Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Sunday, July 15, 2012

அறிவியலின் அடுத்த படி.



இந்த கடவுளின் துகளை கண்டறியும் முயற்சி ஆரம்பித்தது 1983ம் ஆண்டு.பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு இதன் ஆய்வக தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இப்போதுதான் அந்த சோதனை மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியிருக்கிறது. ஆனாலும் முழுமையான சோதனை முடிய இன்னும் நான்கைந்து ஆண்டுகள் ஆகலாம். இதையடுத்து வேறோரு கோணத்தில் ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் தொடர்ந்து கொண்டே போகும் என்பது நிச்சயம்.

         இந்த சோதனை நடந்தால் உலகமே அழியும் என ஒரு குரூப் தீவிரமாக இந்த சோதனைக்கு எதிராக நின்றனர். அளவிட முடியாத அணுவின் ஆற்றல் இந்த மோதலில் விளைவாய் ஏற்படும் இதன் மூலம் உலகம் அழியும் என சிலரும், உலகம் இந்த சோதனையினால் சுருங்கி சிதறும் என ஒரு செட்டப் குரூப்பும் தங்கள் தரப்பு விளக்கங்களோடு எதிர்க்கின்றனர்.
இன்னும் ஒரு சிலர் பூமியிலுள்ள உயிர்வழி எல்லாம் இந்த சோதனையின் மூலம் இழுக்கப்பட்டு பூமி வெற்றிடமாகிவிடும். இந்த பூமி எனும் கோளமே இந்தச் சோதனையின் மூலம் முழுமையாக அழிக்கப்படும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.

          டாக்டர். அட்ரியன் கெண்ட் என்பவர் இந்த சோதனையின் விளைவுகள் கவனமாய் பரிசீலிக்கப்படவில்லை எனவும் ஒட்டு மொத்த மனித குலத்தில் சாவுமணியாய் இருக்கக் கூடும் இந்த அராய்ச்சி என 2003 ல் ஒரு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத் தக்கது.

           எனினும், இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளவர்களோ, இதில் உலகிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தொடர்ந்து சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.இந்த ஆராய்ச்சிக்காக அவர்கள் செய்திருக்கும் ஏற்பாட்டைப் பார்த்தால் வியப்பில் புருவங்கள் எகிறிம்.

          பிரான்சு – சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதியில்தான் இந்த சோதனைத் தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. தரையில் பூமிக்குக் கீழே சுமார் நூறு மீட்டர் ஆழத்தில் தான் இந்த சோதனைச் சாலையே அமைகிறது.

         உள்ளே மிக சக்தி வாய்ந்த ஒரு சுற்றுப் பாதையை அமைக்கிறார்கள். இந்தச் சுற்றுப் பாதையின் நீளம் 27 கிலோ மீட்டர்கள்! இந்தச் சுற்றுப் பாதை மிக மிக சக்தி வாய்ந்த, கனம் வாய்ந்த, வலிமை வாய்ந்த உலோகங்களால் அமைக்கப்படுகிறது. அணுக்களின் மோதல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே துல்லியமாய் ஊகிப்பது கடினம் என்பதால் அதீத கவனம் எடுத்துக் கொள்வதாகத் தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

            இந்த 27 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையில் சுமார் 5000 காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவையே இந்த ஒளிக்கற்றையை சரியான பாதையில் பயணிக்கவைக்கும். இந்த ஒட்டு மொத்த அமைப்பும் சுமார் -271 டிகிரி செண்டிகிரேடில் உறை குளிர் நிலையில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தப் பிரபஞ்சத்திலேயே அதிக குளிரான இடம் இது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதற்காக அவர்கள் திரவ ஹீலியத்தைப் பயன்படுத்துகின்றனர் என்பது ஒரு இன்னோரு அறிவியல் தகவல். இந்த அமைப்பை இந்த நிலைக்குக் குளிர வைக்கவே சுமார் ஒரு மாத காலம் ஆகுமாம்.

