Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail
Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Saturday, December 15, 2012

நீதானே என் பொன்வசந்தம்-விமர்சனம்



வணக்கம் நண்பர்களே. இரண்டு மாதங்களுக்கு பிறகு இந்த பதிவை எழுதுகிறேன்.



இந்த படத்தில் யார் நடித்தது இயக்கியது போன்ற தகவல்கள் எல்லோருக்கும் தெரியும் என்ற காரணத்தால் நாம் நேரே விமர்சனத்திற்கு செல்வோம்.

கதை என்ன என்று பார்த்தால் கெளதம் அரைத்த மாவை தான் திரும்பவும் அரைத்துள்ளார். ஜீவா சமந்தா இருவரும் சிறு வயது முதல் சேர்வது பிரிவது இது தான் முழுக்கத்தை. இதை வைத்து கொண்டு ரெண்டு முக்கால் மணி நேரம் நம்மை நிம்மதியாக தூங்க வைக்கிறார்.

ஏற்கனவே ஒரு நண்பர் என்னை விமர்சனம் என்ற பெயரில் கதையை நீங்கள் கூறிவிடுகிறீர்கள் என்று சொன்னதன் காரணமாக இதில் நான் படத்தின் கதையை(?) சொல்லாமல் அதன் நெகடிவ் பாயிண்ட்ஸ் மட்டும் சொல்கிறேன்.

முதலில் இந்த கதையின் கெட்டப் ஜீவாவிற்கு பொருந்தவேயில்லை. பேசாமல் நானியே தேவலாம் என்று யோசிக்க வைக்கிறது. ஜீவா முகமுடி, மற்றும் இந்த படத்தில் இரே மாதிரி இருக்கிறார். பழைய sms தோற்றம் தான் அவருக்கு பொருந்தும். ஒரு காட்சியில் ஜீவா  நீதானே எந்தம் பொன்வசந்தம் பாடலை மேடையில் பாடுகிறார் அது கௌதமின் குரல். கொஞ்சம் கூட செட் ஆகவே இல்லை.

சந்தானம் இல்லாமல் இருந்தால் படம் ஒரு வாரம் கூட கண்டிப்பா ஓடாது என்றே சொல்லலாம். சுமாரா இருக்கு என்று சொல்பவர்கள் கூட சந்தானதிர்காகவே சொல்வார்கள். இடைவேளைக்கு பிறகு சந்தானத்தின் விண்ணை தாண்டி வருவாயா-௨ என்று படம் ஆரம்பமாகிறது. பிறகு படம் முடியும் வரை வெறும் பாடல்கள் மட்டுமே.

படத்திற்கு பலம் பலவீனம் இரண்டுமே பாடல்கள் தான். இசைஞானியின் இசை என்று மிகுந்த எதிர்பார்ப்பை பாடல்கள் வெளியான நாளே ஹிட் ஆகி படத்தின் எதிர்பார்ப்பை எகுற வைத்தது. பின்னல் கெளதம் கொடுத்த சில வெட்டி விளம்பரங்கள், டீசெர் என எல்லாமே கடைசியில் வேகாத பருப்பாக மாறிவிட்டது. மூன்று மாதங்களுக்கு மேல் படத்தை ரிலீஸ் செய்யாமல் இழுத்தடித்து ஒரு தவறு. இந்த லட்சணத்தில் இதை அடுத்த வருடம் பிப்ரவரி பதினான்காம் நாள் வெளியிடலாம் என்ற முடிவில் வேற கெளதம் இருந்தார்(!). இடைவேளைக்கு பிறகு சும்மா ஒரே பாட்டா வந்து கொள்ளுது. ஆடியோவில் கேட்க நல்ல இருந்தாலும் திரையில் ஏனோ நம்மை முகம் சுளிக்கவே வைக்கிறது. இதற்க்கு கெளதம் தான் பொறுப்பு. பின்னணி இசையில் இளையராஜா சரியாக கவனம் செலுத்தவில்லையா இல்லை கெளதம் தான் இது போன்ற tune வேண்டும் என்று அடம் பிடித்து போட்டாரா என்ற சந்தேகம். அதுவும் சரியல்லை.

