Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Tuesday, May 08, 2012

அமெரிக்காவின் ஆதிக்கம்


ஒருத்தன் கிட்ட ஒண்ணுமே இல்லைனாலும் எல்லாம் இருக்குற மாதிரி சீன் போடுற நாடுகள் வரிசைல அமெரிக்காவுக்குத்தான் முதலிடம். எப்ப எவன் வீட்ல சண்டை வரும் பஞ்சாயத்துக்கு நாம உள்ள போலாம்னு அடுத்தவன் டவுசர பாக்குறதே அமெரிக்காவுக்கு பொழப்பா போச்சு. உலகத்துல இருக்குற எல்லா நாடுகள் உள்விவகாரங்கள்ளையும் தலகிட்டு அவுங்களுக்கே புத்திமதி சொல்ல வேண்டியது. மத்த நாடுகள் மாதிரி ரஷ்யா மட்டும் சும்மா இருக்காம பதிலுக்கு எல்லாம் எங்களுக்கு தெரியும் நீங்க மூடுங்கனு சொல்லி பல்பு குடுக்குறாங்க.
இப்ப கூட ஹிலாரி கிளின்டன் இந்தியாவுக்கு வந்தமா போனமானு  இல்லாம நமக்கே புத்திமதி சொல்லிட்டு போறாங்க. இந்தியா இரான்ல எண்ணெய் இறக்குமதி செய்றத குறைக்க வேண்டுமாம். இரான் அணு ஆயுதம் தயாரிக்குறாங்க, அது மத்த நாடுகளுக்கு அச்சத்தை எற்படுதிள்ளதுனு ஒரு காரணத்த சொல்றாங்க. ஏன், அமெரிக்கா கிட்ட அணு ஆயுதம் இல்லையா என்ன?நீங்க மட்டும் அணு ஆயுதத்துல பெரிய நாடா இருக்கணும் மத்தவன் எல்லாம் கை கட்டி வாய் பொதி இருக்கணுமா? இந்தியாவும் தான் அக்னி ஏவுகனையை சோதனை செஞ்சிது. அப்ப எங்கடா போனீங்க? உங்களுக்கு என்ன இராக்க அழிச்சு எல்லா எண்ணையையும் கொள்ளை அடிச்சிடீங்க. இங்க நாங்க பெட்ரோலுக்கு சிங்கி அடிக்கணுமா? அதோட நிருத்தவேண்டியதுதான அதுஎன்ன இந்தியால இருந்துட்டு சீனா, ஜப்பான், இஸ்ரேலுக்கு புத்திமதி சொல்றது.
இஸ்ரேல் 30 ஆண்டுகளாக தங்களை காபாத்திக்குறாங்க, பின்னாளில் இரான் தனது அணு ஆயுதத்தை பயன் படுத்தி தாக்கினால் இஸ்ரேலின் நிலைமை என்ன ஆகும் என்று கேட்கிறது. இது இஸ்ரேலுக்கு எச்சரிக்கையா இல்லை இரானுக்கு ஐடியாவா?. பாலஸ்தீனதுக்கு ஆயுதாத்தை விற்று இஸ்ரேல் மீது போர் தொடுத்து உங்க கஜானாவ நிரப்பியாச்சு இப்ப ஊருக்கு நல்லவன் வேஷம் போடுறது.
ரஷ்யாவ எப்டியாது அளிச்சிர வேண்டும்னு அமெரிக்காவுக்கு நீண்ட கால எண்ணம். நேட்டோ படைகள்ள முன்னாள் சோவித் நாடுகளையும் இப்போது இணைத்து ஏவுகளை ஆராய்ச்சியில் அமெரிக்கா இறங்கி உள்ளது. இதுக்கு ரஷ்யா தகுந்த பதிலடி கொடுத்து மிரட்டி உள்ளது. நேட்டோ படையின் ஏவுகணை தளத்தையே அளித்து விடுவோம் என்று எச்சரித்துள்ளது.
எங்க தில்லிருந்தா ரஷ்யாகிட்ட மோதி நீ பெரிய பருப்புன்னு நிருபி பார்க்கலாம்?

5 comments:

  1. ரஷ்யாகிட்ட மட்டும்தானா... அப்படியே சீனாகிட்டயும் மோதச் சொல்லுங்க...

    உங்கள் பிளாக் இணையதளத்தின் செய்திகள் ஆயிரக்கணக்கான வாசகர்களை எளிதில் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் செய்திகளின் லிங்கை உடனுக்குடன் இணைத்திடுங்கள்

    ReplyDelete
  2. ரஷ்யாகிட்ட மட்டும்தானா... அப்படியே சீனாகிட்டயும் மோதச் சொல்லுங்க...

    உங்கள் பிளாக் இணையதளத்தின் செய்திகள் ஆயிரக்கணக்கான வாசகர்களை எளிதில் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் செய்திகளின் லிங்கை உடனுக்குடன் இணைத்திடுங்கள்

    ReplyDelete
  3. அமெரிக்காவின் நோக்கம் தென் ஆசிய பிராந்தியத்தில் வலிமையான ஆதிக்கம்.. அதற்கு இந்தியாவை பகடை காயாக பயன்படுத்துகிறது... அதற்கான அடையாளம்தான் ஹிலாரி அம்மையாரின் வருகை மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பும்... இந்த போக்கு
    இந்தியாவின் நடுநிலைமை வெளிநாட்டு கொள்கைக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கும்...

    ReplyDelete
  4. @boopalk சரியாக தான் சொல்கிறீர்கள் பூபால்.. அமெரிக்க எப்போதும் அடுத்தவனை எட்டி பார்பதே போலப்பாக வைத்துள்ளது...

    ReplyDelete

 

வந்து போனவுங்க