ஜீவா, நரேன், பூஜா ஹெட்கே, நாசர் ஆகியோர் நடித்த இத்திரைப்படத்தை மிஸ்கின் இயக்கியுள்ளார். யூ டிவி நிறுவனம் தயாரித்துள்ளது.
Martial Arts கலையை பயன்படுத்தி எடுத்துள்ளதாக பெரியஅளவில் விளம்பரம் செய்து வந்தார் இயக்குனர் மிஸ்கின். அதுமட்டுமல்லாது சூப்பர் ஹீரோ திரைப்படம் என்று வேறு சகட்டு மேனிக்கு அல்லிதேளித்தார். கடைசியில் படம் பே பே. டைட்டில் கார்டு போடும் முன்பே இத்திரைப்படம் ப்ருஸ் லீக்கு சமர்ப்பணம் என்று குறிபிட்டு இருந்தார். இந்த மேட்டர் மட்டும் அவருக்கு தெரிஞ்சிருந்துது மவனே உங்கள கைமா பண்ணாம விட்டுருக்கமாட்டார்.
கதை பழைய தேய்த்த பாத்திரம் தான். முகமூடி அணிந்து ஒரு கும்பல் நகரில் கொள்ளை அடித்து கொண்டிருக்கிறது. இதை கண்டுபிடிக்க நாசர் நியமிக்கப்பட்டார். அவர் எப்படி அந்த கும்பலை எப்படி அளிக்கிறார் என்பது தான் கதை(ஒரு எழவும் செய்யலை என்பது தனிக்கதை).
ஜீவா காமெடிக்காக போடும் முகமூடி கேரக்டர் ஒரு வழியாக கதைக்குள் நுழைக்கபடுகிறது. நரேன் கும்பலுடன் எப்படி மோதுகிறார் என்பது தான் மீதி கதை(கதையே இல்லை என்பது தனிக்கதை.) கதையின் நாயகியை பாடலுக்காகவே சிலர் வைப்பார்கள். இதில் எதற்கு என்றே தெரியவில்லை.
படம் ஆரம்பமாகும் முதல் நிமிடமே நம்மை இது மிஸ்கின் படமா என்று யோசிக்க வைத்துவிடும். அந்த அளவுக்கு சொதப்பலோ சொதப்பல். படம் போட்ட 20 நிமிடத்தில் இரண்டு பாடல். தனியாக கேட்பதற்கு இரண்டும் ஓகே தான். ஆனால், திரையில் சகிக்கள. ஒரு பீலிங்கும் வரலை.
ஹீரோயின் என்ட்ரி செம காமெடி.அரங்கமே தலையில் கைவைத்து தேய்க்க ஆரம்பித்துவிட்டது. அஞ்சாதே படத்தில் ஒரு கையுடன் நரேன் நண்பராக வரும் நபர இதிலும் வருகிறார். இது போக ரட்சகன் படத்தில் நாயகியின் தந்தையாக வரும் நபரும் வருகிறார். எல்லாம் காமெடி பீஸ்.
படத்தின் இசையமைப்பாளர் கே என்ற கிருஷ்ணமூர்த்தி. பாடல்கள் அனைத்தும் நன்று(ஒன்லி ஆடியோ). அனால், பின்னணி இசை சப்பா முடியல. சும்மா வயொளின் இருக்குது என்பதற்காக ஒரே அடியாக தேய் தேய் என்று தேய்த்துவிட்டார். காட்சிக்கு தகுந்தாற்போல் இசை இல்லை.
சூப்பர் ஹீரோ என்றாலே ஒரு உயரமான இடத்தில் நிற்கவைத்து கேமரா ஆங்கிளை கீழே இருந்து சுத்தி சுத்தி காட்டுவது என்பது எழுதப்படாத நியதி ஆகிவிட்டது. படத்தை நாம் கிண்டல் அடிக்கவேண்டியது இல்லை, நரேனே சூப்பர் மேன், பேட் மேன், அயன் மேன், முகமூடி என்று அடிக்கடி நக்கல் அடிப்பார்.
நச்சுன்னு நாலு:
1. நச்சுன்னு நாலு சொல்ற அளவுக்கு படத்தில் ஒரு வசனம் கூட இல்லாமல் இருப்பதால், மிச்ச மீதி சுமார இருக்கும் மூன்று வசனங்கள் இதோ.
2. என்னால முடியல, அப்படின்னா வா டாக்டர் கிட்ட போலாம். தாத்தா, அந்த முடியல இல்லை, இது வேற முடியல.
3. எனக்கு போலீஸ் வாடைன்னா பிடிக்காது. ஆனா, சாவு வாசனை ரொம்ப பிடிக்கும்.
4. அவள பார்க்கணும், பார்த்து? கன்னத்தில அறையனும், அவ கமிஸ்னர் பொண்ணு டா. அப்ப, ரெண்டு கன்னத்துளையும் அறையனும்.
கொசுறு:
மிஸ்கின் தனது பாணியை விட்டு மாறி வேறு ஏதோ பாதையில் செல்கிறார். அதுக்கு அவர் சரிபட்டு வரமாட்டார். பேசாம கோட்டர் அடிச்சிட்டு குப்புற படுத்து தூங்குங்க.
ஹா ஹா சூப்பர்
ReplyDeleteநன்றி அண்ணே!
Deleteஅட என்ன பாஸ் இப்படி சொல்லிபுட்டீக சூப்பரா இருக்கும்னு நினைச்சேன்
ReplyDeleteஅப்படி நினைத்து தான் பாஸ் நானும் போய் பல்பு வாங்குனேன்.
Deleteஇந்த வருடத்தின் இன்னுமொரு சொதப்பல் படம்னு சொல்றீங்க!! ஜீவா - 'கோ' வுக்கு பிறகு அய்ய'கோ'தானா!!
ReplyDeleteநடுவுள்ள வந்தான் வென்றான், ரௌத்திரம் இத விட்டுடீங்க..
Deleteமுதல் முறையா மிஷ்கின் படத்துல கேமிரா ஹீரோவோட காலை மட்டும் சுத்தாம ஊரையே சுத்தி சுத்தி வருதுன்னு சொல்லுங்க....
ReplyDeleteதியேட்டர்ல இருக்குற மக்களுக்கே தல சுத்துது.கேமரா சுத்தினா என்ன, சுத்தலைனா என்ன.
Deleteநல்லா இருக்கும்னு நெனச்சேன், இதுவும் சொதப்பலோ!!!
ReplyDeletesema sothapal
Deleteபடம் சரியில்லையா? இன்னைக்கு பார்க்கலாம்னு இருந்தேன்
ReplyDeleteplz dont go
ReplyDeleteபடம் ஓரளவுக்கு இருக்குது.....
ReplyDeleteபிடித்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு தான்.
Delete