Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Thursday, June 30, 2011

புழுதிக்காட்டு வெட்கம்

ஆண்:   ஏம்மா கண்ணம்மா
               நீ கொஞ்சம் நில்லம்மா
பெண்:   ஏன்யா கண்ணய்யா
               என்ன சேதி சொல்லய்யா
ஆண்:   உன்னை ரொம்ப பிடிக்குமம்மா
               உன்னை நான் மணக்கலாமா
பெண்:  போயா பெரியய்யா
               போய் பொழப்ப கொஞ்சம் பாரய்யா
ஆண்:   ஏம்மா என்னம்மா
                என் மீது கோபமாமா
பெண்:   ஏன் மாமன் முறைமாமன்
              அவன் கொஞ்சம் மோசமானவன்
ஆண்:   பாரம்மா கண்ணம்மா
               நான் ரொம்ப பாசமானவம்மா
பெண்:   என்னய்யா சின்னய்யா
               எனக்கு உன் மீது விருப்பம்தான்யா
ஆண்:   ஏன்மா பிறகேனம்மா
              எதற்கு இந்த பிரிவம்மா
பெண்:   போயா பொன்னைய்யா
               எனக்கு ரொம்ப வெட்கமய்யா
ஆண்:   வாமா தாயம்மா
              என் தாகத்தை நீ போக்கம்மா
பெண்:   போயா பெரியய்யா
               உனக்கு ரொம்ப ஆசைதான்யா.

ஏக்கம்

சொந்தமில்லை பந்தமில்லை
பணமில்லை பாசமில்லை
உறவில்லை உடமையில்லை
நட்பில்லை அதில் நாட்டமில்லை
தொழிலில்லை தோய்வில்லை
சொத்தில்லை அதனால் சுகமில்லை
இன்பமில்லை துன்பமில்லை
தெம்பில்லை துணிவில்லை
அன்பில்லை அறவனைப்பில்லை
உயிரில்லை ஊக்கமில்லை
இருப்பினும் எக்கம் மட்டுமே மிச்சம்

Saturday, June 25, 2011

போராளியின் குரல்


என்ன பிழை செய்தோம்
உரிமை மறுக்கபட்டது
ஓர் இனமுண்டு மொழியுண்டு
இவற்றை ஒடுக்க ஓர் நாடுண்டு

உழைப்பால் படைத்தோம் உணவை
உண்ண உணவுண்டு உயிரில்லை
உரிமை கோரி உதைப்பட்டோம்
அறவழியில் அடிமைப்பட்டோம்

ஆயுதத்துடன் இறங்கினோம்
தலைவன் துணைகொண்டு
பகையெடுத்தான் பகையாளன்
தாய்வீடு துணைகொண்டு

நயவஞ்சகன் நுழைந்தானே
கருக்குழந்தையும் கருகியதே
பகைவனின் பணத்தைகண்டானோ
ஆதலால் முறைகொண்டானோ

போட்டானே இரசாயன குண்டை
போனதே தலைவனின் உயிர்
மானம் காக்க வந்தவனும்
மாயமாய் போனானேன்

மண்டியிட்டு உயிர் வாழும்
நாளொன்று வந்ததே
மக்கள் வாழ்வும்
கேள்விக்குறியானதே!!!

காதல் தேவதை



விழியோடு விளையாடும் விளையாட்டு காதலா
     உன் நினைவோடு நிழலோடு வாழ்வது காதலா
தண்ணீர் என் முன்னாடி கண்ணாடி ஆனதே
     பிரதிபளிப்பது என்முகமல்ல உன்முகம்
என் இமை எதிரே உதயமானவள் நீ
     என் இதயத்திலே நுலைந்தவள் நீ
திருமணம் கொள்வோமா இருமனம் சேர்வோமா
     வாழ்வினில் வெல்வோமா சொல் சொல்
உலகம் வென்றாலும் உடமைகள் சேர்ந்தாலும்
     வென்றவள் நீ தானே என் உயிரே
காலம் சென்றாலும் கடமைகள் முடிந்தாலும்
     காதலி நீ தானே என் கனவே
என் விளைநிலத்தில் விளைந்ததெல்லாம்
     பயிர்களல்ல உன் நினைவுகள்தான்
அறுவடை செய்யாமல் ஆசை இழக்காமல்
     காவல் காக்கும் காதலன் நான்
பட்டு புடவை உடுத்தி வந்தாய்
     என் பகல் கனவை நிகழ்த்தி வந்தாய்
விண்ணில் பறந்தாலும் நீரில் மிதந்தாலும்
     என் உயிர் உன்னிடம் தான் அன்பே
மன்னன் நான் தானே, என் மகராணியும் நீதானே
     நம் காதல் தேசத்தை ஆழ்வோமா என் அன்பே!

போராளி


யாவும் நாம் வர வீழும்
சூழும் பகைக்கு இனி ஓழும்
வீரம் பொழியவா,
     தீர்க்கம் காக்கவா
என் நாட்டு விடுதலை
     ஆனதோர் விடுகதை
படைக்கு அஞ்சவில்லை,
      பகைமையை விரும்பவில்லை
இழப்பதற்கு சொந்தமில்லை,
      எனினும் ஓயவில்லை
உறவென்று ஒன்றுமில்லை, 
      உடைமையும் இல்லை
வாய்பேச வழியில்லை
      விழித்திருந்தும் பயனில்லை
அஹிம்சைக்கு மதிப்பில்லை
       அடைப்பட்டிருக்க மனமில்லை
இனி பொருத்தும் பயனில்லை
       வாழெடுத்து புறுப்பட்டேன்
அச்சமொன்று இல்லையென்று
       அச்சமொன்று இருந்திருந்தால்
மாண்டிருப்பேன் அந்நாளே
       போரிட்டு வென்றேன்
பதக்கமாய் மார்பினில் குண்டு
        மானங்காக்க வழியில்லை
முத்தமிட்டு மடிகிறேன்
        அடைகள நாட்டு மன்னை!
 

வந்து போனவுங்க