தெலுங்கில் ஈகா என்றும், தமிழில் நான் ஈ என்றும் இன்று ஒரே நேரத்தில் உலகம் முழுதும் இந்த திரைப்படம் வெளிவந்து அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கில் விக்ரமாற்குடு(தமிழில் சிறுத்தை), மகாதீரா(தமிழில் மாவீரன்), மரியாதை ரமணா(ஹிந்தியில் சன் ஆப் சர்தார்) என்று வெற்றிப்படங்களை தந்தவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவரது அடுத்த படமாக நான் ஈ இன்று வெற்றிநடை போட்டுகொண்டிருகிறது.
படத்தின் நாயகன் ஒரு ஈ என்று தான் சொல்ல வேண்டும். காரணம் நாணிக்கு இதில் வேலை ஒன்றும் இல்லை. நாயகனும் சமந்தாவும் விரும்புகின்றனர். வழக்கம்போல் எல்லா பெண்களை போன்றே சமந்தாவும் நானியை இழுத்துஅடித்து பிறகு தனது காதலை வெளிபடுதுகிறார். மறுநிமிடமே நாயகன் கைலாசம் செல்கிறார். காரணம் வில்லன் சுதீப் சமந்தாவை அனுபவிக்க நினைக்கிறார். அதற்க்கு தடையாக இருக்கும் ஹீரோவை தீர்துவிடுகிறார். படம் ஆரம்பித்த இருவது நிமிடத்திற்குள் நாயகன் இறந்துவிடுவதால் அனைவருக்கும் கதையின் திரைகதை மீது ஒரு ஆர்வம் ஏற்படுகிறது.
முட்டைக்குள் இருந்து கோழிக்குஞ்சு வருவதுபோல் வரும் இறந்த அடுத்தநாளே ஹீரோ ஈ யாக வருகிறார். ஈ க்கு கொடுக்கபட்டிருக்கும் இன்றோவும் பின்னணி இசையும் ஆர்வமாய் பார்க்கவைத்துள்ளது. பிறகு எவ்வாறு ஈ தன்னை கொன்ற வில்லனை பழிவாங்குகிறார் என்றே திரைகதை செல்கிறது. ஒரு ஈ யின் பீலிங்க்ஸ்சை இயக்குனர் நன்றாக பதிவு செய்துள்ளார். வீசும் வெளிச்சத்திலே பாடல் கேட்பதற்கு குளுமை, பழிவாங்கும் பாடல் ஈடா ஈடா, பாடல் ஒரு சுறுசுறுப்பை ஏற்படுத்துகிறது. வில்லனுக்கு லாவா லாவா என்று ஒரு சிறு பாடலும் உள்ளது.
நச்சுனு நாலு
1. மாத மாதம் பதினைது ரூபாய் நன்கொடை கொடுத்துவிட்டு ஏதோ தணிக்கை அதிகாரி போல் கணக்கு கேட்கும் வசனம்.
2. நாயகியின் தோழியிடம் நீ லூசு என்று சொல்லுவது.
3. ப்ளாங்க் செக் கொடுப்பதும், ப்ளாங்க் மெசேஜ் அனுப்புவதும் ஒரு சுகம். ஏன் என்றால் அதை பெறுபவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு கற்பனை செய்து கொள்ளலாம்.
4. வில்லனிடம் போய் ஐ வில் கில் யூ என்றும், நாயகியிடம் நான் ஈ, மருஜென்மத்தில் ஈயாக பிறந்துள்ளேன் என்றும், இறுதியில் நம்மை பார்த்து ஐ ஆம் பாக் என்று ஈ தனது வேலையை காட்டுகிறது.
5 க்ரேசி மோகனின் வசனங்கள் இனிமையாகவும் நகைசுவை உணர்வுடனும் இருக்கிறது.
6. ஈயின் தொல்லை தாங்கமுடியாமல் வில்லன் செய்யும் வேலைதனம் சிரிப்பாக ஊள்ளது.
கொசுறு
ü இதுவரை வந்த இந்திய திரைபடத்தில் இது ஒரு வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம்.
ü எந்திரனில் கிராபிக்ஸ் படு கேவலம். அந்த தப்பை இதில் கொஞ்சம் கூட இயக்குனர் செய்யவில்லை.
ü ஈக்கு ஸ்பெஷல் பவர் எதுவும் கொடுக்காமல் ஈயின் தன்மையை வைத்தே வில்லனை பழிவாங்குவது அருமை.
ü மொத்தத்தில் பார்க்க வேண்டிய திரைப்படம். கண்ணுக்கு புதுமையாக இருக்கும். ஈயின் அழகு அனைவரையும் கொள்ளைகொள்ளும்........மிச்சத்தை திரைஅரங்கில் பார்க்கவும்.
0 comments:
Post a Comment