பாதி நேரம் பின்னணி இசை இல்லாமல் ஒருபக்கம் நகர்ந்து மறுப்பக்கம் படத்தொகுப்பு மிகவும் மோசமாக உள்ளது என்று படம் பார்த்து கொண்டிருக்கும் எல்லோரும் சொல்லும் அளவிற்கு antony சொதப்பியுள்ளார்.

ஏற்கனவே கௌதமின் வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என romance படங்களை பார்த்ததால் இது மனதில் ஏனோ நிக்க தவறிவிட்டது. dialogue delivery இயற்கையாக இல்லை. மணிரத்னம் படத்தில் வருவது போல ஜீவா நாயகியை வர்ணிக்கும் காட்சிகள் துண்டு துண்டாக உள்ளது.

கொசுறு:
தெலுகிலும் இந்த படம் பார்த்தவர்கள் ஒரே வரியில் ஸ்ஸ்ஸ்  என்று முடித்து விட்டனர்.

Tuesday, October 02, 2012

அலி ஜி- இண்டா ஹவுஸ்



சேச்சா பேரான் கோஹேன் இவர் நடித்து கதை திரைகதை அமைத்து இயக்கிய இந்த படம் 2006இல் ரிலீஸ் ஆகி செம ஹிட் ஆனது. இந்த படம் ஐரோப்பா நாடுகளில் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டது. காரணம் இவரது முந்தய படமான போராட் படத்தின் காட்சி அமைப்பு அதை ஆசியா நாட்டில் ரிலீஸ் செய்ய விடாமல் செய்துவிட்டது.
இந்த படத்தில் கதை என்பது ஓரளவு இருக்கு என்றே வைத்துகொன்டாலும் அதை பின்னுக்கு தள்ளுவது படத்தின் காட்சியமைப்பு தான். போராட் பார்த்தவர்களுக்கு இது எப்படி இருக்கும் என்று தெரியும்.
சும்மா சுத்திட்டு திரியும் நாயகன் அவனுக்கு எல்லா பழக்கமும் உண்டு. ஒரு பள்ளியில் பாடமும் நடத்துகிறார். அது வாழ்க்கை பாடமே தவிர ஏட்டு சுரக்காய் அல்ல. திடீரென அந்த பள்ளிக்கு நிதி உதவி நிறுத்த படுகிறது. இதை எதிர்த்து ஹீரோ ஒரு வித்யாசமான முறையில் உண்ணாவிரதமிருக்கிறார்.
அப்போது, தான் பிரதமர் பதவிக்கு வரவேண்டும் என்று துணை பிரதமர் துடிக்கிறார். நடக்கவிருக்கும் இடை தேர்தலில் நாயகனை நிக்க வைத்தால் கண்டிப்பாக தோற்று விடுவோம். இதை காரணம் காட்டி மத்த எம்பி க்களின் ஆதரவை நாம் பெற்றுவிடலாம் என்றும் திட்டம் தீட்டி. நாயகனை தனது கட்சியின் வேட்பாளராக அறிவிக்கிறார்.
நாயகன் பிரச்சாரம் செய்யும் விதம் ஒரு தினுசாக இருக்கிறது. இருந்தும் நாயகன் எப்படியோ வெற்றி பெற்று விடுகிறார். இதன் பிறகு பல சுவாரசியமான காட்சிகள் படத்தில் இருக்கிறது.
 அவை அனைத்தும் சிரிப்பதர்க்கே தவிர. கதையா காணோமே என்று யோசித்தால் நீங்கள் புத்திசாலி ஆகிவிடலாம்.
நச்சுன்னு நாலு
மத்த படத்தின் விமர்சனம் எழுதுவது போல இதுல நாலு வசனம் எழுதினா அப்புரம் என்ன விரட்டி விரட்டி அடிப்பாங்க. ஏன்னா, ஒவ்வொரு வசனமும் அந்த அளவுக்கு ரன கொடுரமா இருக்கும். இருந்தாலும் ஒரு வசனம் எனக்கு புடிச்சத மட்டும் கஷ்டப்பட்டு கண்டுபுடிசிருக்கேன். இதோ,

