Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Tuesday, October 04, 2011

இருமனம்



கண் எதிரே வந்தாய்
காதலை தந்தாய்
காலையிலும் நீயடி
மாலையிலும் நீயடி

பௌர்ணமி பெண்ணோடு
முழுநிலவு கண்ணோடு
காதல் வயப்பட்டேன்
ஆயுள் முழுவதும் சிறைபட்டேன்

மாலை நேர சாரலில்
உன்னை நான் பார்கையில்
முன்ஜென்மம் நான் அறிந்தேன்
என் பிம்பம் நான் தொலைத்தேன்

பருவம் வந்த பெண்ணே
பரிமாற்ற வார்த்தையில்லை
முத்தமொன்று நான் கொடுத்தேன்
வெட்கத்தில் நீ திகைத்தாய்

காலம் நேரம் பார்ப்பதற்கு
நான் என்ன ஆத்திகனா
காதல் என்று வந்துவிட்டால்
கடைசிவரை நாத்திகம்தான்

மாலை நேர வேளையிலே
மல்லிகைப்பூ சூடிவந்தாய்
மல்லிகையின் மனம் முகர்ந்தேன்
மன்னவன் நான் உன் மடியிலே!!!

Monday, September 26, 2011

என்னவள்

நீ, கலைமகளின் குழமகளா
இல்லை குழமகளின் திருமகளா
கன்னட பூமியில் பிறந்தவளா
கொங்குச் சீமையில் வளர்ந்தவளா

உன்னை பார்க்கும் போதெல்லாம்
என் தமிழும் தத்தளிகுதே !
உன் பேரை எழுதும் போது
என் பேனாவும் சினுங்குதே!

இரவு முழுவதும் உன்னினைவோடு
என் தூக்கம் கலைந்ததே
நிலவை பார்க்கும் போதெல்லாம்
உன் திருமுகம் ஜோளிக்குதே!!

Saturday, September 24, 2011

யார் மிகவும் அதிர்ஷ்டசாலி?


               இந்த உலகத்திலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி யாருனா அது நம்ம இந்தியர்கள் தான்.அதிர்ஷ்டசாலிதான் மிகவும் சொம்பெரியாகவும் இருக்கிறான். எவன் ஒருவன் திறமையினால் வெல்லாமல் காலத்தையும், அதிர்ஷ்டத்தையும் காரணம் காட்டுரானோ அவன் ஒரு முட்டால்.இது எல்லா வகையிலும் இந்தியர்களை வாழவைக்கிறது.

        லாட்டரி, பம்பர் பரிசுகள்,சீட்டாட்டம், இதில் திருமணமும் அடங்கும்.மற்றவைகளாது காசு கொடுத்து காசு சம்பாதிப்பது. ஆனால் திருமணம் லாபத்தை மட்டுமே கொள்கையாக கொண்டது. எந்த ஒரு யூரோப்பா நாட்டிலும் 18 வயதை கடந்த ஒருவன் தன் பெற்றோருக்கு  சுமையாக இருக்கமாட்டார்கள். ஆனால் நம் நாட்டில் பிறந்தது முதல் இறப்பது வரை அவர்களை நம்பித்தான் உள்ளோம்.அவர்களுக்கு சுமையாக இருக்க வேண்டாம் என்று தான் சொல்கிறேனே தவிர அவர்களை விட்டு பிரிய சொல்லவில்லை.சம்பாதித்த பணத்தை பெற்றோரிடம் கொடுத்து செலவுக்கு கேட்டு வாங்குவது என்பது இங்கு முகவும் அரிது. கூலிக்கு சம்பாதித்த பணத்தை கடன் அடைபதற்கே சரியாகவுள்ளது. பணக்காரர்களுக்கு சேர்த்ததை செலவு செய்வதை தவிர வேறு வேலையே இல்லை.

        திருமண உறவில் இந்தியர்களை தவிர வேறு யாரும் அதிர்ஷ்டசாலி யாரும் இருக்கமுடியாது.ஏனென்றால், வாலிப வயதில் பல பெண்களை சைட் அடித்து, அதில் சில பெண்களை காதலித்து பிறகு பெற்றோர்பார்த்த வரனை திருமணம் செய்கிறோம்.இது போல பல அதிர்ஷ்டங்கள் நமக்கு கிடைத்துள்ளது. அரசின் இலவசங்கள் என ஏராளமான அதிர்ஷ்டங்கள் நம்மை சூழ்ந்துள்ளது.....

Monday, September 19, 2011

வாழ்க்கை


வாழ்க்கையே கனவுதான்
கனவோடு விளையாட
ஒருநொடி போதுமா
ஆட்டம்தான் வெறுக்குமா
மறுபடியும் தொடருமா
போர்களம்தான் தோற்க்குமா!!!

Monday, August 22, 2011

அரசு கவனத்திற்கு




என்னை அரசியலில் ஈடுபட கூடாது என்று யாரேனும் சொன்னால் நான் வெகுண்டேலுவேன். அதுவே அரசாங்கம் மாணவர்கள் அரசியலில் ஈடுபட கூடாது என்று ஒரு விதிமுறை கூறினால் அந்த அரசாங்கத்தை கண்டிக்கவும் தயங்கமாட்டேன். கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவிதொகைகான விண்ணப்ப படிவத்தில் என்னை கோபம்  கொள்ள செய்த ஒரு வரி “நான் அரசியலிலோ அல்லது வேறு அழிவு பாதையிலோ செல்லமாட்டேன் என்று உறுதிமொழி கூறுகிறேன்” இவ்வாறு அதில் அச்சிடப்பட்டுள்ளது. இது எனக்கு மிகுந்த மனவேதனையை தருகிறது. ஏன் ஏழை மாணவன் அரசு உதவித்தொகை பெற்று படித்து கொண்டு அரசியலிலும் ஈடு பட்டால் என்ன தவறு? அரசு இனியாது இது மாதிரியான தவறை செய்யாமல் இருக்க வேண்டும்.

Thursday, August 18, 2011

கல்லரை காதல்

உன் விழி வில்லானது!!
பார்வை அம்பானது!!
என் இதயம் துண்டானது!!
நினைவு ஒன்றானது!!
பார்வையிலே படியவைத்தாய்!!
சிரிப்பினிலே சிதரடித்தாய்!!
வார்த்தையிலே வாழவைத்தாய்!!
நிரந்திரமாய் தூங்கவைத்தாய்!!
கல்லரையிலே நிரந்திரமாய்!!

Wednesday, August 17, 2011

ஈழ தாகம்


”புரட்சி வெடிக்கும்

எழுச்சி நடக்கும்

தமிழனாய் பேசுகிறேன்

கண்ணீரை வீசுகிறேன்”

மேடையில் தலைவர்களின் பேச்சு

நின்றதோ தமிழர்களின் மூச்சு

இங்கு நடந்தது தேர்தல்

அங்கு நடந்தது மோதல்

இங்கே வெற்றி வெடிச் சத்தம்

அங்கே பீரங்கிகளின் முழக்கம்

இந்தியாவின் வேசம்

முல்லைத்தீவே நாசம்

புலங்குவது பணக்கட்டு

குவிகிறது பிணக்கொத்து.
 

வந்து போனவுங்க