அப்படி, என்னதான் அதில் இருக்கு. இன்றைய உலகில் சமூக வலைத்தளத்தில் இந்த 140 காலூன்றி நின்றுவிட்டது. ட்விட்டரின் செய்தி பகிர்வதற்கான எழுத்துக்களின் எண்ணிக்கையே இந்த 140. 140 எழுத்துக்களுக்குள் ஒருவர் தாம் சொல்லவந்த செய்தியை, கருத்துக்களை சொல்லி முடிக்க முடியும் என்று நிருபித்துகாட்டிவிட்டது இந்த ட்விட்டர்.
இன்றைய டிஜிட்டல் உலகில் சர்வமும் இன்டர்நெட் மயமான பிறகு மனிதனின் வேலை சுமை குறைவதால், அவன் சோம்பேறி ஆகின்றான். உட்கார்ந்த இடத்தில் எதையும் செய்யலாம் என்று ஆனபிறகு, அரசியல்வாதி போல் மேடையேறி எதிர்ப்பு தெரிவிக்க அவசியமில்லை. 140 எழுத்துக்களுக்குள் தான் சொல்ல வந்ததை சுலபமாக சொல்லிவிட முடியும். இதற்க்கு சில நேரங்களில் பதில்களும் மற்றும் ரீட்வீட்டுகளும் கிடைக்கும்.
ட்விட்டர் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். ஆதலால் என்னையும் அதில் இணைத்து கொண்டேன். தற்போது, ட்விட்டரில் இணைந்து ஆறுமாத காலமாகிறது. இந்த ஆறு மாதமும் ட்விட்டரால் அடிமைபடுத்தப்பட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், நமக்கு பிடித்தவர்களை நாம் பின்தொடர்வதால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள நான் ஆர்வம் கொள்கிறோம். நாம் பின்தொடற்பவர்கள் நெல்சன் மண்டேலாவும் அல்ல அப்துல் கலாமும் அல்ல, எல்லாம் சினிமா நடிகர் நடிகைகள் தான்.
பிக் பி முதலில் தான் தாத்தா ஆக போகிற செய்தியை ட்வீட் செய்த சில நொடிகளிலே நான் தெரிந்து கொண்டேன். இது மட்டுமல்லாது பலர் தாங்கள் என்ன செய்கிறார்கள் என்று ட்வீட் செய்ய செய்ய நான் அதை படித்து கொண்டிருந்தேன் (வேற வேலை இல்லை, அதான் இப்படி). இப்படி நாளுக்கு நாள் நேரத்தை வீனடிகிறேன் என்று எண்ணி எனது அக்கௌன்ட்டை மூடி விட முடிவு செய்த போது ட்விட்டரில் சில ஜோக்ஸ் படித்தேன், மற்றும் சில நாட்டு நடப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டேன்.அந்த நேரத்தில் ட்விட்டர் நபர்களால் கலாய்க்கபட்டவர் நம்ம கபில் சிபில் அய்யா தான். நானும் அவர் செய்த நல்ல காரியங்களுக்காக ஒரு வாங்கு வாங்கிவிட்டேன்.
இப்படி சிலரை சகையாடுவதர்க்கு மட்டுமலாது, சில முக்கிய செய்திகளையும், தொழில்நுட்ப கருத்துகளையும் தெரிந்துகொள்ள ட்விட்டர் மிகவும் பயனாக உள்ளது. பேஸ் புக் இந்தியாவில் மிகுந்த வளர்ச்சி கண்டுள்ளது. வரும்காலத்தில் ட்விட்டரும் இந்தியர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்று எண்ணுகிறேன்.
I like twitter... i update my status in every half hour in my BB..
ReplyDelete