Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Monday, August 22, 2011

அரசு கவனத்திற்கு
என்னை அரசியலில் ஈடுபட கூடாது என்று யாரேனும் சொன்னால் நான் வெகுண்டேலுவேன். அதுவே அரசாங்கம் மாணவர்கள் அரசியலில் ஈடுபட கூடாது என்று ஒரு விதிமுறை கூறினால் அந்த அரசாங்கத்தை கண்டிக்கவும் தயங்கமாட்டேன். கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவிதொகைகான விண்ணப்ப படிவத்தில் என்னை கோபம்  கொள்ள செய்த ஒரு வரி “நான் அரசியலிலோ அல்லது வேறு அழிவு பாதையிலோ செல்லமாட்டேன் என்று உறுதிமொழி கூறுகிறேன்” இவ்வாறு அதில் அச்சிடப்பட்டுள்ளது. இது எனக்கு மிகுந்த மனவேதனையை தருகிறது. ஏன் ஏழை மாணவன் அரசு உதவித்தொகை பெற்று படித்து கொண்டு அரசியலிலும் ஈடு பட்டால் என்ன தவறு? அரசு இனியாது இது மாதிரியான தவறை செய்யாமல் இருக்க வேண்டும்.

Thursday, August 18, 2011

கல்லரை காதல்

உன் விழி வில்லானது!!
பார்வை அம்பானது!!
என் இதயம் துண்டானது!!
நினைவு ஒன்றானது!!
பார்வையிலே படியவைத்தாய்!!
சிரிப்பினிலே சிதரடித்தாய்!!
வார்த்தையிலே வாழவைத்தாய்!!
நிரந்திரமாய் தூங்கவைத்தாய்!!
கல்லரையிலே நிரந்திரமாய்!!

Wednesday, August 17, 2011

ஈழ தாகம்


புரட்சி வெடிக்கும்

எழுச்சி நடக்கும்

தமிழனாய் பேசுகிறேன்

கண்ணீரை வீசுகிறேன்

மேடையில் தலைவர்களின் பேச்சு

நின்றதோ தமிழர்களின் மூச்சு

இங்கு நடந்தது தேர்தல்

அங்கு நடந்தது மோதல்

இங்கே வெற்றி வெடிச் சத்தம்

அங்கே பீரங்கிகளின் முழக்கம்

இந்தியாவின் வேசம்

முல்லைத்தீவே நாசம்

புலங்குவது பணக்கட்டு

குவிகிறது பிணக்கொத்து.

Sunday, August 14, 2011

அவள் யார்???


கனவுகள் கலைந்துபோனது

கற்பனைகள் கனவு ஆனது

மகிழ்ச்சிகள் எங்கு போனது

தெரியவில்லை,எனக்கு புரியவில்லை

கவலைகள் ஆயிரம்

காரணமும் நூறாயிரம்

ஆனாலும் மறக்கவில்லை,

மறக்கத்தான் முடியவில்லை

ஏதோ ஒன்று என்னை தாக்குது

தூரத்திலிருந்து எட்டி பார்க்குது

காரணம் புரியவில்லை, அது யாரோ தெரியவில்லை

அவள் தேவதையா இல்லை என் பயிங்கிளியா!!!

Saturday, August 13, 2011

சுதந்திர தாகம்

தாய்மீது ஆணையிட்டேன்
தமிழனாய் பிறக்கையிலே
தமிழீழ போராட்டம்
முன்னின்று நான் புரிவேன்
சுதந்திர காற்று
சுவாசம் கொள்ளும்வரை
வரிபுலி நாங்கள்
துணிந்து பாயுவோம்
தலைவன் அவன் ஆணையிட்டால்
கரும்புலியாய் மாறுவோம்.

Thursday, August 11, 2011

காதல் மோகம்


திருமணமான ஒரு பெண் தன் கணவன் மீது வைத்துள்ள காதலை பாடலாக பாடுகிறாள்.
 வன்முறையாலனே!
வன்முறை ஆடவா!
கட்டிலில் கொள்ளவா!
தொட்டில் வெல்லவா!

