Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail
Showing posts with label அரசியல் மேடை. Show all posts
Showing posts with label அரசியல் மேடை. Show all posts

Saturday, July 28, 2012

சோனியாவுடன் நேர்காணல்!!!



நிருபர்:           வணக்கம் மேடம்.

சோனியா ஜி:   குட் மார்னிங்னு சொல்லுங்க. இல்லையா போண்ஜோவ் னு சொல்லுங்க. வணக்கம்னு மட்டும் சொல்லாதீங்க? எனக்கு தமிழ கண்டாலே பிடிக்காது.

நிருபர்:         குட் மார்னிங் மேடம். உங்க கட்சியை சார்ந்த பிரணாப் முகர்ஜி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதுக்கு என் வாழ்த்துக்கள் மேடம்.

சோனியா ஜி:   ரொம்ப தேங்க்ஸ். அவர் ஜெய்ச்சதுக்கு நான் தான் ஒட்டு போட்டவுங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்.

நிருபர்:         ஏன் மேடம். இந்த தேர்தல் முடிஞ்சதுல இருந்து நீங்க ரொம்ப சந்தோசமா இருக்கீங்களே எதாவுது உள்குத்து இருக்கா ஜி?

சோனியா ஜி:   இந்த சோனியா எத செஞ்சாலும் அதுல ஒரு உள்குத்து இருக்கும். கட்சில இருந்த பெருசுங்க பட்டியல்ல மொதல்ல இருந்தே இந்த பிரணாப் என் பேச்சை கேட்கவே மாட்டான். இப்ப அவன் டம்மி பீஸ் ஆகிடான்ல! அதான் சந்தோசம்.

நிருபர்:         மேடம், இப்ப அவர் குடியரசு தலைவர். அவர அவன் இவன்னு சொல்லாதீங்க.

சோனியா ஜி:   உங்களுக்கு தான் அவன் அதிபர். எனக்கு இல்ல(நான் இத்தாலி )

நிருபர்:         இந்த தேர்தல்ல உங்க கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதுனால இந்த நாட்டுக்கு எதாவுது நன்மை ஏற்பட வாய்ப்பு உண்டா?

சோனியா ஜி:   நாட்டுக்கு இருக்கானு தெரியாது. பட், என் வீட்டுக்கு இருக்கு!

நிருபர்:           புரியலையே?

சோனியா ஜி:   ராகுல்ல அடுத்த பிரதமரா ஆக்கலாம்னு இருந்தேன். எங்க அதுக்கு எடஞ்சலா பிரணாப் இருப்பாரோனு அவர டம்மி பீஸ் ஆக்கிடேன். சோ, இனி மை சன் இஸ் நெக்ஸ்ட் பி.அம்.

நிருபர்:           அடங்கோ! இவ இவ்வளவு பெரிய தில்லாலங்கடினு தெரியாம போச்சே. மேடம், உங்களோட அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

சோனியா ஜி:   பிரணாப் பிரச்சனையை முடிஞ்சுது. இனி அடுத்து அண்ணா ஹசாரே தான். ஹி இஸ் மை நெக்ஸ்ட் டார்கெட்.

நிருபர்:           மேடம், எதுனலா இந்த தேர்தல்ல நீங்க ஜெயச்ச உடனேயே மம்தாவும், சரத் பவாரும் பிரச்சன பண்றாங்களே இது பத்தி நீங்க என்ன சொல்றீங்க?

சோனியா ஜி:   இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு. மம்தாக்கு ஜெ மாறியே ஆனவம் வந்திருச்சு. இந்த பவார் இவருக்கு மந்திரி சபைல இரண்டாம் இடம் வேண்டுமாம். இவனெல்லாம் மதிச்சு கூட்டணில வச்சிகுடதே பெருசு. இரண்டாம் இடத்த இவனுக்கு குடுத்துட்டு நான் எங்க போறது. சிதம்பரம் வேற அமைதியாவே இருக்காரு. எப்ப பிரச்சன வரும்னு தெரியல.

நிருபர்:           மேடம், எப்படி முலாயம் சிங்கையும், மாயாவதியையும் சம்மதிக்க வச்சீங்க?

சோனியா ஜி:   ஓ, அதுவா. எல்லாம் பக்கா பாலிடிக்ஸ் தான். என்ன பண்ணி என்ன பிரயோஜனம்.

