் வினோத். ஆப்கானிஸ்தானில் படம் தொடங்கி லண்டன, மோரோகோ, ரஷ்யா, பாகிஸ்தான் என்று உலகம் சுற்றுகிறது.
கதை என்பது எல்லா ஏஜென்ட் படங்களை போன்றே விறுவிறுப்பாக சொல்கிறது. திரைக்கதையில் அங்கங்கே சில இடங்களில் சொதபல்கள் இருக்கிறது. பின்னணி இசை தமிழில் பல படங்களில் வந்துள்ளது. குறிப்பாக கௌண்டமணி செந்தில் காமெடியின் போது வரும் சில இசைகள் இதில் பயன் படுத்தப்பட்டுள்ளது. பழைய படங்களின் இசைகளும் அவ்வபோது வரும்.
பாடல்கள் எதுவுமே பெரியா அளவில் ஹிட் ஆகவில்லை. ப்ரிதம் இசையில் சரியாக கவனம் செலுத்தவில்லை. இடைவெளியின் போது ஒரு எதிர்பார்ப்பு வைத்து விடுகின்றனர். இறுதி வரை கரீனா வை வில்லியாக காட்டி மறுபடியும் நல்லவராக அடிக்கடி காட்டி வருகின்றனர். கராச்சியில் நடக்கும் ஒரு காட்சியில் மோஸ்ட் வான்டட் லிஸ்டில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ஒரு தீவிரவாதிக்கு பாகிஸ்தான் அரசாங்கம் அணைத்து வித பாதுகாப்பும் அளித்து வருவது, பாகிஸ்தான் ராணுவ தளபதியை வேறு ஒருவர் அவர் இடத்திற்கே சென்று கொன்றுவிட்டு கலோநெல் ஆக பொறுப்பேற்று கொண்டு தீவிரவாதிக்கு உதவுவது போன்று அமைத்து விட்டு இறுதியில் ஒரு மிக பெரிய கேள்வி குறியை விட்டு விட்டனர்.
கரீனா மரணத்திற்கு பிறகு ஊருக்கு நல்லவனாக இருக்கும் வில்லனை கொள்ள லஸ்கர் ஈ தொய்பாவின் உதவியை நாடுவது சிரிப்பு வருகிறது. ஒரு தீவிரவாத கூட்டத்தின் தலைவனின் தொலைபேசி எண்ணை வைத்துக்கொண்டு ஏன் அவனை கைது செய்யாமல் இருக்கவேண்டும்? இது போன்று சில கேள்வி படத்தில் உள்ளது. படத்தில் சொல்லும்படியாக ஒரு வசனமும் இல்லை, எனினும் சைப் அலி கான் நிற்க்கு இது ஒரு வெற்றி படமே...
0 comments:
Post a Comment