இருமனம் இணைந்தோம்
திருமணம் புரிந்தோம்
ஒருவராய் வாழ்வோம்
அந்த நிலவினை ஆழ்வோம்

வன்முறையாலனே!
உன்னோடு வாழத்தான்
ஒரு யுகம் போதுமா
என் இச்சை தீருமா

கனவினில் நுழைந்தாய்
இரவினை தொலைத்தேன்
மயக்கத்தில் விழுந்தேன்
உன்னிடம் சரணடைந்தேன்

பூமியில் 
படைசாற்றும் வேளையில்
என் தாகம் தனிக்கவா
என்னை நீ புணரவா

ஊடல் தான்
காதலின் எல்லையோ
அது அன்பு தொல்லையோ
களைபாற்றி ஆடலாம்

காலம் தான்
அது ரொம்ப, பாவம் தான்
தினந்தோறும் விடியுதே
முடிவேதும் இல்லையா

குளிர்காலமோ
குளிர்காய தோணுமோ
முன்பகல் வெறுக்குமே
என் காதல் கிருக்கனே!!! 

Tuesday, August 09, 2011

அழகி

உலகம் அழியுமோ
        காலம் கழியுமோ
யுத்தங்கள் தோன்றலாம்
        உயிர்களும் மாயலாம்
நல்லவனாய் நின்றாலும்
        தீயவனாய் நின்றாலும்
அழகென்று ஒன்றிருந்தால்
        அடிமையாய் நானிருப்பேன்
சிந்தனைகள் சிதைந்தாலும்
        விந்தைகள் விளைந்தாளும்
நீ யாரோ என்னை நினைக்க
        நான் யாரோ உன்னை ஏற்க..
                                     

Sunday, August 07, 2011

கலைஞரின் பொலம்பல்

இது என்ன நாடா? கடும்புலி வாழும் காடா? நாட்டிலேதான் வாழ்கிறோமா? அல்லது காட்டிலே வாழ்கிறோமா?:  கலைஞர்


சொத்து குவிப்பு வழக்கை வாய்தா வழக்காக மாற்றிய ஜெயலலிதா: கலைஞர்


பயங்கரமான ஆட்சியாக நாட்டுக்குத் தெரிவிக்கிறார் ஜெயா: கலைஞர்

திமுக ஆட்சியையும் இன்றைக்கு நடைபெறும் ஆட்சியையும் ஒப்பிட்டுப் பாரீர்: கலைஞர்

அழுத்தம் திருத்தமாக ஆப்பு அடிக்கவேண்டும் என்று....
:
கலைஞர் பேச்சு

அதிமுக ஆட்சியில்தான் கடன் தொகை அதிகம் : கலைஞர் பேச்சு

உள்பாவாடை காணாமல் போய்விட்டால் கூட
எங்கள் மீது கேஸ் போடுகிறான் : கே.என்.நேரு பேச்சு

பட்ஜெட்டுக்கு முன் வரிகளை சுமத்திவிட்டு வரியில்லாத பட்ஜெட்' என்று புகழ்ந்து கொள்வதா? கலைஞர்


    கடந்த இரு தினங்களா கலைஞர் கருணாநிதி இப்படி பொலம்பி தள்ளிடார். பாவும் மனுஷன் தேர்தல்ல தோத்ததுல இருந்து நொந்து பொய் இருக்கார். எங்க நம்மளையும் இரவோடு இரவா காவல் துறையினர் அலேக்காக தூக்கிகொண்டு செல்வார்களோ என்கிற பயம் வேற இருக்கு.  இந்த வயசுல இது தேவையா. அதான் மக்கள் நல்ல ஓய்வு கொடுத்துவிட்டனர் னு  சொன்னீங்கள அப்ப ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதான. ஏன் இப்படி.. பொன்னு தான் சந்தோசமா திகார்ல இருக்கா, பசங்கலாது இங்க நிம்மதியா இருக்கட்டுமே. நீங்களே அவுங்களையும் உள்ள தள்ள ஏற்பாடு செய்றீங்க. வாழ்க திகார் முன்னேற்ற கழகம் (தி மு க )....

