மேற்கு வங்காளம் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரை வென்றது அந்த மாநிலத்தையே திருவிழா கொண்டாட செய்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் அசைக்க முடியாத சக்தியாகி விட்டது. தேசிய விளையாட்டை மறக்கும் அளவிற்கு கிரிக்கெட்டின் ஆதிக்கம் இங்கே கால் பதித்துவிட்டது. சிறுவர்கள் விளையாட சென்றால் கூட கிரிக்கெட் தான் அவர்களுக்கு வருகிறது. எந்த குழந்தையும், இளைஞனும் கால்பந்திலோ, ஹாக்கியிலோ அல்லது வேறு விளையாட்டிலோ தங்கள் ஆர்வத்தை காட்ட மறுக்கின்றனர்.
இந்தியாவில் கிரிக்கெட் என்பது பணம் சம்பாதிக்கும் தொழிலே தவிர, விளையாட்டல்ல. காரணம் கிரிக்கெட்டை ஏற்று நடத்தும் தனியார் சம்மேளனம். அவர்கள் அதிலே பணம், அரசியல் போன்றவற்றை மட்டுமே புகுத்தியுள்ளனர். பணத்தை வாரி இறக்கும் விளையாட்டு, பணத்தை சம்பாதிக்கும் விளையாட்டு, எல்லாவற்றிற்கும் மேலாக மற்ற விளையாட்டை வளர விடாத விளையாட்டு.
அதிலும் இந்த ஐ.பி.எல் வந்த பிறகு மக்கள் தங்கள் வேலையையும் மறந்துவிட்டனர். இன்றைய காலகட்டத்தில் எங்கும் கிரிக்கெட், எதிலும் கிரிக்கெட் என்று ஆனா பிறகு கிரிக்கெட்டை தவிர்ப்பது என்பது மிகவும் கடினம். இந்த ஐ.பி.எல் மூலம் பல கருப்பு பணம் நாட்டில் புழக்கத்தில் உள்ளது என்று பல செய்திகள் வந்தாலும் அரசும் மக்களும் இதை ஒரு பொருட்டாவே எடுத்துக்கொள்ளவில்லை. ஐ.பி.எல் நடக்கும் காலகட்டங்களில் நாட்டில் பல வர்த்தகங்களும் கூட ஸ்தம்பித்துள்ளது. மாணவர்கள் தேர்வு பாதித்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக நேரம் வீணடிக்கபடுகிறது.
நேற்று கொல்கத்தாவில் நடந்த கூத்தை பார்த்தல் நாட்டின் நிலைமை இவ்வளவு கேலிக்கூத்தாக உள்ளதே என்று மனம் வருந்துகிறது. கொல்கத்தா ஐ.பி.எல் தொடரை வென்றது ஏதோ குஜராத்தை போன்று முதல் மாநிலமாக வந்துவிட்டதாக எண்ணி கொண்டாடினர். முதல்வர் மம்தாவும் ஏதோ ராணுவ வீரர்களை கவுரவ படுத்துவதாக எண்ணி கிரிக்கெட் வீரர்களுடன் சேர்ந்து அவரும் கூத்து அடித்துள்ளார். ஏற்கனவே பண மூட்டைகளுடன் வந்து இறங்கிய அவர்களை தங்க சங்கிலி அணிவித்து வரவேர்துள்ளார். இது வரை எத்தனையோ வங்காள ராணுவ வீரர்கள் எல்லையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் ஆனால் அவர்களுக்கு கிடைத்த மரியாதை என்ன?
நான் தமிழன் சென்னை ஐ.பி.எல் தொடரை இழந்த வருத்தத்தில் இதை எழுதுகிறேன் என்று வங்காளிகளும் மற்றவர்களும் எண்ணினால் அதற்க்கு உங்கள் பார்வையே காரணம். நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் “சக்தே இந்தியா” பாடல் “சக்தே பெங்காலி” என்று ஒழிக்கப்பட்டது. அவர்கள் தான் இதற்க்கு காரணம். ஒரு வேலை சென்னை ஐ.பி.எல் தொடரை கைபற்றியிருந்தால் இதே போன்று இங்கும் இவ்வளவு கேலி கூத்துகள் அரங்கேறி இருக்கலாம். ஆனால் ஜெயலலிதா இது போன்று கொண்டாடங்களில் ஈடுபட்டிருக்க மாட்டார்.
சரியாகச் சொன்னீர்கள்... நாடு செல்லும் பாதையைப் பார்த்தால் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது... முள்ளி வாய்க்கால் படுகொலை நடந்தபோது, மானாட மயிலாட என இயைபுப் பட பெயர் வைத்துப் பார்த்து மகிழ்ந்தவர்கள் தானே நாம்...
ReplyDeletehttp://tamilvetrivel.blogspot.in/
அருமையான பதிப்பு...
ReplyDeletehttp://tamilvetrivel.blogspot.in/