1.நீ துணை பிரதமரா எனக்கு வலது கையா இருக்கனும். முடியுமா?
இல்ல, நான் வழிய காட்டேன். இனி நீங்க தான் பாத்துக்கணும்
கொசுறு:
இது அமெரிக்கன் பை, வான் வில்தர் சீரியஸ் போன்ற படம். இதை தனியாகவே பார்க்குமாறு அறிவுருதபடுகிறது. எடாகுடமா மாட்டிகிட்டா கம்பெனி பொருப்பல்ல>>>> 

Sunday, September 23, 2012

மாலை பொழுதின் மயக்கத்திலே




இந்த படத்துல நடிச்சவுங்க ஒன்னும் பெரிய ஆளுங்க கிடையாது. ஆனா, படம் பார்க்க பார்க்க பெருசா நமக்குல்ல எதையோ வெதச்சிடுறாங்க. நாயகனாக ஆரி, நாயகியாக சுபா ஆகியோர் நடித்துள்ளனர். மயூரி சேகர் தயாரித்துள்ளார். குறும் படம் இயக்குனர் நலன் மற்றும் மெரீனா படத்தில் சிவகார்த்திகேயன் நண்பராக வரும் நபரும் இதில் இருக்கிறார்.
படம் முழுவதும் ஒரு காபி ஷாப்பில் நடக்கிறது. ஒவ்வொரு காபி கபேக்கு வரும் ஒவ்வொரு நபரின் மனநிலமையை அழகாய் திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் நாகேந்திர ராவ். இந்த படத்தை 2010 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, இப்போ இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் ரிலீஸ் ஆனது. பொருளாதார அளவில் படம் தோல்வியே என்றாலும் ஒரு சில ரசிகர்கள் மட்டுமே ரசிக்கும் படியாக படம் உள்ளது.
தயாரிப்பாளருக்கு செலவே இல்லாமல் படத்தை எடுத்து முடித்து விட்டார் இயக்குனர். இனி கதைக்கு வருவோம்.
இயக்குனராக வேண்டும் என்று முயற்சிசெய்துகொண்டிருகிறார் நாயகன். இவரது பார்த்தவுடனே காதல் ஒரு பக்கம் செல்கிறது, கதையே எழுததெரியாமல்  முழிக்கும் நபர் ஒருவர், கணவன் மனைவி சண்டை போட்டு கொண்டு சமாதானமாக இருக்க முயற்சி செய்து கொண்டு இருவர்.
இதற்கு நடுவில் காபி ஷாப்பின் மேனேஜர் மற்றும் ஊழியர்கள் என பல கதைகளை ஒரே படத்தில் வைத்திருக்கிறார். அதுக்காக எல்ல கதையையும் ஒரு வரியில்ல சொல்லிட்டாரு.

படத்தில் பாடல் ஒன்றும் பெரிதாக இல்லை. முதல் பாடல் மட்டுமே ஹிட்.
இந்த படம் பார்க்குற அளவு நல்லா தான் இருக்கும். ஆனா, சில விமர்சகர்கள் ஏன் இப்படி கமெண்ட் கொடுதிருகுறாங்க http://en.wikipedia.org/wiki/Maalai_Pozhudhin_Mayakathilaey

நச்சுன்னு நாலு:
1. ஹலோ பாஸ், ஜோஷிய காரன் மதியம் 2 மணிக்குள்ள ரோட்ல கால வைக்க சொல்லிஇருக்கான்.அப்ப தான் நம்ம படம் ஹிட் ஆகுமாம்.
2. சார், டிக்கெட் தரன்னு சொல்லிடு அவர் கிட்ட வித்துடீங்க.
நான், தரன்னு சொல்லல, வேணுமான்னு தான் கேட்டேன்.
3. கேப் போடு டா. போற்றுந்தன் மச்சான். ஆனா, எப்படியு மிஸ் ஆகிடுச்சு. மேனேஜர் எத்தன தடவ சொல்லி இருக்காரு கேப் போட்டு வெளிய சுத்துன்னு(காட்சியோடு பார்க்கவும்).
4. வெளியில மழை, உள்ள குளுறு, இளையராஜா சாங் வேற, இதுல ஐஸ்கிரீம் பக்கதுள்ள பொண்ணு. செம பீலிங்க்ஸ்...
கொசுறு:
படத்தில் கதை இல்லையென்றாலும் நமக்கு ஒரு அட்வைஸ் என்று கூட எடுத்து கொண்டு இந்த படத்தை பார்க்கலாம். ஹிட் ஆகாதது வருத்தமே.