            இந்த அமைப்பிலுள்ள காம்பாக்ட் மோன் சோலினாய்ட் ( Compact Muon Solenoid (CMS) ), எனும் ஒரு சிறு பகுதியின் எடை மட்டுமே சுமார் 2500 டன் என்றால் மொத்த அமைப்பின் எடையை சற்று யோசித்துப் பாருங்கள். இதை பூமியில் நூறு அடி ஆழத்தில் இறக்கி வைக்க ஆன நேரமே 12 மணி நேரம் எனில் மொத்த அமைப்பின் தயாரிப்புக் காலத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.சரி, இதை வைத்துக் கொண்டு எப்படித் தான் ஆராய்ச்சி செய்கிறார்கள்.

           எளிய முறையில் சொல்ல வேண்டுமெனில், இந்த வட்டப்பாதையில் ஒரு முனையிலிருந்து இரண்டு புரோட்டான் ஒளிக்கதிர்களை பாய்ச்சுவார்கள். இதன் சக்தி 450 கிகா எலக்டோ வால்ட். இது சுற்றுப் பாதையில் இரண்டு பக்கமுமாகப் பாய்ந்து செல்லும். இந்த பாய்ச்சலை சுற்றியிருக்கும் காந்தங்கள் வகைப்படுத்தும்.

             வட்டத்தில் இரண்டு பாதை வழியாக வேகமாக வரும் இந்த கதிர்கள் ஒரு இடத்தில் மோதிச் சிதறும். அந்த மோதிச் சிதறும் கணத்தில் இந்த கடவுளின் துகள் என்று அவர்கள் அழைக்கும் சக்தி வெளிப்படும் என்பதே அவர்களுடைய கணிப்பு. எவ்வளவு சக்தி வந்தாலும் இந்த அமைப்பு தாங்குமா என்பதை பல்வேறு கடினமாக சோதனைகள் மூலம் சோதித்து வந்தன்ர்.

               பன்னிரண்டாயிரம் ஆம்ப்ஸ் மின்சாரத்தை இவற்றில் பாய்ச்சி சோதிப்பது அவற்றில் ஒன்று. பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் நிகழவிருக்கும் இந்த ஆய்வு விஞ்ஞானத்தில் இன்னும் பல மர்மக் கதவுகளை திறக்கப் படவில்லை.

               இந்த ஆய்வு மனுக்குலத்தையே அழிக்கும் பல்வேறு மூலக்கூறுகளை உருவாக்கலாம், அல்லது இயற்கை கட்டமைப்பின் மாற்றங்களை உருவாக்கலாம், பூமியே உயிரற்ற ஒரு பொட்டல் காடாய் மாறிவிடலாம் எனும் அச்சம் வேறு பல ஆய்வாளர்களிடையே நிலவுகிறது.
இந்தச் சோதனை குறித்த விரிவான தகவல்கள் பெற விரும்பினால் http://lhc.web.cern.ch/lhc/ எனும் இணைய தளத்தை நாடலாம்.

நன்றி:

Friday, July 13, 2012

பில்லா – 2


அஜித், ப்ருனோ அப்துல்லா, பார்வதி நடித்த இத்திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளோடு வந்துள்ளது. இதில் நாயகன் அஜித் இலங்கை அகதியாக வருகிறாராம்?(சொன்னா  தான் தெரியுது) படம் ஆரம்பமானது முதல் இறுதி வரை அஜித்தின் முகம் மட்டுமே திரையில் தெரிகிறது. எதற்கென்றே தெரியாமல் ஒன்றுக்கு இரண்டு பெண்களை படத்தில் வைத்துவிட்டு அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு தரவில்லை என்றே சொல்ல வேண்டும்.
ஒரு அகதி! எப்படி வாழ்வில் உயர்கிறான் என்று கதை செல்கிறது. சான்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பது போல அஜித்துக்கு செல்லும் இடமெல்லாம் ஒரே எதிரிகள் தான். படத்தின் உண்மையான நாயகன் வசனகர்த்தா தான். திரு. முருகன் அவர்களது வசனம் அனைவரையும் கைதட்டவைக்கிறது.