நிருபர்:           ஒய் மேடம்?

சோனியா ஜி:   முலாயம் சிங்கோட ஒட்டு செல்லாத ஒட்டு. இவனுக்கு ஓட்டே போட தெரியல இவனை எல்லாம் வச்சிகுட்டு என்ன தான் பண்றதோ. ஐ மீன் கூட்டணில.

நிருபர்:           நீங்க ஏன் ஜி அப்துல் கலாம ஆதரிக்கல?

சோனியா ஜி:   அட, அவருக்கு ஒண்ணுமே தெரியலீங்க.இவற மாதிரி ஆளுங்க அதிபரா வந்தா நம்ம நாடு முன்னேறாது.

நிருபர்:           ஜி, அவரு பெரிய விஞ்ஞானி. அவருக்கு போய் நாட்ட வழி நடத்த தெரியாதுனா எப்படி?

சோனியா ஜி:   விஞ்ஞானியா இருந்தா மட்டும் போதுமா. ஊழல் பன்ன தெரியணும், நான் சொல்ற எல்லாத்துக்கும் சரி சரின்னு தலைய ஆட்ட தெரியணும். அட இதெலாம் விட என்னை காட்பாதர்ரா ஏத்துக்கணும். என்னோட அடுத்த பிளான் 3G. இவரு இருந்தா நடக்குமா????சோ, பிரணாப் இஸ் மை சாய்ஸ்.

நிருபர்:           சரிதான். இப்டி இருக்குறதுக்கு அவர் விஞ்ஞானியாவே இருக்கட்டும். மேடம், அமெரிக்க டைம்ஸ் பத்திரிக்கை நம்ம பிரதமர செயல் திறன் அற்றவர்னு சொன்னாங்களே அத பத்தி நீங்க என்ன சொல்றீங்க?

சோனியா ஜி:    என்னங்க ஒரு பத்திரிக்கை நிருபர் நீங்க உங்களுக்கே தெரியாதா. அதான், அவுட்லுக் பத்திரிக்கைல ஒபாமா செயல்திறன் அற்றவருன்னு சொல்லி பதிலுக்கு அறிக்கை விட்டோமே தெரியலையா?

நிருபர்:           ஜி, இருந்தாலும் உங்க கட்சிக்காரங்க பன்னினது ரொம்ப ஓவர். அமெரிக்க டைம்ஸ் பத்திரிக்கை அறிக்கை வெளியிட்டதுக்கு இங்க இருக்குற டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைய உங்க ஆளுங்க எரிச்சு போராட்டம் பண்ணுனாங்க. ரெண்டும் வேற வேற நிருவனம்னு அவுங்களுக்கு தெரியாதா.

சோனியா ஜி:    நீங்க வேற, நான் டைமெக்ஸ் வாட்ச் கம்பெனி முன்னாடியும் போராட்டம் பன்ன சொன்னேன். ஆனா, எவனும் பண்ணல. ஐ பீல் வெரி அப்செட்.

நிருபர்:           வெலங்குச்சு போ. இதுக்கு தொண்டர்களே பரவாயில்லை.
நிருபர்:         மேடம், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திக்விஜய் சிங் தன்னோட பதவிய ஏன் ராஜினாமா பண்ணிட்டார்.
சோனியா ஜி:    ஓ, அதுவா என் மருமகனுக்கும் அவருக்கும் ஒத்து போகல. சோ, இ சேட் டு ரிசைன்..
நிருபர்:         மேடம், காமன் வெல்த் கேம்ஸ் ஊழல்ல உங்க மருமகனுக்கும் தொடர்பு இருக்குதாமே. நீங்க தான் அவர காப்பாத்துனதா சொல்றாங்க.

சோனியா ஜி:    ஹு சேட் திஸ்? என் மருமகனுக்கு நான் ஒன்னும் சப்போர்ட் பன்னல. ஹி இஸ் வெரி டேலேன்ட். அவரே தான் மறைச்சிட்டாரு.

நிருபர்:         அப்ப, ஊழல் நடந்தத ஒத்துக்குறீங்க?

சோனியா ஜி:    அட, யாருங்க நீங்க. காங்கிரஸ் = ஊழல். இது தான் எங்களோட தாரக மந்திரம்.

நிருபர்:         உங்களோட எதிர்கால திட்டம் என்ன ஜி?