Friday, August 31, 2012

முகமூடி - திரை விமர்சனம்



ஜீவா, நரேன், பூஜா ஹெட்கே, நாசர் ஆகியோர் நடித்த இத்திரைப்படத்தை மிஸ்கின் இயக்கியுள்ளார். யூ டிவி நிறுவனம் தயாரித்துள்ளது.
Martial Arts கலையை பயன்படுத்தி எடுத்துள்ளதாக பெரியஅளவில் விளம்பரம் செய்து வந்தார் இயக்குனர் மிஸ்கின். அதுமட்டுமல்லாது சூப்பர் ஹீரோ திரைப்படம் என்று வேறு சகட்டு மேனிக்கு அல்லிதேளித்தார். கடைசியில் படம் பே பே. டைட்டில் கார்டு போடும் முன்பே இத்திரைப்படம் ப்ருஸ் லீக்கு சமர்ப்பணம் என்று குறிபிட்டு இருந்தார். இந்த மேட்டர் மட்டும் அவருக்கு தெரிஞ்சிருந்துது மவனே உங்கள கைமா பண்ணாம விட்டுருக்கமாட்டார்.
கதை பழைய தேய்த்த பாத்திரம் தான். முகமூடி அணிந்து ஒரு கும்பல் நகரில் கொள்ளை அடித்து கொண்டிருக்கிறது. இதை கண்டுபிடிக்க நாசர் நியமிக்கப்பட்டார். அவர் எப்படி அந்த கும்பலை எப்படி அளிக்கிறார் என்பது தான் கதை(ஒரு எழவும் செய்யலை என்பது தனிக்கதை).
ஜீவா காமெடிக்காக போடும் முகமூடி கேரக்டர் ஒரு வழியாக கதைக்குள் நுழைக்கபடுகிறது. நரேன் கும்பலுடன் எப்படி மோதுகிறார் என்பது தான் மீதி கதை(கதையே இல்லை என்பது தனிக்கதை.) கதையின் நாயகியை பாடலுக்காகவே சிலர் வைப்பார்கள். இதில் எதற்கு என்றே தெரியவில்லை.
படம் ஆரம்பமாகும் முதல் நிமிடமே நம்மை இது மிஸ்கின் படமா என்று யோசிக்க வைத்துவிடும். அந்த அளவுக்கு சொதப்பலோ சொதப்பல். படம் போட்ட 20 நிமிடத்தில் இரண்டு பாடல். தனியாக கேட்பதற்கு இரண்டும் ஓகே தான். ஆனால், திரையில் சகிக்கள. ஒரு பீலிங்கும் வரலை.
ஹீரோயின் என்ட்ரி செம காமெடி.அரங்கமே தலையில் கைவைத்து தேய்க்க ஆரம்பித்துவிட்டது. அஞ்சாதே படத்தில் ஒரு கையுடன் நரேன் நண்பராக வரும் நபர இதிலும் வருகிறார். இது போக ரட்சகன் படத்தில் நாயகியின் தந்தையாக வரும் நபரும் வருகிறார். எல்லாம் காமெடி பீஸ்.
படத்தின் இசையமைப்பாளர் கே என்ற கிருஷ்ணமூர்த்தி. பாடல்கள் அனைத்தும் நன்று(ஒன்லி ஆடியோ). அனால், பின்னணி இசை சப்பா முடியல. சும்மா வயொளின் இருக்குது என்பதற்காக ஒரே அடியாக தேய் தேய் என்று தேய்த்துவிட்டார். காட்சிக்கு தகுந்தாற்போல் இசை இல்லை.
சூப்பர் ஹீரோ என்றாலே ஒரு உயரமான இடத்தில் நிற்கவைத்து கேமரா ஆங்கிளை கீழே இருந்து சுத்தி சுத்தி காட்டுவது என்பது எழுதப்படாத நியதி ஆகிவிட்டது. படத்தை நாம் கிண்டல் அடிக்கவேண்டியது இல்லை, நரேனே சூப்பர் மேன், பேட் மேன், அயன் மேன், முகமூடி என்று அடிக்கடி நக்கல் அடிப்பார்.
நச்சுன்னு நாலு:
1.       நச்சுன்னு நாலு சொல்ற அளவுக்கு படத்தில் ஒரு வசனம் கூட இல்லாமல் இருப்பதால், மிச்ச மீதி சுமார இருக்கும் மூன்று வசனங்கள் இதோ.
2.       என்னால முடியல, அப்படின்னா வா டாக்டர் கிட்ட போலாம். தாத்தா, அந்த முடியல இல்லை, இது வேற முடியல.
3.       எனக்கு போலீஸ் வாடைன்னா பிடிக்காது. ஆனா, சாவு வாசனை ரொம்ப பிடிக்கும்.
4.       அவள பார்க்கணும், பார்த்து? கன்னத்தில அறையனும், அவ கமிஸ்னர் பொண்ணு டா. அப்ப, ரெண்டு கன்னத்துளையும் அறையனும்.
கொசுறு:
மிஸ்கின் தனது பாணியை விட்டு மாறி வேறு ஏதோ பாதையில் செல்கிறார். அதுக்கு அவர் சரிபட்டு வரமாட்டார். பேசாம கோட்டர் அடிச்சிட்டு குப்புற படுத்து தூங்குங்க.