Saturday, August 06, 2011

பட்ஜெட் 2011


ஒருவழியா புதிய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டது. இனி இதன் மீது பேரவை விவாதம் நடக்கவிருக்கிறது. இம்முறையும் பட்ஜெட்டில் அதிமுக  அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த இலவசங்களுக்கே முன்னுரிமை அளித்துள்ளது. இலவச கிரைண்டர், பேன், போன்றவற்றுக்கே 1000 கோடி ருபாய்க்கு மேல் ஒதுக்கிவிட்டனர்.
புதிய அரசு பொறுப்பேற்ற மூன்று மாதத்தில் தாக்கல் செய்யும் பட்ஜெட் சற்று விவாதத்துக்குள்ளாகும். காரணம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவே அவர்கள் முன்னுரிமை அளிப்பார்கள். அதையே தான் இந்த அரசும் செய்துள்ளது.
சரி இப்படி இவர்கள் விருப்பத்திற்கு இலவசத்தை வழங்குகிறார்கள். இதெற்கெல்லாம் பணம்? வேறு என்ன! கடன் தான். தற்போது தமிழ்நாட்டின் மொத்த கடன் 1,18,610 கோடி ரூபாய். அடேங்கப்பா, இவ்வளவா(ஸ்பெக்ட்ரம் முறையாக நடந்திருந்தால் அந்த ஒரு லட்சம் கோடி ரூபாய் லாபத்தில் ஒரு மாநிலத்துக்கே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்திருக்கமுடியும்).இதற்கு வட்டி தொகை மட்டும் ஆண்டுக்கு 8000 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தவேண்டும்.இந்த நிலையில் தமிழகம் தான் குறைவாக கடன் வைத்திருக்கும் மாநிலத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது என்று பெருமை வேறு. இன்னும் இரண்டு ஆண்டுக்குள் கடனை திருப்பி செலுத்த வழிவகை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
3000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். ஆனால், தற்போது இருக்கின்ற பழைய பேருந்துகள்  மிக அவல நிலையில் உள்ளன.அரசின் சொகுசு பேருந்தில் மூட்டைபூச்சிகள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. சேலம், விழுப்புரம் கோட்டங்களை பார்கையில் கோவை கோட்டத்தின் கீழ் இயங்கும் பேருந்துகள் சற்று பரவாயில்லை.
மூன்று மணி நேரம் நிதியமைச்சர் அவர்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டை முன்னால் முதல்வர் அவர்கள் “இது ஒரு பட்ஜெட்டா?” என்று கேட்டு அறிக்கை விடுத்துள்ளார். அய்யா அவர்கள் 2006 தேர்தலில் வெற்றி பெற்று தாங்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டை ஒரு நிமிடம் நினைவுகூர்ந்து  பாருங்கள் தங்களுக்கே அது வேடிக்கையாக தெரியும்.
இந்த பட்ஜெட்டில் ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு கோடிகளை ஒதுக்காமல் இலவசத்துக்கே ஒதுக்கிவிட்டார்கள். இருந்தும் ஒரு சில நல்ல திட்டத்திற்கும் போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.வேலையில்லா பட்டதாரிகளை இந்த பட்ஜெட் கண்டுகொள்ளவில்லை. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் பாராட்டுக்குரியது.. போலீசாருக்கும் 40 மற்றும் 100 கோடி என தனியாக ஒதுக்கிவிட்டார்கள். இலவச வீட்டு திட்டத்தில் இரண்டு வகைகளை வகுத்துள்ளனர். அது சற்று வருத்தத்துக்குரியது. தாலிக்கு தங்கம் வாங்குவது, இலவச லேப்டாப், 106 கோயில்களில் அன்னதானம், அணைகளை பராமரித்தல், காவிரியில் புதிய தடுப்பணை கட்டுவது என அட்டவணை நீண்டுகொண்டே செல்கிறது.
மற்றொரு பாராட்ட வேண்டிய திட்டம் எம்.எல்.ஏ தொகுதி வளர்ச்சி நிவாரண நிதி 1.75 கோடியிலிருந்து   2 கோடியாக உயர்த்தியது. ஆனால், எத்தனை நபர்கள் இதை சரியாக பயன்படுத்துவார்கள்  என்றுதான் தெரியவில்லை. புதிய மின் நிலையம் அமைதல் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.  

Monday, August 01, 2011

புதிய பாரதம்


தளராதே மனம் தளராதே
தவறாதே வழி தவறாதே
எழுடா, வீருகொண்டு எழுடா
நடடா, எழுச்சியுடன் நடடா
இடுடா, கட்டளை இடுடா
சொல்லடா, ஒரு சொல் சொல்லடா
அமைத்திடு, நற்பாதை அமைத்திடு
துணிந்திடு, எதற்கும் துணிந்திடு
மாற்றிடு, மக்களை மாற்றிடு
எற்றிடு, அறிவுடைமையை எற்றிடு
அழித்திடு, அறியாமையை அழித்திடு
ஒழித்திடு, ஊழலை ஒழித்திடு
புறப்படு, புரட்சியுடன் புறப்படு
அமைத்திடு, நல்வழி அமைத்திடு
செய்திடு, இனிஒரு விதி செய்திடு
 

வந்து போனவுங்க