சோனியா ஜி:    நான் அதிபரா ஆகணும். ராகுல் பிரதமரா ஆகணும், என் மகள் தில்லிக்கு முதல்வரா ஆகணும். என் மருமகன் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபரா ஆகணும். பேரப்புள்ளைங்க ஆளுக்கு ஒரு மாநிலமா எடுத்து அதிகாரம் பண்ணனும். இவ்வளவு தான்.

நிருபர்:         என்ன, இவ்வளவு தானா? மேடம், ஒரு வேலை இந்தியாவினல் எதாவுது புரட்சி நடந்துவிட்டால் என்ன செய்வீங்கோ?

சோனியா ஜி:    உடனே, இத்தாலிக்கு எஸ்கேப்!!!!!

Monday, July 09, 2012

கலியுக சகுனி


கர்நாடக மாநிலத்திற்கு இத விட ஒரு பெரிய சோதனை தேவையில்லை...எல்லாம் எடியுரப்பாவின் திருவிளையாடல் தான். எடியூரப்ப ஊழல் வழக்கில் சிக்கி சின்னா பின்னம் ஆனதுக்கு அப்புறம் கொஞ்சமாது அடங்குவாருனு நெனச்சன் ஆனா, மனுஷன் நம்ம கலைஞர் மாதிரி ஏதாது சகுனி வேலை செஞ்சு தன்னை காப்பாதிக்குக்றார். லோக்அடழ்க் யே இவற பாத்து என்ன கைய புடிச்சு இழுத்தியானு காலில் விழும் அளவிற்கு இவரது நடிப்பு அருமையாக இருந்தது. பா ஜா கா மேலிடத்திற்கு சதானந்த கௌடா பெயரை சிபாரிசு செய்து தன்னை ஒரு கிங்மேக்கர் ராக ஆக்கி கொண்டார்.

ஒரு வழியாக வழக்கை வேறு வலையில் திருப்பி விட்டு மீண்டும் தன்னை முதல்வராகா அமர்திகொள்ள கடும் போராடி வந்தார். மேலிடம் அசையாத காரணத்தினால் சில சகுனி மற்றும் உல் குத்து வேலைகளை அரங்கேற்றி தற்போது சதானந்தா பதவியையும் பறித்தார். நம் கலைஞரை போன்றே இவருக்கும் என்ன ஒரு சகுனி புத்தி. தற்போது ஜகதீஷ் ஷெட்டரை முதல்வராக்கியுள்ளார். இவரையாது நிலைத்து நிற்க விடுவாரா இல்லையா??பொறுத்திருந்து பார்ப்போம் ..

