Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Monday, September 26, 2011

என்னவள்

நீ, கலைமகளின் குழமகளா
இல்லை குழமகளின் திருமகளா
கன்னட பூமியில் பிறந்தவளா
கொங்குச் சீமையில் வளர்ந்தவளா

உன்னை பார்க்கும் போதெல்லாம்
என் தமிழும் தத்தளிகுதே !
உன் பேரை எழுதும் போது
என் பேனாவும் சினுங்குதே!

இரவு முழுவதும் உன்னினைவோடு
என் தூக்கம் கலைந்ததே
நிலவை பார்க்கும் போதெல்லாம்
உன் திருமுகம் ஜோளிக்குதே!!

Saturday, September 24, 2011

யார் மிகவும் அதிர்ஷ்டசாலி?


               இந்த உலகத்திலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி யாருனா அது நம்ம இந்தியர்கள் தான்.அதிர்ஷ்டசாலிதான் மிகவும் சொம்பெரியாகவும் இருக்கிறான். எவன் ஒருவன் திறமையினால் வெல்லாமல் காலத்தையும், அதிர்ஷ்டத்தையும் காரணம் காட்டுரானோ அவன் ஒரு முட்டால்.இது எல்லா வகையிலும் இந்தியர்களை வாழவைக்கிறது.

        லாட்டரி, பம்பர் பரிசுகள்,சீட்டாட்டம், இதில் திருமணமும் அடங்கும்.மற்றவைகளாது காசு கொடுத்து காசு சம்பாதிப்பது. ஆனால் திருமணம் லாபத்தை மட்டுமே கொள்கையாக கொண்டது. எந்த ஒரு யூரோப்பா நாட்டிலும் 18 வயதை கடந்த ஒருவன் தன் பெற்றோருக்கு  சுமையாக இருக்கமாட்டார்கள். ஆனால் நம் நாட்டில் பிறந்தது முதல் இறப்பது வரை அவர்களை நம்பித்தான் உள்ளோம்.அவர்களுக்கு சுமையாக இருக்க வேண்டாம் என்று தான் சொல்கிறேனே தவிர அவர்களை விட்டு பிரிய சொல்லவில்லை.சம்பாதித்த பணத்தை பெற்றோரிடம் கொடுத்து செலவுக்கு கேட்டு வாங்குவது என்பது இங்கு முகவும் அரிது. கூலிக்கு சம்பாதித்த பணத்தை கடன் அடைபதற்கே சரியாகவுள்ளது. பணக்காரர்களுக்கு சேர்த்ததை செலவு செய்வதை தவிர வேறு வேலையே இல்லை.

        திருமண உறவில் இந்தியர்களை தவிர வேறு யாரும் அதிர்ஷ்டசாலி யாரும் இருக்கமுடியாது.ஏனென்றால், வாலிப வயதில் பல பெண்களை சைட் அடித்து, அதில் சில பெண்களை காதலித்து பிறகு பெற்றோர்பார்த்த வரனை திருமணம் செய்கிறோம்.இது போல பல அதிர்ஷ்டங்கள் நமக்கு கிடைத்துள்ளது. அரசின் இலவசங்கள் என ஏராளமான அதிர்ஷ்டங்கள் நம்மை சூழ்ந்துள்ளது.....

Monday, September 19, 2011

வாழ்க்கை


வாழ்க்கையே கனவுதான்
கனவோடு விளையாட
ஒருநொடி போதுமா
ஆட்டம்தான் வெறுக்குமா
மறுபடியும் தொடருமா
போர்களம்தான் தோற்க்குமா!!!

 

வந்து போனவுங்க