Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Sunday, April 29, 2012

வா, நீ வா


வா, நீ வா! வா, நீ வா
பார்க்காமல் தவிக்கின்றேன்
விழியே, நான் துடிக்கின்றேன் [வா, நீ வா]
கார்மேக முகிலே, வா
கொங்கு நாட்டு மகளே, வா
நீ இல்லாமல் வாழ்விங்கு இருள்கிறதே
நிலவும் கூட ஒளிரத்தான் மறுக்கிறதே.

[வா, நீ வா]

நீ, பேசும் வார்த்தையெல்லாம்
தேசிய கீதமாய் ஒலிக்கிறதே
நீ, சிரிக்கும் சிரிப்பெல்லாம்
புகாரி ராகமாய் கேட்கிறதே
நீ, ஓரப்பார்வை பார்த்தால்
போதும், நட்சத்திரமும் ஒதுங்குமடி
ஒதுங்கி நின்று முடிகோதினாளும்
தென்றல் காற்று வீசுமடி.

 [வா, நீ வா]
  
பாவி மனிதன் தவிக்கின்றேனே
இறங்கி வர மனமில்லையா?
நினைத்து நினைத்து அழுகின்றேனே
பெண்ணே உனக்கு மனமில்லையா?
உள்ளம் முழுதும் வலிக்கிறதே
உன்னை தாங்கி கொள்ள துடிக்கிறதே
மரணமும் கூட மறுக்கிறதே
உன்னுடன் வாழச் சொல்கிறதே... [வா, நீ வா]
 

6 comments:

  1. I think you are in love. your blog is full of love poem. wonderful lovable lines.. congrats..

    ReplyDelete
  2. ரவி கார்த்திக்Sunday, April 29, 2012 7:52:00 PM

    அழகான வார்த்தைகள், தங்களுக்கு எனது பாராட்டுக்கள். காதலை மட்டும் பற்றி தான் தாங்கள் எழுதுவீர்களோ???

    ReplyDelete
  3. Lovely lines as far as I understand from Google translate.

    ReplyDelete
  4. sema lines... enna na po nee po song remixahhhhhh... haha

    ReplyDelete
  5. கொங்கு நாட்டு மங்கையின் பிரிவில் பரிவு தேடும் சொல்லாடல்கள். அருமை.

    ராகம் முகாரி என்று நினைக்கிறேன். கவனிக்கவும்.

    ReplyDelete
  6. @கீதமஞ்சரி தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. கவனிக்கிறேன்....

    ReplyDelete

 

வந்து போனவுங்க