ஜிம் கேரி நடித்த மாஸ்க் படத்தின் தொடர்ச்சி
என்று யாரும் நினைக்க வேண்டாம். அது செம ஹிட் ஆனா படம். இது செம பிளாப் ஆனா படம். 2005இல் வெளியானது.
லாரன்ஸ் கட்டர்மேன் இயக்கத்தில் ஜாமி கேனேடி
நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் ஆரம்பம் ஆனதும் தெரியாது முடிவதும் தெரியாது.
ஒரு நாய், நாயகன், குழந்தை, வில்லன் மற்றும் குழந்தையின் அம்மா எவர்கள் மற்றுமே
இத்திரைப்படத்தின் கதாபாத்திரங்கள்.
படம் ஆரம்பமான உடனே நமக்கு தோர் திரைப்படத்தின்
கதையை ஒருவர் கூறுவார்(தோர் பார்க்காதவர்களுக்கு). இதில் வரும் தோர் மற்றும் லோகி
போன்றவர்களின் சிறப்பினை கூறிவிட்டு வழக்கம் போல லோகி ஒரு கொடும்கோல் வில்லன்
என்றே அவரை அறிமுகம் செய்கிறார் ஒரு மியூஸியம் அதிகாரி. அங்கிருந்து புறப்படும்
வில்லன் தான் தேவலோகத்தில் தொலைத்த மாஸ்க்கை தேடி பூலோகம் வந்திருப்பது தான்
கதை(கௌண்டமணி போல).
நாயகன் குழந்தை பெற விருப்பன் இல்லாமல்
இருப்பார். ஆனால், அவரது மனைவி குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவார். நாயகனின்
பெயர் டிம். இவர் ஒரு பொம்மை விளையாட்டு காட்டும் இடத்தில் பணி புரிகிறார். ஒரு
நாள் அவரது நாய்(ஓடிஸ்) அந்த மாஸ்க்கை எடுத்து வந்து அவரிடம் தருகிறது அதை அவர்
போட்டு கொண்டு சுற்றுகிறார். அதில் அவர் செய்யும் லூட்டிகள் தான் மிச்ச காட்சி.
அதே களைப்புடன் வீட்டுக்கு சென்று குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார். குழந்தையும்
பிறக்கிறது (அபார சக்தியுடன்)
லோகியின் தந்தை லோகிக்கு காலக்கெடு நிர்ணயித்து
சென்று விடுகிறார். ஆதலால், ஒவ்வொரு வீடாக சென்று அந்த மாஸ்க் மற்றும் குழந்தையை
தேடுகிறார். இதன் நடுவில் டிம்மிடம் குழந்தையை விட்டு நாயகி வேலை காரணமாக வெளியூர்
செல்கிறார். இனி குழந்தை அடிக்கும் லூட்டியை தாங்க முடியாமல் டிம் திணறுகிறார்.
குழந்தை(அல்பி) பிறந்தவுடன் தன்னை யாரும்
கவனிக்கவில்லை என்று என்னி குழந்தையை நாய் ஓடிஸ் கொன்று விட நினைத்து கடைசியில்
பல்பு வாங்கிகொல்கிறது.
லோகி கடைசியில் குழந்தையை கண்டுபிடித்து
விடுகிறான். அந்த மாஸ்க்கை கொண்டு வந்து கொடுத்துவிட்டு குழந்தையை பெற்றுகொள்ளுமாறு
சொல்லிவிட்டு குழந்தையுடன் சென்று விடுகிறார். பிறகு ஓடிஸ்ஸி டம் அந்த மாஸ்க்கை
தரும் படி காலில் விழாத குறையாய் கேட்டுவிட்டு எப்படி வில்லனை சமாளிக்குறார்
என்பதே கதை...
நச்சுன்னு நாலு:
1.
ஹனி நீங்க வீட்ல இருங்க, நான் பக்கத்துக்கு
வீட்டுக்கு போய் அவரிடம் குழந்தைக்கு ஏற்ப்பாடு செய்துக்குறேன்.
2.
என்னை எனக்காக விரும்புங்கள், நான் எப்படி
இருக்க கூடாது என்பதற்காக என்னை வெருக்காதீர்கள்.
3.
நான் தோல்வி அடைய வேண்டும் என்பதற்காகவே என்னை
நீங்கள் அனுப்புகுறீர்கள்.
4.
அவன நீ கொன்னாலும் அவன் உன் மகன். அதில் எந்த
மாற்றமும் கிடையாது.
கொசுறு:
இது குழந்தைகளுக்கான படம். ஒன்றரை மணிநேரத்தில் முடிந்து
விடும். போர் அடிச்சால் பார்க்கலாம். ஜிம் கேரியின் நடிப்பை இவர்களிடம் எதிர்பாக்காதீர்கள்.
இது மிகவும் பழைய படம் அல்லவா?
ReplyDeleteநானும் பார்த்து விட்டேன். அப்படியொன்றும் எனக்கு இந்த திரைப்படத்தில் ஈடுபாடு வரவில்லை...
சிறு வேண்டுகோள்: pop up விண்டோவை அனைத்து விடுங்கள்... கருத்துரை வழங்க கால தாமதம் ஏற்ப்படுகிறது...
நன்றி வெற்றி.
ReplyDelete