Friday, August 24, 2012

The Expendables -2



முந்தய பாகத்தின் வெற்றியை உறுதி செய்யும் பொருட்டு இந்த பாகம் வெளிவந்துள்ளது. Sylvester Stallone ஸ்க்ரீன் ப்ளே அமைத்த இந்த களத்தில் Arnold, Jet li, chris hemsworth, Bruce willis, van damm, Jasan Stathom  என ஒரு பிரபல பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இது எல்லாம் Sylvester Stallone என்ற ஒற்றை மனிதரின் சாமர்த்தியம் தான்.
கதை என்று பார்த்தல் வழக்கம் போல வரும் பழிவாங்கும் கதை தான். ஆனால், அதை கொஞ்சம் கீட போர் அடிக்காத வாறு எடுத்துள்ளனர். முந்தய பாகத்தில் இடம்பெற்றதை போல இதிலும் பெரிய பெரிய துப்பாக்கிகள் தான் எல்லாற்றையும் விட பெரிய ஹீரோ. வழக்கம் போல bruce willis  ஒரு வேலையை கொடுக்கிறார் அதை செய்யும்போது chris hemsworthதை வில்லன் கொன்று விடுகிறார். பின்னர் வில்லனை பலி வாங்குவதே கதை. சுருக்கமாய் சொன்னாலும் இழுத்து சொன்னாலும் அவ்வளவுதான்.
அதிகம் எதிர்பார்த்த ஜெட்லியின் சண்டை இதில் இல்லை. முதல் காட்சியில் வரும் ஒரு சண்டையுடன் அவர் காணாமல் போய்விட்டார். எதிர்பார்க்காத விதத்தில் Arnold டிற்கு ஒரு என்ட்ரி. நேபாளில் ஆரம்பமாகும் கதை இறுதி காட்சியில் பிரான்ஸ்சில் முடிவடைகிறது. இப்படத்தின் வசனகர்த்த மிகவும் நகைச்சுவை உணர்வு உள்ளவர் போல. எல்லா இடங்களிலும் நையாண்டியை புகுர்த்தியுள்ளார்.\
வில்லனாக வரும் வான் டாம் பற்றி யாருக்கும் சொல்ல தேவையில்லை. இவர் ஒரு மா பெரும் திறமைசாலி என்பது இவர் கிக் பாக்ஸ்ஸிங்கிள் வாங்கிய மெடல்களின் எண்ணிக்கையே இவரை காற்றும். 19 முறை போட்டியில் கலந்து கொண்டு 18 முறை சாம்பியன் பட்டம் வென்றவர். இதில் வில்லனாக சிறப்பாக நடித்துள்ளார்.
முதல் பாகங்களில் வருவது போல அல்லாமல் அர்னால்டும், ப்ருஸ் வில்லிஸ்சும் இதில் ஒன்றாக இணைந்து கடைசியிலும் வருகின்றனர். மூன்று சூப்பர் ஸ்டார்களும் இணைந்தால் எப்படி இருக்கும் என்பதை திரைஅரங்கில் ரசிகர்களின் கைதட்டலில் தெரிகிறது.


