முந்தய பாகத்தின் வெற்றியை உறுதி செய்யும் பொருட்டு இந்த பாகம் வெளிவந்துள்ளது. Sylvester Stallone ஸ்க்ரீன் ப்ளே அமைத்த இந்த களத்தில் Arnold, Jet li, chris hemsworth, Bruce willis, van damm, Jasan Stathom என ஒரு பிரபல பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இது எல்லாம் Sylvester Stallone என்ற ஒற்றை மனிதரின் சாமர்த்தியம் தான்.
கதை என்று பார்த்தல் வழக்கம் போல வரும் பழிவாங்கும் கதை தான். ஆனால், அதை கொஞ்சம் கீட போர் அடிக்காத வாறு எடுத்துள்ளனர். முந்தய பாகத்தில் இடம்பெற்றதை போல இதிலும் பெரிய பெரிய துப்பாக்கிகள் தான் எல்லாற்றையும் விட பெரிய ஹீரோ. வழக்கம் போல bruce willis ஒரு வேலையை கொடுக்கிறார் அதை செய்யும்போது chris hemsworthதை வில்லன் கொன்று விடுகிறார். பின்னர் வில்லனை பலி வாங்குவதே கதை. சுருக்கமாய் சொன்னாலும் இழுத்து சொன்னாலும் அவ்வளவுதான்.
அதிகம் எதிர்பார்த்த ஜெட்லியின் சண்டை இதில் இல்லை. முதல் காட்சியில் வரும் ஒரு சண்டையுடன் அவர் காணாமல் போய்விட்டார். எதிர்பார்க்காத விதத்தில் Arnold டிற்கு ஒரு என்ட்ரி. நேபாளில் ஆரம்பமாகும் கதை இறுதி காட்சியில் பிரான்ஸ்சில் முடிவடைகிறது. இப்படத்தின் வசனகர்த்த மிகவும் நகைச்சுவை உணர்வு உள்ளவர் போல. எல்லா இடங்களிலும் நையாண்டியை புகுர்த்தியுள்ளார்.\
வில்லனாக வரும் வான் டாம் பற்றி யாருக்கும் சொல்ல தேவையில்லை. இவர் ஒரு மா பெரும் திறமைசாலி என்பது இவர் கிக் பாக்ஸ்ஸிங்கிள் வாங்கிய மெடல்களின் எண்ணிக்கையே இவரை காற்றும். 19 முறை போட்டியில் கலந்து கொண்டு 18 முறை சாம்பியன் பட்டம் வென்றவர். இதில் வில்லனாக சிறப்பாக நடித்துள்ளார்.
முதல் பாகங்களில் வருவது போல அல்லாமல் அர்னால்டும், ப்ருஸ் வில்லிஸ்சும் இதில் ஒன்றாக இணைந்து கடைசியிலும் வருகின்றனர். மூன்று சூப்பர் ஸ்டார்களும் இணைந்தால் எப்படி இருக்கும் என்பதை திரைஅரங்கில் ரசிகர்களின் கைதட்டலில் தெரிகிறது.
நச்சுனு நாலு:
1. பிரீன்ட்லியா ஒரு அட்வைஸ், தயவு செஞ்சு கொஞ்சமாது சிரி. மூஞ்சி பாக்க சகிக்கல.
2. இங்க ஏதோ பார்ட்டி நடக்குதுனு சொன்னாங்க, யாருப்ப பார்ட்டி நடத்துறது.ஹ்ம்ம் நான் தான் வந்து துப்பாக்கியோட கலந்துக்கோ.
3. இங்க ஆளுங்க நிறையா இருக்காங்க ஒரு பீரங்கி இருந்தா சமாளிசிருவேன். இருக்கு ஆனா, அவுங்ககிட்ட.
4. அர்னால்ட்- எனக்கும் ஒரு துப்பாக்கி கொடு டா. கொஞ்சம் பெருசா!! டெர்ரி கிரேவ்-யோவ், வயசான காலத்துல கம்முனு இருயா. ஜாசன் ஸ்டாதம்-போதும் உங்க அண்ணன் தம்பி பாசத்தை ஒரே அடியா கொட்டி தீர்துடாத.
கொசுறு:
முழுக்க முழுக்க துப்பாக்கிகளோடு வரும் படம் என்பதால் நல்ல சவுண்ட் சிஸ்டம் இருக்கும் அரங்கில் சென்று பாருங்கள். எனக்கு உள்ளே, இடி இடித்தது போல இருந்தது. நம்ம ஊரில் இது லேட் ரிலீஸ். 19.08.2012 அன்றே பல நாடுகளில் வெளியாகிவிட்டது.
கடைசியில் ஒரு வழியாக ப்ளாக் பக்கம் வந்துவிட்டீர்கள், நல்லது.
ReplyDelete