படத்தின் முதல் பாதி அல்பசினோ(Al Pacino) நடித்த Scarface திரைப்படம் என்பது தெளிவாக தெரிகிறது. இரண்டாம் பாகமும் பாதி வரை அப்படியே செல்கிறது. இயக்குனர் செய்த ஒரே மாற்றம் அஜித்தை இறுதியில் சாகடிக்காமல் விட்டது தான். ஏனென்றால், முதல் பாகத்தில் அவர் ஏற்கனவே செத்துவிட்டார் அல்லவா. அஜித் நடக்கும் ஒவ்வொரு காட்சியிலும் அரங்கு அதிர்கிறது. யுவனின் இசை இடி போல இடிக்கின்றது.
நச்சினு நாலு:
1.       மத்தவங்களோட பயம் நம்ம பலவீனம்.
2.       இது பேராசை இல்ல, பசி.
3.       என்னோட வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் , ஒவ்வொரு நிமிஷமும் ஏன், ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனது டா.
4.       நெனச்சத சாதிச்சுட்ட, ஹ்ம்ம் இது வெறும் ஆரம்பம் தான்.
கொசுறு
ü  படத்தின் சாயல் அல்பசிநோவின் படத்தில் இருந்து எடுத்தது என்று நன்றாக தெரிகிறது.
ü  Scarface படத்தில் அல்பசினோ(Al Pacino)விடம் இருந்த முக பாவனைகள் அஜித்திடம் இல்லை. எல்ல காட்சிக்கும் ஒரே மாதிரி ரியாக்க்ஷன்.
ü  இலங்கை அகதி என்று சொல்லும் அவர் ஒரு இடத்திலும் அதை காட்டவில்லை. அங்கே அல்பசினோ(Al Pacino) கியூபா அகதி.
ü  தனது அக்கா பெண்ணை காப்பாற்றும் ஒவ்வொரு காட்சியும் Scarfaceஇல் நாயகன் தங்கையை காப்பாற்றுவதற்காக செய்தவை.
ü  பாடல்கள் ஓகே தான். அதிலும் யுவன் ஜெனீபர் லோபஸின் ஒரு பாடலை நைசாக சுட்டுவிட்டார்.(மங்காத்தா தீம் போல)
ü  கிளைமாக்ஸ் காட்சியில் அஜித் ஹெலிகாப்டரில் இருந்து சண்டையுட்ம் காட்சியில் அவரது இடது கையில் சங்கிலி கட்டியது தெளிவாக காட்டுகிறது.
ü  ஒளிப்பதிவு அருமை, visual effects  அருமை, ரெட் ஒன் கேமரா நன்றாகவே வேலைசெய்கிறது. அஜித் நடந்து வருவதும் அருமை.

நப்பாசை:
அடுத்த படத்தில் அஜித் காட்பாதருடன் சேர்ந்து இது போல ஒரு படம் நடிக்க வேண்டும். மீண்டும் பில்லா எடுத்தால் அவரிடம் கெஸ்ட் ரோல் கேட்டு பார்க்கலாம்.

மிச்சத்தை தியேட்டருக்கு போய் பாருங்கோ...கதைய சொல்ல மாட்டேன்!!!!

Wednesday, July 11, 2012

ஜோடி பிரேக்கர்ஸ்



மாதவன் மற்றும் பிபாசா பாசு நடித்த இத்திரைப்படம் பெரும் விளம்பரத்துடன் வெளிவந்தது. பெயருக்கு ஏற்றாற்போல் இதில் இவர்கள் தொழிலும் அதுதான். மாதவன் சித் என்ற கதாபாத்திரத்திலும், பிபாசா சோனாலி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்டு வாழும் ஜோடிகளை இவர்கள் பிரிகின்றனர். இதுவே இத்திரைப்படத்தின் கதை.
மாதவன் ஏற்கனவே விவாகரத்து ஆனவர் என்பதால் அதையே தொழிலாக்கி சம்பாரிகின்றார். இடையில் வந்து பிபாசாவும் ஒட்டிகொல்கிறார். ஆரம்பம் முதல் ஜோடிகளை பிரித்து வரும் இவர்கள் ஒரு ஜோடியை மட்டும் சேர்த்து வைக்க முயல்கின்றனர். அந்த இடத்தில இடைவேளை வருகிறது மற்றும் திரைக்கதையில் ஒரு திருப்பமும் ஏற்படுகிறது. மாதவனின் முதல் மனைவியை வேறு ஒருவரோடு அவர் சேர்த்துவைத்து தான் மாத மாதம் செலுத்த வேண்டிய அளிமோனி தொகையில் இருந்து தப்பித்து கொள்கிறார்.
பின்னர் அவருக்கும் நாயகிக்கும் முட்டிக்கொண்ட பிறகு பிரித்த ஜோடியை மீண்டும் இணைக்க முயல்கிறார். அப்படியே தனது பிரிவையும் சரிசெயா முயல்கிறார்.இறுதியில் எப்படி ஒன்று சேர்கின்றனர் என்பதே கதை.  படத்தில் பாடல் அனைத்தும் சுமார் ரகம் தான். சலீம் சுலைமான் ஜக ஜாலம் எடுபடவில்லை.

