Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Saturday, June 25, 2011

கல்வி வியாபாரம்

                    கற்க கசடற கற்பவை கற்றபின்
                    நிற்க அதற்கு தக.

          என்ற வள்ளுவரின் வாக்கை இன்று பல பணக்காரர்கள் தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்துகின்றனர்.இன்றைய காலகட்டத்தில் கல்வி அறிவு இன்றியமையாத ஒன்று. ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு கூட பத்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என்னும் சூழல் அமைந்துள்ளது. கல்வியின் தேவையை மக்கள் இக்காலத்தில் நன்கு உணர்ந்துள்ளனர். இதை தங்களுக்கு சாதகமாய் ஒரு கும்பல் பயன்படுத்துகிறது. தமிழகத்தில் காமராஜரின் ஆட்சியின் போது ஆயிரகனக்கான கல்விக் கூடங்கள் அரசால் நிறுவப்பட்டன. ஆனால் தற்போது இங்கு நிலவும் சூழல் என்ன? கல்விக்கட்டண நிர்ணயக்குழு, சமச்சீர் கல்வி சீர்திருத்த குழு போன்ற குழுக்களை உருவாக்கியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் என்ன? கல்வியில் தனியார்களை அனுமதித்தது தான். லட்சம் இருந்தால் பள்ளி கூடமும், கோடி இருந்தால் கல்லூரியும் தொடங்களாம். சேவை மனப்பான்மையில் யாரும் கல்வி நிலையங்களை உருவாக்கவில்லை. பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் எத்தனை பேர் இதை பின்பற்றுகின்றனர். டியூஷன் பீஸ் மட்டும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை பெற்று கொண்டு, நோட்டு, பாடபுத்தகம், பேருந்து கட்டணம் மற்றும் இதர சேவைகளுக்கான கட்டணம் என பெற்றோர்களின் இரத்தத்தை உரிஞ்சிவிடுகின்றனர். இதில் நன்கொடை வேறு தனிக்கதை. கல்லூரிகளில் தான் நன்கொடை என்றால், கொங்குச் சீமையில் உள்ள சில பள்ளிகளும் நன்கொடை வசூழிக்கின்றன. 

        கல்லூரியை பொருத்தவரை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பொதுவாக நன்கொடை வசூழிப்பதில்லை(ஒன்றிரண்டு தவிர). சட்டக்கல்லூரி, வேளான் கல்லூரிகளிலும் நன்கொடை வசூழிப்பதில்லை. ஆனால் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லுரிகளில் வசூழ் தாராளமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனை கல்லூரில் 50 லட்சம் முதல் 80 லட்சம் வரை நன்கொடை வசூழிப்பதாக நண்பர் ஒருவர் கூற கேட்டேன். இப்படி நன்கொடை செலுத்தி படித்த மாணவிகள் தான் பின்னாளில் தனியார் மருத்துவமனை ஆரம்பித்து தாராளமாக பில் போடுகின்றனர். பொறியியல் கல்லூரியை பொருத்தவரை துறை வாரியாக நன்கொடை வசூழிக்கின்றனர். ஒவ்வொரு துறைக்கும் இவ்வளவு என்று வகுத்துள்ளனர். பிரபல பொறியியல் கல்லூரியிளில் அதிகபட்சமாக 15 லட்சம் வரை நன்கொடை வசூழிக்கின்றனர். இப்படி வாங்கும் தொகைக்கு பில் ஏதும் கிடையாது. ஆதலால் இத்தொகைக்கு வரி கிடையாது, கருப்பு பணமாக சேர்கிறது. வருமான வரி துறையும் பல்கலைகழக ஆய்வுக் குழுவும் என்னதான் செய்கின்றதோ? அவர்களுக்கும் பங்கு போகும் போல! கல்வி சீர்திருத்த சட்ட்த்தின் படி கல்லூதிகளில் நன்கொடை வசூழிக்க்கூடாது, அப்படி மீறினால், கல்லூரியின் முதல்வர் மற்றும் நிர்வாகத்தினருக்கு 50,000 அபராதம் மற்றும் மூன்றாண்டு சிறை உண்டு. ஆனால் இதை யாரும் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. நாடே அறிந்த ஓர் குற்றத்தை அரசும், அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.