நச்சுனு நாலு:
1.    பிரீன்ட்லியா ஒரு அட்வைஸ், தயவு செஞ்சு கொஞ்சமாது சிரி. மூஞ்சி பாக்க சகிக்கல.
2.    இங்க ஏதோ பார்ட்டி நடக்குதுனு சொன்னாங்க, யாருப்ப பார்ட்டி நடத்துறது.ஹ்ம்ம் நான் தான் வந்து துப்பாக்கியோட கலந்துக்கோ.
3.    இங்க ஆளுங்க நிறையா இருக்காங்க ஒரு பீரங்கி இருந்தா சமாளிசிருவேன். இருக்கு ஆனா, அவுங்ககிட்ட.
4.    அர்னால்ட்- எனக்கும் ஒரு துப்பாக்கி கொடு டா. கொஞ்சம் பெருசா!! டெர்ரி கிரேவ்-யோவ், வயசான காலத்துல கம்முனு இருயா. ஜாசன் ஸ்டாதம்-போதும் உங்க அண்ணன் தம்பி பாசத்தை ஒரே அடியா கொட்டி தீர்துடாத.

கொசுறு:
முழுக்க முழுக்க துப்பாக்கிகளோடு வரும் படம் என்பதால் நல்ல சவுண்ட் சிஸ்டம் இருக்கும் அரங்கில் சென்று பாருங்கள். எனக்கு உள்ளே, இடி இடித்தது போல இருந்தது. நம்ம ஊரில் இது லேட் ரிலீஸ். 19.08.2012  அன்றே பல நாடுகளில் வெளியாகிவிட்டது.

Friday, July 20, 2012

டார்க் நைட் ரைசஸ் - The Epic Concluded



கிறிஸ்டோபர் நோலன் கைவண்ணத்தில் கிறிஸ்டியன் பேல் நடித்த இத்திரைப்படம் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. காரணம் இதன் முந்தய இரண்டு பாகமும், இயக்குனர் மீது இருக்கும் நம்பிக்கையும் தான். உலகில் அதிக பிரிண்ட் போடப்பட்ட 2வது  படம் என்ற பெயரை வாங்கயுள்ளது 4404 திரைஅரங்கு.Twillight Saga-Eclipse 4468 பிரிண்ட் போட்டு முதல் இடத்தில் உள்ளது. அவேஞ்சர்ஸ் எல்லாம் அடுத்து தான்.
ப்ருஸ் வேயின், அல்பிரெட், பாக்ஸ் இவர்கள் தான் எப்போதும் போல இதிலும் தங்கள் வேலையை சரியாக செய்து வருகின்றனர். வில்லனாக ஒரு வித மாஸ்க் அணிந்து கொண்டு வரும் வில்லனின் பெயரும் வேயின் தான். கதை ஆரம்பம் ஆனது முதல் எதற்காக இந்த வில்லன் இவன் ஏன் மாஸ்க் அணிந்திருக்கிறான் என்றே சிந்திக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
கதை ஆரம்பம் ஆன உடனேயே போலீஸ் கமிஸ்னர் வில்லனிடம் உதை வாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார். ஹீரோ காலில் அடிப்பட்டு ஒரு பெண்ணிடம் பல முறை பல்பு வாங்குகிறார். ப்ருஸ் வேயினின் நிறுவனத்தை அவர் கைரேகைகை பயன்படுத்தி  வில்லன்கள் அவரது சொத்துக்களை ஷேர் மார்க்கெட்டில் புகுத்தி அவரை நடுத்தெருவில் நிறுத்துகின்றனர்.
முந்தய பாகங்களில் போலீஸ் கமிஸ்னர் செய்து வந்த வேலையை இதில் வேறுஒரு இளம் போலீஸ் அதிகாரியை செய்யவைத்துள்ளனர். கேட்வோமன் போன்ற ஒரு கேரேக்ட்டரை இதில் புகுதிஉள்ளார் இயக்குனர். வெறும் தோற்றம் மற்றுமே ஸ்பெஸல் பவர் கிடையாது. நாயகன் வைத்திருக்கும் நியூகிளியர் எநேர்ஜி ரியாக்ட்டர் மூலம் கோதம் நகரத்தையே அழிக்க வில்லன் ஒரு பிஸ்ஸன் மூலம் ஒரு குண்டை உருவாக்கி அதை வைத்து நகரத்தையே பயமுறுத்துகிறான்.
ஹீரோ வில்லனிடம் அடிவாங்கி, மிதிவாங்கி, உதைவாங்கி பல மாதங்களாக வில்லனின் சிறைசாலையில் உள்ளார். அந்த சிறைசாலையில் இருந்து வெளியே வர ஒரு கிணற்றின் மூலமாக தான் ஏறி வர வேண்டும். கதை உடனேயே பிளாஷ் பேக்கிற்கு செல்கிறது. இதுவரை ஒரே ஒரு குழந்தை மட்டுமே அந்த கிணற்றை ஏறி வெளியே வந்தது அது தான் வில்லன் என்று நம்மை இயக்குனர் நம்பவைத்துவிட்டு இறுதியில் அது ஒரு பெண் பெயர் மிரண்டா என்று நம்மை முட்டாள் ஆக்கி விடுகிறார். நாயகன் அந்த கிணற்றின் அடியில் இருந்து வெளியே வந்து எப்படி வில்லனை கொள்கிறார் என்பது மிச்ச கதை. வில்லன் ஏன் மாஸ்க் அணிந்திருக்கிறார் என்று இறுதியில் ஒரே ஸாட்டில் சொல்லிவிடுகிறார்.
அந்த குழந்தை அதாவது மிரண்டாவை அந்த சிறையில் இருந்து காப்பாற்றிய நபர் தான் அந்த முகமுடி அணிந்த வில்லன். மிரான்டா யார் என்று சொல்ல கதைக்குள் சிறு சிறு கதையை சொல்கிறார் இயக்குனர். இறுதியில் அந்த வெடிகுண்டை அழித்துவிட்டு தானும் இறந்துவிடுகிறார். பின்னர் அவரது சொத்துக்கள் யாவும் அநாதை இல்லத்திற்கு ஒப்படைக்க படுகின்றது. அந்த இளம் போலீஸ் அதிகாரியாக வரும் நபரிடம் தன் பேஸ்மென்ட் இடத்தை பற்றி தெரிவித்து அவரது ஆயுதங்கள் வைத்திருக்கும் இடத்தை அவரிடம் ஒப்படைக்கிறார். இறுதியில் அல்பிரெட் டிடம் சேர்கிறார்.