நச்சுன்னு நாலு.
1.       மாதவனின் தோழனாக வரும் த்ரீ இடியோட்ஸ் சைலேன்செர் சாமியாராக வரும் காட்சி.
2.       வசனம் எழுதிவைத்த தாளுக்கு பதிலாக பாரின் மெனு கார்டை வைத்து அவர் அடிக்கும் லூட்டி, அத்தனையும் இரட்டை அர்த்தம.
3.       பாபா ராம்தேவ் இவரிடம் சிக்கி காம்தேவ் ஆனார்.
4.       அடுத்த காட்சியில் சைலேன்செர் மருத்துவமனையில் க்ளுகோஸ் ஏத்தும் காட்சி அதன் நோக்கத்தை தெளிவாக காட்டுகிறது.
கொசுறு:
படம் ஒன்னும் விருவிருப்ப்பாக எல்லாம் ஒன்றும் இல்லை. சும்மா வேற வேலையில்லேன்னா பாக்கலாம். மத்தபடிக்கு இது ஒரு தோல்வி படமே. அங்கங்க  ஓட்டி பாக்கவேண்டிய நிலைமை. இத பாக்குறதுக்கு வேற வேலை இருந்தா பாருங்க.

Tuesday, July 10, 2012

ஏஜென்ட் வினோத்


சைப் அலி கான் மற்றும் கரீனா கபூர் நடித்த இத்திரைப்படம் ஒரு தமிழரால் இயக்கப்பட்டது. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை தீவிரவாதம், புலனாய்வு என்றே செல்கிறது. நாயனாக வரும் சைப் அலி கானிற்க்கு படத்தில் குறிப்பாக ஒரு பெயர் இல்லாமல் ஒவ்வொரு தருணத்திலும் ஒரு பெயரில் வளம் வருகிறார். இதில் இவரது பெயர் ஏஜென்ட் வினோத். ஆப்கானிஸ்தானில் படம் தொடங்கி லண்டன, மோரோகோ, ரஷ்யா, பாகிஸ்தான் என்று உலகம் சுற்றுகிறது.
கதை என்பது எல்லா ஏஜென்ட் படங்களை போன்றே விறுவிறுப்பாக சொல்கிறது. திரைக்கதையில் அங்கங்கே சில இடங்களில் சொதபல்கள் இருக்கிறது. பின்னணி இசை தமிழில் பல படங்களில் வந்துள்ளது. குறிப்பாக கௌண்டமணி செந்தில் காமெடியின் போது வரும் சில இசைகள் இதில் பயன் படுத்தப்பட்டுள்ளது. பழைய படங்களின் இசைகளும் அவ்வபோது வரும்.
பாடல்கள் எதுவுமே பெரியா அளவில் ஹிட் ஆகவில்லை. ப்ரிதம் இசையில் சரியாக கவனம் செலுத்தவில்லை. இடைவெளியின் போது ஒரு எதிர்பார்ப்பு வைத்து விடுகின்றனர். இறுதி வரை கரீனா வை வில்லியாக காட்டி மறுபடியும் நல்லவராக அடிக்கடி காட்டி வருகின்றனர். கராச்சியில் நடக்கும் ஒரு காட்சியில் மோஸ்ட் வான்டட் லிஸ்டில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ஒரு தீவிரவாதிக்கு பாகிஸ்தான் அரசாங்கம் அணைத்து வித பாதுகாப்பும் அளித்து வருவது, பாகிஸ்தான் ராணுவ தளபதியை வேறு ஒருவர் அவர் இடத்திற்கே சென்று கொன்றுவிட்டு கலோநெல் ஆக பொறுப்பேற்று கொண்டு தீவிரவாதிக்கு உதவுவது போன்று அமைத்து விட்டு இறுதியில் ஒரு மிக பெரிய கேள்வி குறியை விட்டு விட்டனர்.
கரீனா மரணத்திற்கு பிறகு ஊருக்கு நல்லவனாக இருக்கும் வில்லனை கொள்ள லஸ்கர் ஈ தொய்பாவின் உதவியை நாடுவது சிரிப்பு வருகிறது. ஒரு தீவிரவாத கூட்டத்தின் தலைவனின் தொலைபேசி எண்ணை வைத்துக்கொண்டு ஏன் அவனை கைது செய்யாமல் இருக்கவேண்டும்? இது போன்று சில கேள்வி படத்தில் உள்ளது. படத்தில் சொல்லும்படியாக ஒரு வசனமும் இல்லை, எனினும் சைப் அலி கான் நிற்க்கு இது ஒரு வெற்றி படமே...

