Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Sunday, September 23, 2012

மாலை பொழுதின் மயக்கத்திலே
இந்த படத்துல நடிச்சவுங்க ஒன்னும் பெரிய ஆளுங்க கிடையாது. ஆனா, படம் பார்க்க பார்க்க பெருசா நமக்குல்ல எதையோ வெதச்சிடுறாங்க. நாயகனாக ஆரி, நாயகியாக சுபா ஆகியோர் நடித்துள்ளனர். மயூரி சேகர் தயாரித்துள்ளார். குறும் படம் இயக்குனர் நலன் மற்றும் மெரீனா படத்தில் சிவகார்த்திகேயன் நண்பராக வரும் நபரும் இதில் இருக்கிறார்.
படம் முழுவதும் ஒரு காபி ஷாப்பில் நடக்கிறது. ஒவ்வொரு காபி கபேக்கு வரும் ஒவ்வொரு நபரின் மனநிலமையை அழகாய் திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் நாகேந்திர ராவ். இந்த படத்தை 2010 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, இப்போ இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் ரிலீஸ் ஆனது. பொருளாதார அளவில் படம் தோல்வியே என்றாலும் ஒரு சில ரசிகர்கள் மட்டுமே ரசிக்கும் படியாக படம் உள்ளது.
தயாரிப்பாளருக்கு செலவே இல்லாமல் படத்தை எடுத்து முடித்து விட்டார் இயக்குனர். இனி கதைக்கு வருவோம்.
இயக்குனராக வேண்டும் என்று முயற்சிசெய்துகொண்டிருகிறார் நாயகன். இவரது பார்த்தவுடனே காதல் ஒரு பக்கம் செல்கிறது, கதையே எழுததெரியாமல்  முழிக்கும் நபர் ஒருவர், கணவன் மனைவி சண்டை போட்டு கொண்டு சமாதானமாக இருக்க முயற்சி செய்து கொண்டு இருவர்.
இதற்கு நடுவில் காபி ஷாப்பின் மேனேஜர் மற்றும் ஊழியர்கள் என பல கதைகளை ஒரே படத்தில் வைத்திருக்கிறார். அதுக்காக எல்ல கதையையும் ஒரு வரியில்ல சொல்லிட்டாரு.

படத்தில் பாடல் ஒன்றும் பெரிதாக இல்லை. முதல் பாடல் மட்டுமே ஹிட்.
இந்த படம் பார்க்குற அளவு நல்லா தான் இருக்கும். ஆனா, சில விமர்சகர்கள் ஏன் இப்படி கமெண்ட் கொடுதிருகுறாங்க http://en.wikipedia.org/wiki/Maalai_Pozhudhin_Mayakathilaey

நச்சுன்னு நாலு:
1. ஹலோ பாஸ், ஜோஷிய காரன் மதியம் 2 மணிக்குள்ள ரோட்ல கால வைக்க சொல்லிஇருக்கான்.அப்ப தான் நம்ம படம் ஹிட் ஆகுமாம்.
2. சார், டிக்கெட் தரன்னு சொல்லிடு அவர் கிட்ட வித்துடீங்க.
நான், தரன்னு சொல்லல, வேணுமான்னு தான் கேட்டேன்.
3. கேப் போடு டா. போற்றுந்தன் மச்சான். ஆனா, எப்படியு மிஸ் ஆகிடுச்சு. மேனேஜர் எத்தன தடவ சொல்லி இருக்காரு கேப் போட்டு வெளிய சுத்துன்னு(காட்சியோடு பார்க்கவும்).
4. வெளியில மழை, உள்ள குளுறு, இளையராஜா சாங் வேற, இதுல ஐஸ்கிரீம் பக்கதுள்ள பொண்ணு. செம பீலிங்க்ஸ்...
கொசுறு:
படத்தில் கதை இல்லையென்றாலும் நமக்கு ஒரு அட்வைஸ் என்று கூட எடுத்து கொண்டு இந்த படத்தை பார்க்கலாம். ஹிட் ஆகாதது வருத்தமே.

9 comments:

 1. எனக்கும் பிடிச்சுருக்கு,
  ஹீரோயிசத்துக்கு இது எவ்வளவோ பரவாயில்லை

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் புடிச்சிருக்கு கதிர்.. ரத்த கலரியுடன் இருபதர்க்கு இது பெட்டர்.

   Delete
 2. Ithavita NAGARIHA KOMALI PATAM SUPER......

  ReplyDelete
 3. அடுத்த படமும் பாத்தாச்சா???? நான் முடிஞ்சா டவுன்லோட் பண்ணுறேன்...

  வாழ்த்துகள், தொடருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்வது வெற்றி. சண்டே இஸ் ஒன்லி பார் தட்.

   Delete
 4. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தமிழ் உலகம் அட்மின்

   Delete
 5. மகிழ்ச்சியாக இருந்தால் சந்தோசம்...

  ReplyDelete

 

வந்து போனவுங்க