நச்சுனு நாலு:
1.      இவர் கயிறை திரியாக்கி மறுபடியும் திரியை கயிறாக்கி அதில் வெளிச்சம் எடுப்பவர்.
2.      வீரம் என்பது உடலை பலப்டுத்துவது மட்டும் அல்ல, மனதை பலமாக வைத்துகொள்வதும் தான்.
3.      உனக்கு எது பயத்த தருதோ நீ, அதுவாகவே மாறனும்.
4.      நான் இங்கே உங்களை ஆட்டிபடைக்க வரவில்லை, நீங்கள் யார் என்று உங்களுக்கு புரியவைக்கதான் வந்தேன்.
கொசுறு:
முந்தய பாகத்தில் இருந்த சுறுசுறுப்பு பேட்மேனிடம் இல்லை. சற்றே தொங்கல் போல் கானபடுகிறார். ஹான்ஸ் ஜிம்மர்ரின் இசை ஒரு பலம் என்றாலும் அதிகமாக பயன்படுத்தவில்லை. இந்தியாவில் சோனி மியூசிக் நிறுவனம் இத்திரைப்படத்தின் பிஜிஏம் உரிமையை வாங்கி லாபம் பார்த்துவிட்டது. இதுவே முடிவு, அடுத்த பாகம் கிடையாது.

