Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Monday, April 16, 2012

பறிக்கப்படும் மற்றொரு உரிமை


மேற்கு வங்காள முதல்வரின் தேவையில்லா கைது நடவடிக்கையினால் பல இணையதள நண்பர்கள் கடுப்பாகி உள்ளனர். ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதியை மாற்றி முகுல் ராயை நியமித்தார் மேற்கு வங்காள முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி. இந்த செயலை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பல கட்டுரைகளும், கார்ட்டூன்களும் பெரிய அளவில் பரவின.
ஜாதிவ்பூர் பல்கலைகழக வேதியல் பேராசிரியராக உள்ள திரு. அம்பிகேஷ் மகபத்ரா, இது போன்று ஒரு கேலிக்கை சித்திரத்தை மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்துகொண்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டி அவர் கைது செய்யபட்டார். இந்த கைது நடவடிக்கைக்கு மேற்கு வங்காளம் மட்டுமல்லாது  மற்ற இடங்களிலும் கடும் எதிர்ப்பு பரவியது.
புதிது புதிதாக திட்டங்களை அறிவித்துவிட்டு அது சாத்தியமிலாது போனால் அதிகாரிகளை சாடுவது, தனக்கு ஒத்துழைப்பு தராத சில அதிகாரிகளை மாற்றுவதுமே தற்போதைய முக்கிய வேலையாக கொண்டு இருப்பவர் அவர்.
ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வுக்கு காரணமான தினேஷ் திரிவேதியை நீக்கி, முகுல் ராயை நியமித்தார். பின்னர், கருணாநிதி போல மத்திய அரசை மிரட்டி தன் வேலையை முடித்து கொண்டும் காலத்தை ஒட்டிகொண்டிருகிறார். இதை சித்தரிக்கும் பல கார்ட்டூன்களும், கட்டுரைகளும் இன்னும் இணையதளங்களில் இருகின்றன. இதை பகிர்வது அவரவர் உரிமை சார்ந்தது, அதற்காக அனைவரையும் கைது செய்தால் பல படித்த நபர்கள் சிறையில் தான் இருக்கவேண்டும்.
மம்தாவுக்கும் நமது முதல்வரை போன்று “தான்” என்ற எண்ணம் வந்துவிட்டது. இவரை போலவே அவரும் சில தேவையில்லா மாற்றங்களை செய்து வருகிறார். பள்ளி மாணவர்கள் பாட புத்தகத்தில் கம்யூனிஸம் தொடர்பான வரலாற்று பாடத்தை நீக்க உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, பேரறிஞர் கார்ல் மார்க்ஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் நீக்கியுள்ளார். இது கார்ல் மார்க்ஸ் அவர்களை அவமதிபதர்க்கு சமமாகும்.
சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் கபில் சிபில் இணையதளங்களில் இந்தியாவை சித்தரிக்கும் செய்திகளை நீக்கிவிடுமாறு கூகிள், யாஹூ, பேஸ்புக் போன்ற நிறுவன இந்திய அதிகாரிகளிடம் ஒரு பட்டியலை அளித்தார். கூகிள் அந்த பட்டியலை வெளியிட்டது. அதில், நீக்க வேண்டும் என்று குறிப்பிட்ட எந்த ஒரு செய்தியும் இந்தியாவை சார்ந்தது அல்ல, எல்லாம் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மற்றும் மன்மோகன் சிங்க் போன்றோர்களை சித்தரித்த செய்திகள் என்பது குறிப்பிடபட்டது.
இப்படி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு நமது நாட்டின் அரசியல்வாதிகள் பெரும் ஆட்டம்போட்டு கொண்டிருக்கின்றனர். நம்மிடம் இருக்கும் அதிகபட்ச பேசும் உரிமையை கூட இவர்கள் பறிக்கின்றனர். ஒரு வேலை, ஜனவரியில் தில்லியை நோக்கி இரண்டு பட்டால்லியன்கள்  பாராளமன்ரத்தை நெருங்கி இருந்தால் ஒரு வேலை, வளைகுடா பகுதிகளில் தற்போது, நடந்துகொண்டிருக்கும் ஒரு புரட்சி உறுவாகி இருக்கும். அப்போதாவது, நமக்கு ஒரு விடிவு காலம் பிறந்திருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். ஆனால், அதிலும் அரசியல் விளையாடிவிட்டது....

3 comments:

  1. பதவியின் பேரில் சில பேருக்கு உண்டாகும் அதீத நம்பிக்கையின் பலன் தான் இது போன்ற நடவடிக்கைகள். மமதாவிற்கு பிரதமராகும் அறிகுறி ஏதுமில்லை என்கிறது இந்த நடவடிக்கை.

    ReplyDelete
  2. @கோவை எம் தங்கவேல் தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில், மம்தா மற்றும் ஜெயலலிதாவுக்கும் இந்த தகுதி இல்லை. காரணம் பொறுமை இல்லை. நரேந்திர மோடி வந்தாலும் வரலாம்..

    ReplyDelete
  3. Mamata government's decision will cripple the freedom of social media and the satisfaction is that it has been condemned by almost all. Kapil Sibal has been having double standards- not only in this matter but even in telecom issues.

    ReplyDelete

 

வந்து போனவுங்க