Monday, July 09, 2012

கலியுக சகுனி


கர்நாடக மாநிலத்திற்கு இத விட ஒரு பெரிய சோதனை தேவையில்லை...எல்லாம் எடியுரப்பாவின் திருவிளையாடல் தான். எடியூரப்ப ஊழல் வழக்கில் சிக்கி சின்னா பின்னம் ஆனதுக்கு அப்புறம் கொஞ்சமாது அடங்குவாருனு நெனச்சன் ஆனா, மனுஷன் நம்ம கலைஞர் மாதிரி ஏதாது சகுனி வேலை செஞ்சு தன்னை காப்பாதிக்குக்றார். லோக்அடழ்க் யே இவற பாத்து என்ன கைய புடிச்சு இழுத்தியானு காலில் விழும் அளவிற்கு இவரது நடிப்பு அருமையாக இருந்தது. பா ஜா கா மேலிடத்திற்கு சதானந்த கௌடா பெயரை சிபாரிசு செய்து தன்னை ஒரு கிங்மேக்கர் ராக ஆக்கி கொண்டார்.

ஒரு வழியாக வழக்கை வேறு வலையில் திருப்பி விட்டு மீண்டும் தன்னை முதல்வராகா அமர்திகொள்ள கடும் போராடி வந்தார். மேலிடம் அசையாத காரணத்தினால் சில சகுனி மற்றும் உல் குத்து வேலைகளை அரங்கேற்றி தற்போது சதானந்தா பதவியையும் பறித்தார். நம் கலைஞரை போன்றே இவருக்கும் என்ன ஒரு சகுனி புத்தி. தற்போது ஜகதீஷ் ஷெட்டரை முதல்வராக்கியுள்ளார். இவரையாது நிலைத்து நிற்க விடுவாரா இல்லையா??பொறுத்திருந்து பார்ப்போம் ..

