ரஷ்யா, எகிப்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்கள் அதிபரை தங்கள் விருப்பம்போல் தேர்ந்தெடுத்து விட்டனர். அடுத்து இந்த அதிபர் தேர்தல் வரிசையில் இந்தியா தயாராகி வருகிறது. இங்கு அதிபருக்கு முக்கிய வேலைகள் ஒன்றும் இல்லையென்றாலும் அடுத்த வருடம் வரும் நாடாளமன்ற தேர்தலுக்கு இந்த நாற்காலியின் உதவி தேவை. பெருமதிப்பிற்குரிய திரு. குரோஷி அய்யா அவர்கள் தலைமை தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதால், இனி வரும் தேர்தல்கள் எவ்வாறு இருக்குமோ என்ற ஐயம் மக்களிடம் நிலவியுள்ளது.
தேர்தல் ஆணையம் அதிபருக்குகான தேர்தல் தேதி அறிவித்த நிலையில் எந்த கட்சிகளிடமும் எந்த ஒரு பெரிய சலனம் இல்லை. ஆனால், தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. எல்லாம் காங்கிரஸ் கட்சியின் திருவிளையாடல் தான். திரு.கலாம், சோம்நாத் சாட்டர்ஜி, மன்மோகன் சிங், சங்மா, மீரா குமார், என பட்டியல் நீண்டு கொண்டே இருந்த சமயத்தில் திடீரென பிரணாப் பெயரை சோனியா ஜி அறிவித்தது அனைவரையும் சற்று யோசிக்க வைத்துவிட்டது. பல கட்சிகள் தங்கள் ஆதரவை பிரணாப் முகர்ஜிக்கு அளித்து வருவதால், அவர் அதிபர் ஆவது உறுதி என்றே தோனுகிறது.
இந்த தேர்தலில் திரு. கலாம் தான், அதிபர் தேர்தலில் நிக்கவில்லை என்று அறிவித்ததற்கு காரணம் முலாயம் சிங்க்ஹும், மாயாவதியும் அடித்த அந்தர் பல்டியே காரணம். கலாம் அதிபராய் இருந்த போது அவர் பெயரை அலெக்சாண்டர்க்கு எதிராக முன்னிறுத்தி அனைவரின் கவணத்தையும் திருப்பினார் முலாயம். இந்த தேர்தலிலும் மம்தாவுடன் சேர்ந்து கலாமுக்கு அவர் ஆதரவை அளித்தார். ஆனால், கடந்த காலங்களில் அவருக்கு ஏற்பட்ட சில சில பிரச்சனைகளை நினைத்து காங்கிரஸிடம் சாய்ந்தார். மாயாவதியும், முலாயமும் இரு வேறு துருவங்கள், ஆனால் வேறு வழிஇன்றி இன்று இரண்டு காங்கிரஸ் பக்கம் சேர்ந்தது.
கடந்த 2007ஆம் வருடம் முலாயம் மற்றும் அவரது மகன் அகிலாஷ் சிங் சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி தவித்தனர். இது காங்கிரஸ் கட்சியின் அரசியல் விளையாட்டு. இவருக்கு இப்படி என்றால் முதல்வர் மாயாவதி மீது ஊழல் குற்றசாட்டு தொடர்பான விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட்டார். அந்த தருணத்தில், இந்தியாவுக்கு பாதகமான இந்திய-அமெரிக்க அணிசக்தி ஒப்பந்ததில் கையெழுத்து போட்டதை தொடர்ந்து இடது சாரிகள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் ஆட்சி கவிழும் நிலைமை ஏற்பட்டது. (30 எம்.பி.க்கள் பற்றாகுறை.)
அப்போது, முலாயம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கவில்வதை தாங்கமுடியாது என்று தனது சமாஜ்வாடி கட்சியின் 39 எம்.பி.க்கள் ஆதரவை அளித்தார். இதன் மூலம் காங்கிரெஸின் ஆட்சி தப்பித்தது. முலாயம் மீது இருந்த சொத்து குவிப்பு வழக்கும் குப்பைக்கு போனது. ஆனால், அப்போது காங்கிரஸ்க்கு எதிராக ஒட்டு போட்டதால் மாயாவதிக்கு பல இடைஞ்சல். தற்போது நன்றாக உணர்ந்த மாயாவதி தனது பகுஜன் சமாஜ்வாடியின் 22 எம்.பி.க்கள் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இப்படி வட மாநிலத்தில் இருதுருவங்கள் ஒன்றாக இணைந்தாலும் இங்கு தமிழகத்தில் இரண்டு திராவிடகட்சிகளும் முரண்டு பிடித்து தான் கொண்டிருக்கிறது. ஒருபக்கம் சங்மாவுக்கு ஆதரவாக ஜெ, மற்றொரு பக்கம் நம்மை பொலம்ப வைத்த பிரணாப்முகர்ஜிக்கு ஆதரவாக கலைஞரும் உள்ளனர். பிரணாப் ஜெய்ப்பது உறுதி என்றாலும் முரண்டு பிடிக்கும் சுபாவம் கொண்ட ஜெவுக்கு அதரவாக பா.ஜா.காவும், நவீன் பட்நாயக்கும் உள்ளனர்.
காணவில்லை!!!
1.உத்தர் பிரதேஷ் மாநில தேர்தலில் சுறுசுறுப்பாக திரிந்த ராகுல் காந்தியை காணவில்லை. இருக்கும் இடம் தெரிந்தால் டெல்லிக்கு தகவல் தெரிவிக்கவும்.
2.கபில் சிபில். இணைத்தள மக்களிடம் சிக்கி சின்னா பின்னாமான இவர் கடந்த மூன்று மாதங்களாக இருக்கும் இடம் தெரியவில்லை.
3.வத்ரா. சோனியாவின் மருமகன். புல்லட் பாண்டி. எங்கு சென்றாரோ யாருக்கு தெரியும்.
நிம்மதி பெருமூச்சு!!!
யாருக்கு நிம்மதி இருக்குமோ தெரியல, ஆனா நம்ம உள்துறை மந்திரி சிதம்பரம் நிம்மதியா இருப்பார். அவருடன் மல்லு கட்டும் நிதி இப்போது வெத்து வேட்டு ஆக போகிறார்.