Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Thursday, January 05, 2012

காட்பாதர் (விமர்சனம் அல்ல ஓர் தாக்கம் )


காட்பாதர்இந்த பெயருக்கு உலகத்திலுள்ள கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அப்படி என்னதான் இதுல இருக்கு. இந்த படத்த பார்க்கும்போது பலருக்கு பல நினைவுகளும் சிலருக்கு தம்முடைய எதிர்காலம் பற்றிய யோசனையும் வரும். ஆனால், எனக்கு இந்த படத்தின் மூன்று பாகங்களையும் பார்த்த பிறகு நான் என்னை கண்ணாடியில் பார்க்கும்போது வெட்கபடுகிறேன். இதன் தாக்கம் சில நாட்களுக்கு இருந்தது, பிறகு அதை மறந்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.
பழிவாங்குதல், ஆங்கிலத்தில் இதை revenge or vengeance என்று சொல்வார்கள். இந்த வென்ஜென்ஸ் என்ற வார்த்தை ஏறக்குறைய எல்லோர் வாழ்க்கையிலும் வந்து சென்றிருக்கும். காரணம் நாம் சாதாரன மனிதர்கள். இப்போது நாம்(ன்) பக்குவமடைந்துவிட்டோம்(ன்) என்றாலும் கூட சிறுவயதில் ஒருவர்மீது பொறாமையும், அவரை எப்படியாது வீழ்த்திவிட வேண்டும் என்ற எண்ணமும் மனதில் கண்டிப்பாக வந்ததுண்டு. பள்ளி பருவத்தில் நம்மை விட ஒருவன் நன்றாக படிக்கிறான் என்றால் அவனை எப்படியாது  வீழ்த்திவிட வேண்டும் என்ற எண்ணம். நான் கேட்ட போது எனக்கு அந்த நோட்டு புத்தகத்தை தராமல், மற்றொருவனுக்கு எப்படி தரலாம். இந்த எண்ணமும் ஒரு வகையில் வென்ஜென்ஸ்  தான். எனக்கு பிடித்த என் வகுப்பு தோழியிடம் நீ எப்படி பேசலாம் என்ற அவனிடம் சண்டையிடுவது , தன்னை ஒருவன் திட்டிவிட்டான் என்று அவனை நாமும் திட்டுவது  என்று இது போன்று பல தருணங்களில் நாம் பழிவாங்குகிறோம். இவைகளாவது நாம் அறியாத வயதில் செய்தவை. ஆனால், இன்றும் கூட நாம் ஒருவரை ஒருவர் பழிவாங்கிகொண்டுதான் இருக்கிறோம். காரணம் சுயநலம், தான் எப்படியாவது வாழ்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற எண்ணம்.
இந்த படத்தில் அல்பசினோ(Al pacino) தன் சகோதரரின் மகனிடம் நீ டானாக (Don) உயரவேண்டும் என்றால் நீ விரும்பும் அனைத்தையும் இழக்க வேண்டும் என்று கூறுவார். இது நூறு சதவீதம் உண்மை என்று எனக்கு தோன்றுகிறது, வாழ்க்கையில் நாம் பலவற்றை இலந்துகொண்டுயிருகிறோம். இதற்கு சில காரணங்களும் உண்டு, ஒன்று ஏழ்மை அல்லது இயலாமை. இது நம்மை மட்டும் சார்ந்தது அல்ல நம் குடும்பத்தாரையும் , சுற்றாரையும் சார்ந்துள்ளது. மற்றொன்று ஒன்றை அடைய வேண்டுமெனில் மற்றொன்றை இழக்க வேண்டும் என்ற எண்ணம். ஆனால், இறுதியில் நாம் எதை அடைகிறோம் “ஏமாற்றம்”.
பவர் (power), அதிகாரம்,தான்தான், தனக்கு கீழ்தான்  என்னும் கர்வங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை . ஒருவரை மேலே உயர்த்துவதும் அவரையே அதல பாதாளத்தில் தள்ளுவதும் அவரவர் செயல்களே. ஆனால் இதற்காக நாம் என்ன செய்கிறோம் ???(ஒன்றும் செய்யவில்லை , செய்யபோவதும் இல்லை). அனைத்து காட்பாதர்களிடம் உள்ள ஒரே ஒற்றுமை காதல். இதை மட்டும் தான் சரியாக செய்கிறோம். திருமணம் என்றால் என்ன என்று தெரியாத வயதிலே சில காதல்கள் வந்து சென்றுவிடுகின்றன. எப்போவாவது யாரையாவது காதலிப்பது கடைசியில் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்வது(நினைக்கும் போதே வாந்தி வருகிறது). துரோகம் (betrayal) இது நமக்கு அல்வா சாப்பிடுவது போல. சிறு வயது முதல் இதுவரை எவ்வளவோ செய்துவிட்டோம் என்னென்ன துரோகம் என்பதை நீங்களே யோசித்து கொள்ளுங்கள் (நான் உங்களுக்கு ஊறுகாய் அல்ல).இது போன்று சில தவறுகள் செய்ததை எண்ணி வருந்திவிட்டேன். இனி நீங்கள்......
 

5 comments:

  1. நான் கேள்வி பட்ட வரைக்கும் காட்பாதரைப் பார்த்தவர்கள் அனைவரிடமும் ஒரு தாக்கம் இருக்கத்தான் செய்கிறது..உங்களையும் விட்டு வைக்கவில்லை..பாராட்டுகள்..

    சரணடைகிறேன்

    ReplyDelete
  2. Excellent post. very insightful. I am one of those addicted to this movie.

    ReplyDelete
  3. காட்பாதரையும் பார்க்கவில்லை. படத்தையும் பார்க்கவில்லை.எனக்கு எப்போதும் எந்த தாக்கமும் இருந்தில்லை.

    ReplyDelete
  4. மிகவும் சிறந்த பதிவு உண்மையில் பாராட்டுகள் தொடர்க ...

    ReplyDelete

 

வந்து போனவுங்க