                 சில மாதங்களுக்கு முன்னால் கேத்தன் தேசாய் என்ற மாபெரும் கல்வி வியாபாரி கையும் களவுமாக சிக்கிகொண்டார். இவர் இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவர். இவரிடம் இருந்து 1500 கிலோ தங்கம் மற்றும் கோடி கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட்து. இவர்களை போன்றோர் தங்கள் கடமையை சரியாய் செய்யாததால் தான் கல்லூரிகளில் நன்கொடை வசூழிப்பது தொடர்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்னால் சில பொறியியல் கல்லூரிகளில் நன்கொடை வசூழிப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அண்ணா பல்கலைகழக குழுவினர் விசாரனைகாக சென்ற போது, அந்த கல்லூரியில் ஊழியர்கள் யாருமே இல்லை. பின்பு இது தொடர்பாக எந்த ஒரு விசாரனையும் நடைபெற்றதாக தெரியவில்லை. சில கல்லூரிகள் தனக்கென்று தனி விதிமுறையை அமழ்படுத்தி அதை மாணவர்கள் மீது திணிக்கிறது. இந்திய அரசின் சட்ட்த்தையே மதிக்காத இவர்கள் மாணவர்களுக்கு விதிமுறையிடுவது எவ்விதத்தில் நியாயம். சில கல்லூரிகள் சிறை போல் தான் செயல்பட்டுகொண்டிருக்கிறது. கல்லூயின் நிர்வாகத்தை பொருத்தவரை நான் இதுவரை இரண்டு வகைகளை கண்டுள்ளேன். கல்லூரியின் முதல்வர் நிறுவனரின் உறவிக்காரராக இருக்க கூடாது என்று விதியுள்ளது. சில கல்லூரி முதல்வரை நியமித்து அவரயே நிர்வகிக்க செய்துள்ளது. சில கல்லூரிகள் முதல்வரை பொம்மையாக நியமித்துவிட்டு அவர்களே அனைத்து முடிவுகளையும் எடுக்கின்றனர். பணம் வசூழிப்பதில் அரசு கல்லூரிகள் மட்டும் விதிவிளக்கல்ல. தனியார்கள் மாணவர்களிடம் வசூழிப்பதை போன்று அரசு கல்லூரிகள் ஊழியர்களிடம் வசூழிக்கின்றது. தற்போது இணைக்கப்பட்ட பிரிக்கப்பட்ட ஓர் அண்ணா பல்கலைகழகத்தில் எனது தற்கால பணியில் உள்ளவர்கள் நிரந்திர பணியில் அமர்த்தபடுவதற்கு 15 முதல் 20 லட்சங்கள் தனக்கு மேல் உள்ளவிரிடம் காணிக்கை செலுத்தவேண்டுமாம். துணைவேந்தர் பதவிக்கும் கூட அதே கதிதான். 

            தமிழகத்தை பொருத்தவரை இதுவரை 488 பொறியியல் கல்லூரிகள் உள்ளது. இது தவிர இந்த ஆண்டு 18 கல்லூரிகளுக்கு புதிதாய் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு 6000 முதல் 8000 இடங்கள் வரை காலியாகதான் கிடந்தது. இந்த நிலையிலும் ஏ.ஐ.சி.டி,இ புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியிள்ளதில் ஏதோ சந்தேகம் உள்ளது. (வேறு என்ன அதுவாகத்தான் இருக்க முடியும்). இரண்டாண்டுக்கு முன்பு யூ.ஜி.சி இந்தியாவிலுள்ள சில நிகர்நிலை பல்கலைகழகங்களின் பலகலைகழக அந்தஸ்தை ரத்து செய்தது. காரணம் தரம் இல்லாதது தான். இதில் அதிக இடத்தை பிடித்தது தமிழகம் தான். பிறகு பல்கலைகழகத்தினர் நீதிமன்ற படிகள் ஏறி கால அவகாசம் பெற்று அந்தஸ்தை தக்க வைத்துகொண்டனர். நிகர்நிலை பல்கலைகழகங்களில் அதிக இட ஒதிக்கீடு உள்ளதால் இவர்களின் கல்லா நன்றாகவே நிறைகிறது. இது போன்ற செயல்களை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.

3 comments:

  1. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  2. அருமையான ஓர் அலசல் நண்பரே...

    ReplyDelete

 

வந்து போனவுங்க