Friday, July 06, 2012

நான் ஈ-ஒரு பார்வை


தெலுங்கில் ஈகா என்றும், தமிழில் நான் ஈ என்றும் இன்று ஒரே நேரத்தில் உலகம் முழுதும் இந்த திரைப்படம் வெளிவந்து அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கில் விக்ரமாற்குடு(தமிழில் சிறுத்தை), மகாதீரா(தமிழில் மாவீரன்), மரியாதை ரமணா(ஹிந்தியில் சன் ஆப் சர்தார்) என்று வெற்றிப்படங்களை தந்தவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவரது அடுத்த படமாக நான் ஈ இன்று வெற்றிநடை போட்டுகொண்டிருகிறது.
படத்தின் நாயகன் ஒரு ஈ என்று தான் சொல்ல வேண்டும். காரணம் நாணிக்கு இதில் வேலை ஒன்றும் இல்லை. நாயகனும் சமந்தாவும் விரும்புகின்றனர். வழக்கம்போல் எல்லா பெண்களை போன்றே சமந்தாவும் நானியை இழுத்துஅடித்து பிறகு தனது காதலை வெளிபடுதுகிறார். மறுநிமிடமே நாயகன் கைலாசம் செல்கிறார். காரணம் வில்லன் சுதீப் சமந்தாவை அனுபவிக்க நினைக்கிறார். அதற்க்கு தடையாக இருக்கும் ஹீரோவை தீர்துவிடுகிறார். படம் ஆரம்பித்த இருவது நிமிடத்திற்குள் நாயகன் இறந்துவிடுவதால் அனைவருக்கும் கதையின் திரைகதை மீது ஒரு ஆர்வம் ஏற்படுகிறது.
முட்டைக்குள் இருந்து கோழிக்குஞ்சு வருவதுபோல் வரும் இறந்த அடுத்தநாளே ஹீரோ ஈ யாக வருகிறார். ஈ க்கு கொடுக்கபட்டிருக்கும் இன்றோவும் பின்னணி இசையும் ஆர்வமாய் பார்க்கவைத்துள்ளது. பிறகு எவ்வாறு ஈ தன்னை கொன்ற வில்லனை பழிவாங்குகிறார் என்றே திரைகதை செல்கிறது. ஒரு ஈ யின் பீலிங்க்ஸ்சை இயக்குனர் நன்றாக பதிவு செய்துள்ளார். வீசும் வெளிச்சத்திலே பாடல் கேட்பதற்கு குளுமை, பழிவாங்கும் பாடல் ஈடா ஈடா, பாடல் ஒரு சுறுசுறுப்பை ஏற்படுத்துகிறது. வில்லனுக்கு லாவா லாவா என்று ஒரு சிறு பாடலும் உள்ளது.
நச்சுனு நாலு
1.  மாத மாதம் பதினைது ரூபாய் நன்கொடை கொடுத்துவிட்டு ஏதோ    தணிக்கை அதிகாரி போல் கணக்கு கேட்கும் வசனம்.
2.       நாயகியின் தோழியிடம் நீ லூசு என்று சொல்லுவது.
3.  ப்ளாங்க்  செக் கொடுப்பதும், ப்ளாங்க் மெசேஜ் அனுப்புவதும் ஒரு சுகம். ஏன் என்றால் அதை பெறுபவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு கற்பனை செய்து கொள்ளலாம்.
4.  வில்லனிடம் போய் ஐ வில் கில் யூ என்றும், நாயகியிடம் நான் ஈ, மருஜென்மத்தில் ஈயாக பிறந்துள்ளேன் என்றும், இறுதியில் நம்மை பார்த்து ஐ ஆம் பாக் என்று ஈ தனது வேலையை காட்டுகிறது.
5 க்ரேசி மோகனின் வசனங்கள் இனிமையாகவும் நகைசுவை உணர்வுடனும் இருக்கிறது.
6.       ஈயின் தொல்லை தாங்கமுடியாமல் வில்லன் செய்யும் வேலைதனம் சிரிப்பாக ஊள்ளது.


கொசுறு
ü  இதுவரை வந்த இந்திய திரைபடத்தில் இது ஒரு வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம்.

ü  எந்திரனில் கிராபிக்ஸ் படு கேவலம். அந்த தப்பை இதில் கொஞ்சம் கூட இயக்குனர் செய்யவில்லை.

ü  ஈக்கு ஸ்பெஷல் பவர் எதுவும் கொடுக்காமல் ஈயின் தன்மையை வைத்தே வில்லனை பழிவாங்குவது அருமை.

ü  மொத்தத்தில் பார்க்க வேண்டிய திரைப்படம். கண்ணுக்கு புதுமையாக இருக்கும். ஈயின் அழகு அனைவரையும் கொள்ளைகொள்ளும்........மிச்சத்தை திரைஅரங்கில் பார்க்கவும்.