Monday, July 16, 2012

சன் ஆப் தி மாஸ்க் -திரை விமர்சனம்



ஜிம் கேரி நடித்த மாஸ்க் படத்தின் தொடர்ச்சி என்று யாரும் நினைக்க வேண்டாம். அது செம ஹிட் ஆனா படம். இது செம பிளாப் ஆனா படம். 2005இல் வெளியானது.
லாரன்ஸ் கட்டர்மேன் இயக்கத்தில் ஜாமி கேனேடி நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் ஆரம்பம் ஆனதும் தெரியாது முடிவதும் தெரியாது. ஒரு நாய், நாயகன், குழந்தை, வில்லன் மற்றும் குழந்தையின் அம்மா எவர்கள் மற்றுமே இத்திரைப்படத்தின் கதாபாத்திரங்கள்.
படம் ஆரம்பமான உடனே நமக்கு தோர் திரைப்படத்தின் கதையை ஒருவர் கூறுவார்(தோர் பார்க்காதவர்களுக்கு). இதில் வரும் தோர் மற்றும் லோகி போன்றவர்களின் சிறப்பினை கூறிவிட்டு வழக்கம் போல லோகி ஒரு கொடும்கோல் வில்லன் என்றே அவரை அறிமுகம் செய்கிறார் ஒரு மியூஸியம் அதிகாரி. அங்கிருந்து புறப்படும் வில்லன் தான் தேவலோகத்தில் தொலைத்த மாஸ்க்கை தேடி பூலோகம் வந்திருப்பது தான் கதை(கௌண்டமணி போல).
நாயகன் குழந்தை பெற விருப்பன் இல்லாமல் இருப்பார். ஆனால், அவரது மனைவி குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவார். நாயகனின் பெயர் டிம். இவர் ஒரு பொம்மை விளையாட்டு காட்டும் இடத்தில் பணி புரிகிறார். ஒரு நாள் அவரது நாய்(ஓடிஸ்) அந்த மாஸ்க்கை எடுத்து வந்து அவரிடம் தருகிறது அதை அவர் போட்டு கொண்டு சுற்றுகிறார். அதில் அவர் செய்யும் லூட்டிகள் தான் மிச்ச காட்சி. அதே களைப்புடன் வீட்டுக்கு சென்று குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார். குழந்தையும் பிறக்கிறது (அபார சக்தியுடன்)
லோகியின் தந்தை லோகிக்கு காலக்கெடு நிர்ணயித்து சென்று விடுகிறார். ஆதலால், ஒவ்வொரு வீடாக சென்று அந்த மாஸ்க் மற்றும் குழந்தையை தேடுகிறார். இதன் நடுவில் டிம்மிடம் குழந்தையை விட்டு நாயகி வேலை காரணமாக வெளியூர் செல்கிறார். இனி குழந்தை அடிக்கும் லூட்டியை தாங்க முடியாமல் டிம் திணறுகிறார்.
குழந்தை(அல்பி) பிறந்தவுடன் தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று என்னி குழந்தையை நாய் ஓடிஸ் கொன்று விட நினைத்து கடைசியில் பல்பு வாங்கிகொல்கிறது.
லோகி கடைசியில் குழந்தையை கண்டுபிடித்து விடுகிறான். அந்த மாஸ்க்கை கொண்டு வந்து கொடுத்துவிட்டு குழந்தையை பெற்றுகொள்ளுமாறு சொல்லிவிட்டு குழந்தையுடன் சென்று விடுகிறார். பிறகு ஓடிஸ்ஸி டம் அந்த மாஸ்க்கை தரும் படி காலில் விழாத குறையாய் கேட்டுவிட்டு எப்படி வில்லனை சமாளிக்குறார் என்பதே கதை...
நச்சுன்னு நாலு:
1.       ஹனி நீங்க வீட்ல இருங்க, நான் பக்கத்துக்கு வீட்டுக்கு போய் அவரிடம் குழந்தைக்கு ஏற்ப்பாடு செய்துக்குறேன்.
2.       என்னை எனக்காக விரும்புங்கள், நான் எப்படி இருக்க கூடாது என்பதற்காக என்னை வெருக்காதீர்கள்.
3.       நான் தோல்வி அடைய வேண்டும் என்பதற்காகவே என்னை நீங்கள் அனுப்புகுறீர்கள்.
4.       அவன நீ கொன்னாலும் அவன் உன் மகன். அதில் எந்த மாற்றமும் கிடையாது.
கொசுறு:
இது குழந்தைகளுக்கான படம். ஒன்றரை மணிநேரத்தில் முடிந்து விடும். போர் அடிச்சால் பார்க்கலாம். ஜிம் கேரியின் நடிப்பை  இவர்களிடம் எதிர்பாக்காதீர்கள்.
 

வந்து போனவுங்க