Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Wednesday, February 08, 2012

சென்னை: நரகத்தின் சங்கமம்


பள்ளிப் படிப்பை தொடங்கிய இடத்திலே கல்லூரி படிப்பை நிறைவு செய்யபோகிறோம் என்று எண்ணி ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஈரோட்டிலலிருந்து சென்னை நோக்கி பயணித்தேன்.எழில்மிகு சென்னை,சிங்கார சென்னை என்னையும் வரவேற்றது.இந்த ஊரில் நாகரீக வளர்ச்சி சற்று வியக்கும்படியாகவே வளர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரம் தமிழ் நாகரீகத்தின் கொலை நகரமாக மாறிவிட்டது.


தொழில் புரட்சியாலும், அன்னிய முதலீட்டாலும் இன்று பண்டைய தமிழ் கலாச்சாரம் இருந்த இடம் தெரியாமல் போனதற்கு உதாரணம் தான் சென்னை. மற்ற ஊர்களிலிருந்து பிழைக்க வழிதேடி சென்னை வருபவர்களும்,மேல்படிப்பிற்காக வருபவர்களும் இந்த ஊருக்கு ஏற்றார் போல் மாறிவிடுகின்றனர்.எங்கு பார்த்தாலும் போக்குவரத்துக்கு நெரிசல், 108இன் சத்தமும், 300 வினாடிகளை தாண்டும் போக்குவரத்துக்கு சிக்னல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் இவை அனைத்தும் மனிதனை ஓர் சுழல் சக்கரமாக மாற்றிவிட்டது.

உணவு, உடை, பேச்சு என்று எல்லாம் இங்கு பாழடிக்கப்பட்டு விட்டது. பல வெளிநாட்டு புகழ்பெற்ற உணவகங்கள் தங்களின் கிளைகளை சென்னையில் தொடங்கி லாபகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. கூட்டம் கூட்டமாக, ஜோடி ஜோடியாக மக்களும் தங்களின் டெபிட் கார்டுகளை தேய்தவன்னமுள்ளனர். இப்படி எல்லாவற்றிலும் சென்னை உயர்ந்தும் பல இடங்களில் பிச்சை எடுப்பவர்கள், மனநலம் பாதித்து சாலைகளில் திரிப்பவர்கள், வீடு இன்றி சாலையோரங்களில் மற்றும் லோக்கல் ரயில் நிலையங்களில் வசிப்பவர்கள் என அவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

பெண்கள் பாவாடை தாவணி, சுடிதார் அணிந்த காலம் மாறி ஜீன்ஸ், டிசர்ட் அதுவும் மாறி பல இடங்களில் உள்ளாடைகளை அணிந்து வெளியில் திரியும் அவல நிலைமை வந்துவிட்டது. ஆண் பெண் சமம் என்ற கோட்பாடை சென்னையில் தான் பெண்கள் சரியாக புரிந்து ஆண்களுக்கு இணையாக புகை, மது என்று அனைத்திலும் சமமாக உள்ளனர். ராஜா ராம் மோகன் ராயும், மவுண்ட் பேட்டன் பிரபுவும் சதியை(sati) ஒழித்து பெண்களுக்கு மறுவாழ்வு கொடுத்தனர். ஆனால், இங்கு பல பெண்கள் திருமணத்திற்கு முன்னதாகவே சிலரிடம் வாழ்ந்து விடுகின்றனர். இதற்கு இவர்கள் மட்டும் காரணம் அல்ல ஆண்களும் தான். இருந்தாலும் இங்கும் சில ராணி லக்ஷ்மி பாய், கண்ணகி போன்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

“உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் “ என்றிருந்த காதல் “வாடி வாடி க்யூட் பொண்டாட்டி” என்று மாறுவதற்கு காரணம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், அதனால் ஏற்பட்ட நாகரீக மாற்றமும் தான். இரண்டு வருடங்களுக்கு முன்னால் நாளிதழில் ஓர் செய்தியை படித்தேன், துப்புரவு தொழிலாளர்கள் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் செப்டி டேங்கை சுத்தம் செய்து கழிவுகளை வேறு இடத்தில் அப்புற படுத்தினர். அப்போது, அதில் அதிக அளவில் ஆணுறைகள் இருந்ததை கண்டனர். காதல் என்ற போர்வையில் காமம் அரங்கேறி கொண்டிருப்பதற்கு  இதுவே சாட்சி.

தமிழக அரசு கடைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் தமிழில் பெயர் பலகை வைத்திருக்கவேண்டும் என்று ஓர் ஆணை பிறப்பித்தது. பலகை வைத்தால் மட்டும் தமிழ் வளர்ந்திடுமா? இங்குள்ள பல பள்ளிகள் இரண்டாம், மூன்றாம் மொழியாக வைத்துவிட்டு மற்ற மொழிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றது. தமிழில் அளபெடை பிரிக்க தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, ஓர் அளவிற்காது எழுத படிக்க தெரிய வேண்டும். கிராமம், தமிழர் பண்பாடு, போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் திரைப்படங்கள் குறைந்து, நகரம் (நரகம்), வன்முறை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கும் திரைப்படங்களும் தான் அதிகம். இத்தகைய நாகரீக மாற்றத்திற்கு இது போன்ற திரைப்படங்களும் ஓர் காரணம்.

இன்னும் எவ்வளவோ அசிங்கங்கள் இங்கு நடைபெற்று கொண்டிருக்கிறது. அவை அனைத்தையும் எழுத நினைத்தால் இன்னும் பத்து பதிவுகள் தொடர்ந்து எழுத வேண்டும். சென்னை கார்ப்பரேஷன் என்று இருந்த எனது பிறப்பு சான்றிதழை பார்க்கும்போது, எப்போது சென்னை செல்வோம் ஏங்கி கொண்டிருந்தேன். தற்போது அதற்காகவே வருந்துகிறேன். விரைவில் என்னை வாழவைத்த எனது பெரியார் மாவட்டத்திற்கு வேப்ப மர காற்றிற்காகவும், அன்னையின் அன்பிற்காகவும், மனநிம்மதிக்காகவும் பயணிக்க உள்ளேன்...நீங்களும் விரைவில் உங்கள் சொந்த ஊர்களுக்கே சென்று மண்வாசனையை  உணருங்கள்....

5 comments:

 1. arumaiyana pathippu !
  naragam sorgam, ithu ellam anga vazhra manushanga kaila thane irukku!

  ReplyDelete
 2. @Dee........மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று மனிதன் தானே சொன்னான்..இப்பொது அந்த மனிதன் எங்கே??அவனது மனம் எங்கே??

  ReplyDelete
 3. உனது ஏக்கம் நான் அறிவேன் நண்பா, நமது பெரியார் மாவட்டம் என்றும் விழி வைத்து காத்துகொண்டு இருக்கிறது உன்னை வரவேற்க கூடவே நானும் காத்து இருக்கேன்....

  ReplyDelete
 4. nice passage really well.....

  ReplyDelete
 5. அருமை சகோதரரே...............
  தங்களின் வரவை காண மஞ்சள் மாநகரம் காத்துக்கொண்டிருகிறது....

  ReplyDelete

 

வந்து போனவுங்க