Tuesday, July 03, 2012

அண்ணா பல்கலைகழகத்திற்கு கோடி கும்பிடு


இந்த பேருந்து சென்னையிலிருந்து, திருச்சி, கோவை, திருநெல்வேலி, மதுரைன்னு போய் கடைசியா சென்னைக்கே போயிரும். எல்லாரும் ஏறுங்க ஏறுங்க........
கல்வி என்றால் என்ன என்பதை இன்றைய அரசியல் வாதிகளிடம் தான் கேட்டு கொள்ளவேண்டும். காரணம் நாட்டில் அவர்கள் தான் படித்த, அனுபவமுள்ள திறமைசாலிகள். அவர்களுக்கு தான் தெரியும் எங்கு பல்கலைகழகம் ஆரம்பிக்க வேண்டும், எப்போது தேர்வு நடத்த வேண்டும் என்று. அழகிரி கடந்த நாடாளமன்ற தேர்தல் வாக்குறுதியில் மதுரையில் ஒரு அண்ணா பல்கலைக்கழகம் ஆரம்பிக்க படும் என்று வாக்குறுதி குடுத்தார். தேர்தலில் வெற்றி பெற்றதும் தன்மானசிங்கம், கல்வித்தந்தை, நாடாளும் அரசன், தான் கொடுத்த வாக்கை காப்பாற்ற உடனே மதுரையில் ஒரூ கிளையை ஆரம்பித்தார்.(சரவண பவன் அல்ல).
ஏற்கனவே, இவர் தந்தை நான்கு துண்டாக அண்ணா பல்கலைகழகத்தை ஒரே வெட்டாக வெட்டிவிட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சரி இவர்கள் தான் இப்படி என்றால், உயர் பதவியில் அமர்ந்திருக்கும் படித்த முட்டாள்களும் ஒவ்வொரு பல்கலைகழகத்திர்க்கும் ஒரு மாதிரியான பாட முறையையும், மதிப்பெண் முறையையும் வைத்தது. இதில் கொடுமை என்னவென்றால் இன்டர்னல் மார்க்கை ரகம் வாரியாக வைத்துவிட்டார்கள். கோவையில் மற்றும் திருநெல்வேலியில் தான் தான பிரபுக்கள் அதிகம். 50 மதிப்பெண்களை வாரியிளைதுள்ளனர். சென்னையிலும், திருச்சியிலும்  20 தான். மற்ற ஊர்களை விட சென்னை மாணவர்கள் மதிப்பெண் குறைவாகவே இருக்கும்.
தற்போது, மீண்டும் ஜெ ஆட்சிக்கு வந்ததால் சட்டசபை கட்டடத்தை மாற்றுவது போல், அண்ணா பல்கழைகத்தையும் ஒரே நிமிடத்தில் மாற்றிவிட்டார். இனிமேல் சென்னை தான் தலைமையிடம் என்று. இதனால் உள்ளே ஏகப்பட்ட கோளாறுபடிகள். இந்த வருடம் தேர்வு தேதி நான்கு முறை மாற்றியமைக்கப்பட்டது. மாணவர்களே எப்போது தேர்வு வரும் என்று குலம்பிபோனார்கள். இந்த முறை அனைவருக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாள்.
விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், இவ்வாறு மதிப்பெண் இடுகிறார்கள் என்று இது வரை யாராலும் கணிக்கமுடியாத ஒன்று. ஒரு பாடத்தில் நன்றாக மதிப்பெண் வரும் என்று நம்பி இருந்து அதில் அர்ரியர் கூட விழும். தேறவே தேறாது என்று எண்ணிய பாடம் எப்படியோ தேறிவிடும். சில ஆசிரியர்கள் தங்களுக்கு தெரியாத பாடங்களையே திருத்தவேண்டியுள்ளது.
வேண்டுகோள்:
1. முதலில் துணைவேந்தர் பதவிக்கு பணம், ஆசிரியர்கள் நியமனத்திற்கு பணம் போன்றவை ஒழிந்தால் தான் நிலைமை மாறும்.
2. தகுதியில்லாத ஆசிரியர்களை உடனடியாக பதவிநீக்கம் செய்யவேண்டும்.
3. தனியார் கல்விநிறுவனங்களின் பகல் கொள்ளையை தடுக்கவேண்டும்.
4. நிகர்நிலை பல்கலைகழகங்களை ஒழிக்கவேண்டும்.(காரணம் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் இருந்தால் தான், ஆரோக்கியமான கல்விமுறை அமையும்)
5.        செய்முறை தேர்வு முறை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இன்னும் நிறையாக உள்ளது, பொறுப்பில் உள்ளவர்களோ அல்லது மாணவர்கள் மீது அக்கறை உள்ளவர்களோ கேட்டால் நிச்சயம் முழு திட்டத்தையும் தெரிவிக்குறேன்.(அனைத்தும் இலவசம், நன்கொடை பெறப்படமாட்டாது).


 

வந்து போனவுங்க