Sunday, June 24, 2012

பக்கா பாலிடிக்ஸ்


ரஷ்யா, எகிப்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்கள் அதிபரை தங்கள் விருப்பம்போல் தேர்ந்தெடுத்து விட்டனர். அடுத்து இந்த அதிபர் தேர்தல் வரிசையில் இந்தியா தயாராகி வருகிறது. இங்கு அதிபருக்கு முக்கிய வேலைகள் ஒன்றும் இல்லையென்றாலும் அடுத்த வருடம் வரும் நாடாளமன்ற தேர்தலுக்கு இந்த நாற்காலியின் உதவி தேவை. பெருமதிப்பிற்குரிய திரு. குரோஷி அய்யா அவர்கள் தலைமை தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதால், இனி வரும் தேர்தல்கள் எவ்வாறு இருக்குமோ என்ற ஐயம் மக்களிடம் நிலவியுள்ளது.
தேர்தல் ஆணையம் அதிபருக்குகான தேர்தல் தேதி அறிவித்த நிலையில் எந்த கட்சிகளிடமும் எந்த ஒரு பெரிய சலனம் இல்லை. ஆனால், தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. எல்லாம் காங்கிரஸ் கட்சியின் திருவிளையாடல் தான். திரு.கலாம், சோம்நாத் சாட்டர்ஜி, மன்மோகன் சிங், சங்மா, மீரா குமார், என பட்டியல் நீண்டு கொண்டே இருந்த சமயத்தில் திடீரென பிரணாப் பெயரை சோனியா ஜி அறிவித்தது அனைவரையும் சற்று யோசிக்க வைத்துவிட்டது. பல கட்சிகள் தங்கள் ஆதரவை பிரணாப் முகர்ஜிக்கு அளித்து வருவதால், அவர் அதிபர் ஆவது உறுதி என்றே தோனுகிறது.
இந்த தேர்தலில் திரு. கலாம் தான், அதிபர் தேர்தலில் நிக்கவில்லை என்று அறிவித்ததற்கு காரணம் முலாயம் சிங்க்ஹும், மாயாவதியும் அடித்த அந்தர் பல்டியே காரணம். கலாம் அதிபராய் இருந்த போது அவர் பெயரை அலெக்சாண்டர்க்கு எதிராக முன்னிறுத்தி அனைவரின் கவணத்தையும் திருப்பினார் முலாயம். இந்த தேர்தலிலும் மம்தாவுடன் சேர்ந்து கலாமுக்கு அவர் ஆதரவை அளித்தார். ஆனால், கடந்த காலங்களில் அவருக்கு ஏற்பட்ட சில சில பிரச்சனைகளை நினைத்து காங்கிரஸிடம் சாய்ந்தார். மாயாவதியும், முலாயமும் இரு வேறு துருவங்கள், ஆனால் வேறு வழிஇன்றி இன்று இரண்டு காங்கிரஸ் பக்கம் சேர்ந்தது.
கடந்த 2007ஆம் வருடம் முலாயம் மற்றும் அவரது மகன் அகிலாஷ் சிங் சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி தவித்தனர். இது காங்கிரஸ் கட்சியின் அரசியல் விளையாட்டு. இவருக்கு இப்படி என்றால் முதல்வர் மாயாவதி மீது ஊழல் குற்றசாட்டு தொடர்பான விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட்டார். அந்த தருணத்தில், இந்தியாவுக்கு பாதகமான இந்திய-அமெரிக்க அணிசக்தி ஒப்பந்ததில் கையெழுத்து போட்டதை தொடர்ந்து இடது சாரிகள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் ஆட்சி கவிழும் நிலைமை ஏற்பட்டது. (30 எம்.பி.க்கள் பற்றாகுறை.)
அப்போது, முலாயம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கவில்வதை தாங்கமுடியாது என்று தனது சமாஜ்வாடி கட்சியின் 39 எம்.பி.க்கள் ஆதரவை அளித்தார். இதன் மூலம் காங்கிரெஸின் ஆட்சி தப்பித்தது. முலாயம் மீது இருந்த சொத்து குவிப்பு வழக்கும் குப்பைக்கு போனது. ஆனால், அப்போது காங்கிரஸ்க்கு எதிராக ஒட்டு போட்டதால் மாயாவதிக்கு பல இடைஞ்சல். தற்போது நன்றாக உணர்ந்த மாயாவதி தனது பகுஜன் சமாஜ்வாடியின் 22 எம்.பி.க்கள் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இப்படி வட மாநிலத்தில் இருதுருவங்கள் ஒன்றாக இணைந்தாலும் இங்கு தமிழகத்தில் இரண்டு திராவிடகட்சிகளும் முரண்டு பிடித்து தான் கொண்டிருக்கிறது. ஒருபக்கம் சங்மாவுக்கு ஆதரவாக ஜெ, மற்றொரு பக்கம் நம்மை பொலம்ப வைத்த பிரணாப்முகர்ஜிக்கு ஆதரவாக கலைஞரும் உள்ளனர். பிரணாப் ஜெய்ப்பது உறுதி என்றாலும் முரண்டு பிடிக்கும் சுபாவம் கொண்ட ஜெவுக்கு அதரவாக பா.ஜா.காவும், நவீன் பட்நாயக்கும் உள்ளனர்.
காணவில்லை!!!    
1.உத்தர் பிரதேஷ் மாநில தேர்தலில் சுறுசுறுப்பாக திரிந்த ராகுல் காந்தியை காணவில்லை. இருக்கும் இடம் தெரிந்தால் டெல்லிக்கு தகவல் தெரிவிக்கவும்.
2.கபில் சிபில். இணைத்தள மக்களிடம் சிக்கி சின்னா  பின்னாமான இவர் கடந்த மூன்று மாதங்களாக இருக்கும் இடம் தெரியவில்லை.  
3.வத்ரா. சோனியாவின் மருமகன். புல்லட் பாண்டி. எங்கு சென்றாரோ யாருக்கு தெரியும்.
நிம்மதி பெருமூச்சு!!!
யாருக்கு நிம்மதி இருக்குமோ தெரியல, ஆனா நம்ம உள்துறை மந்திரி சிதம்பரம் நிம்மதியா இருப்பார். அவருடன் மல்லு கட்டும் நிதி இப்போது வெத்து வேட்டு ஆக போகிறார்.

Tuesday, May 08, 2012

அமெரிக்காவின் ஆதிக்கம்


ஒருத்தன் கிட்ட ஒண்ணுமே இல்லைனாலும் எல்லாம் இருக்குற மாதிரி சீன் போடுற நாடுகள் வரிசைல அமெரிக்காவுக்குத்தான் முதலிடம். எப்ப எவன் வீட்ல சண்டை வரும் பஞ்சாயத்துக்கு நாம உள்ள போலாம்னு அடுத்தவன் டவுசர பாக்குறதே அமெரிக்காவுக்கு பொழப்பா போச்சு. உலகத்துல இருக்குற எல்லா நாடுகள் உள்விவகாரங்கள்ளையும் தலகிட்டு அவுங்களுக்கே புத்திமதி சொல்ல வேண்டியது. மத்த நாடுகள் மாதிரி ரஷ்யா மட்டும் சும்மா இருக்காம பதிலுக்கு எல்லாம் எங்களுக்கு தெரியும் நீங்க மூடுங்கனு சொல்லி பல்பு குடுக்குறாங்க.
இப்ப கூட ஹிலாரி கிளின்டன் இந்தியாவுக்கு வந்தமா போனமானு  இல்லாம நமக்கே புத்திமதி சொல்லிட்டு போறாங்க. இந்தியா இரான்ல எண்ணெய் இறக்குமதி செய்றத குறைக்க வேண்டுமாம். இரான் அணு ஆயுதம் தயாரிக்குறாங்க, அது மத்த நாடுகளுக்கு அச்சத்தை எற்படுதிள்ளதுனு ஒரு காரணத்த சொல்றாங்க. ஏன், அமெரிக்கா கிட்ட அணு ஆயுதம் இல்லையா என்ன?நீங்க மட்டும் அணு ஆயுதத்துல பெரிய நாடா இருக்கணும் மத்தவன் எல்லாம் கை கட்டி வாய் பொதி இருக்கணுமா? இந்தியாவும் தான் அக்னி ஏவுகனையை சோதனை செஞ்சிது. அப்ப எங்கடா போனீங்க? உங்களுக்கு என்ன இராக்க அழிச்சு எல்லா எண்ணையையும் கொள்ளை அடிச்சிடீங்க. இங்க நாங்க பெட்ரோலுக்கு சிங்கி அடிக்கணுமா? அதோட நிருத்தவேண்டியதுதான அதுஎன்ன இந்தியால இருந்துட்டு சீனா, ஜப்பான், இஸ்ரேலுக்கு புத்திமதி சொல்றது.
இஸ்ரேல் 30 ஆண்டுகளாக தங்களை காபாத்திக்குறாங்க, பின்னாளில் இரான் தனது அணு ஆயுதத்தை பயன் படுத்தி தாக்கினால் இஸ்ரேலின் நிலைமை என்ன ஆகும் என்று கேட்கிறது. இது இஸ்ரேலுக்கு எச்சரிக்கையா இல்லை இரானுக்கு ஐடியாவா?. பாலஸ்தீனதுக்கு ஆயுதாத்தை விற்று இஸ்ரேல் மீது போர் தொடுத்து உங்க கஜானாவ நிரப்பியாச்சு இப்ப ஊருக்கு நல்லவன் வேஷம் போடுறது.
ரஷ்யாவ எப்டியாது அளிச்சிர வேண்டும்னு அமெரிக்காவுக்கு நீண்ட கால எண்ணம். நேட்டோ படைகள்ள முன்னாள் சோவித் நாடுகளையும் இப்போது இணைத்து ஏவுகளை ஆராய்ச்சியில் அமெரிக்கா இறங்கி உள்ளது. இதுக்கு ரஷ்யா தகுந்த பதிலடி கொடுத்து மிரட்டி உள்ளது. நேட்டோ படையின் ஏவுகணை தளத்தையே அளித்து விடுவோம் என்று எச்சரித்துள்ளது.
எங்க தில்லிருந்தா ரஷ்யாகிட்ட மோதி நீ பெரிய பருப்புன்னு நிருபி பார்க்கலாம்?

Monday, April 16, 2012

பறிக்கப்படும் மற்றொரு உரிமை


மேற்கு வங்காள முதல்வரின் தேவையில்லா கைது நடவடிக்கையினால் பல இணையதள நண்பர்கள் கடுப்பாகி உள்ளனர். ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதியை மாற்றி முகுல் ராயை நியமித்தார் மேற்கு வங்காள முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி. இந்த செயலை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பல கட்டுரைகளும், கார்ட்டூன்களும் பெரிய அளவில் பரவின.
ஜாதிவ்பூர் பல்கலைகழக வேதியல் பேராசிரியராக உள்ள திரு. அம்பிகேஷ் மகபத்ரா, இது போன்று ஒரு கேலிக்கை சித்திரத்தை மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்துகொண்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டி அவர் கைது செய்யபட்டார். இந்த கைது நடவடிக்கைக்கு மேற்கு வங்காளம் மட்டுமல்லாது  மற்ற இடங்களிலும் கடும் எதிர்ப்பு பரவியது.
புதிது புதிதாக திட்டங்களை அறிவித்துவிட்டு அது சாத்தியமிலாது போனால் அதிகாரிகளை சாடுவது, தனக்கு ஒத்துழைப்பு தராத சில அதிகாரிகளை மாற்றுவதுமே தற்போதைய முக்கிய வேலையாக கொண்டு இருப்பவர் அவர்.
ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வுக்கு காரணமான தினேஷ் திரிவேதியை நீக்கி, முகுல் ராயை நியமித்தார். பின்னர், கருணாநிதி போல மத்திய அரசை மிரட்டி தன் வேலையை முடித்து கொண்டும் காலத்தை ஒட்டிகொண்டிருகிறார். இதை சித்தரிக்கும் பல கார்ட்டூன்களும், கட்டுரைகளும் இன்னும் இணையதளங்களில் இருகின்றன. இதை பகிர்வது அவரவர் உரிமை சார்ந்தது, அதற்காக அனைவரையும் கைது செய்தால் பல படித்த நபர்கள் சிறையில் தான் இருக்கவேண்டும்.
மம்தாவுக்கும் நமது முதல்வரை போன்று “தான்” என்ற எண்ணம் வந்துவிட்டது. இவரை போலவே அவரும் சில தேவையில்லா மாற்றங்களை செய்து வருகிறார். பள்ளி மாணவர்கள் பாட புத்தகத்தில் கம்யூனிஸம் தொடர்பான வரலாற்று பாடத்தை நீக்க உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, பேரறிஞர் கார்ல் மார்க்ஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் நீக்கியுள்ளார். இது கார்ல் மார்க்ஸ் அவர்களை அவமதிபதர்க்கு சமமாகும்.
சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் கபில் சிபில் இணையதளங்களில் இந்தியாவை சித்தரிக்கும் செய்திகளை நீக்கிவிடுமாறு கூகிள், யாஹூ, பேஸ்புக் போன்ற நிறுவன இந்திய அதிகாரிகளிடம் ஒரு பட்டியலை அளித்தார். கூகிள் அந்த பட்டியலை வெளியிட்டது. அதில், நீக்க வேண்டும் என்று குறிப்பிட்ட எந்த ஒரு செய்தியும் இந்தியாவை சார்ந்தது அல்ல, எல்லாம் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மற்றும் மன்மோகன் சிங்க் போன்றோர்களை சித்தரித்த செய்திகள் என்பது குறிப்பிடபட்டது.
இப்படி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு நமது நாட்டின் அரசியல்வாதிகள் பெரும் ஆட்டம்போட்டு கொண்டிருக்கின்றனர். நம்மிடம் இருக்கும் அதிகபட்ச பேசும் உரிமையை கூட இவர்கள் பறிக்கின்றனர். ஒரு வேலை, ஜனவரியில் தில்லியை நோக்கி இரண்டு பட்டால்லியன்கள்  பாராளமன்ரத்தை நெருங்கி இருந்தால் ஒரு வேலை, வளைகுடா பகுதிகளில் தற்போது, நடந்துகொண்டிருக்கும் ஒரு புரட்சி உறுவாகி இருக்கும். அப்போதாவது, நமக்கு ஒரு விடிவு காலம் பிறந்திருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். ஆனால், அதிலும் அரசியல் விளையாடிவிட்டது....
 

வந்து போனவுங்க