Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Tuesday, February 14, 2012

காதல்



    “காதல்” பிரபஞ்சமே இந்த ஓர் வார்த்தைகாகவும் அதன் அன்பிற்காகவும் ஏங்கித் தவிக்கின்றது. ஐந்தறிவு ஜீவனானாலும் சரி, ஆறறிவு ஜீவனானாலும் சரி காதல் என்ற ஒன்றை உணரவில்லை எனில் உலகமே இன்று சுடுகாடுதான். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் முழங்கியதால் மட்டும் இன்று ஜாதி சண்டை, மத சண்டை நீங்கி விடவில்லை. காதல் என்ற உணர்வை மனிதன் உணர்ந்ததால் தான் இன்று சம மனித நாகரீகத்தை உணர்ந்து கொண்டான். காதலை பற்றி சங்ககால இலக்கியங்களில் பல பாடல்கள் எழுதப்பட்டு இருந்தாலும், நம் நாட்டில் உள்ளவர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால என்று இருந்ததால் தான் இன்று அனைத்திலும் அயல்நாட்டவரை காட்டிலும் சற்று பின்னால் உள்ளோம். இனி, காதலின் எனது கோணம்.
ஒரு தாய் தான் பெற்றெடுத்த பிள்ளையிடம் காட்டுவது தாய் பாசம். வேறு குழந்தையை கொஞ்சுவது அன்பு. அப்படியானால் தாய் பாசமும், அன்பும் வேறு வேறோ. இல்லை, “யாழும் குழலும் இனிது என்போர் மழலை சொல் கேளாதோர்” என்று ஓர் பழமொழி உண்டு. எந்த ஒரு மனிதருக்கும் குழந்தையின் சிரிப்பும் அதன் விளையாட்டு போக்கும் மிகவும் பிடிக்கும். அது எந்த குழந்தையாக இருந்தாலும் சரி. தன பிள்ளை என்று வரும்போது அவளுக்கு தோன்றுவது தன் வம்சம் நிலைக்க பிறந்த குழந்தை, தன் ரத்தம் என்ற ஓர் அதிகபடியான உணர்வு தோன்றுகிறது.
அந்த உணர்வுதான் குழந்தை வளர்ந்த பிறகும் உலகில் மற்றவருடன் இருந்து அவனை(ளை) வேறுபடுத்தி காட்ட உதவுகிறது. இது மானுட பிறவிக்கு மட்டும் உள்ளதள்ள அனைத்து ஜீவராசியிடமும் உள்ளது.
இந்த அன்பு என்ற வார்த்தை பல தருனம் கொண்டவையாக மாறும் போது காதல்,தாய்பாசம், நட்பு, சகோதரி, துணைவி, பிள்ளை என்று காலத்திற்கு ஏற்றார் போல் மாறுபடுகின்றது. இதில் சகோதர(ரி) பாசத்தை இழந்தவர்கள் தான் அதிகம். காரணம் “நாம் ஒருவர், நமக்கு ஒருவர்” தான்.
அவனை பார்த்தவுடன் எனக்குள் ஏதோ ஒரு தாக்கம். அவனிடம் பேசும் போதும், பழகும் போதும் ஓர் இணைபிரியாத மாற்றம். காரணம் என்னவோ என்றால் இதுவும் காதல் தான். நட்பு என்ற காதல். எனக்கு ஒரு உடன்பிறந்தவன் இல்லை என்ற கவலையை நீக்க வந்தவன் நீ என்ற எண்ணம நமக்குள் தாமாக குடிகொள்கின்றது. சோகம் பகிர்ந்து, மகிழ்ச்சி கூட்ட எனக்கும் ஒரு நண்பன் இருக்கிறான் என்று நாமே நமக்கு ஏற்றார் போல் ஒருவரிடம் அன்பு காட்டத்தான் செய்கிறோம்.(மன்னிக்கவும் காதலிக்கிறோம்).
இப்படி ஒவ்வொரு பருவத்திலும் யாரையாது காதலிக்கும் நாம் பருவ வயதில் ஒரு மங்கையை காதலிக்கிறோம். இக்காலத்தில் ஒரு சிலர் மட்டுமே “மணந்தால் மகாதேவி இல்லையெனில் மரணதேவி” என்று உள்ளனர். பெரும்பாலும் எதிர் பாலின கவர்ச்சியை கண்டு அதில் மயங்கி அவரையும் காதலிக்கிறோம். பின்னாளில் மனைவி, குழந்தை, பேரக்குழந்தை என்று நம் காதல் கதை நீண்டு கொண்டே போகிறது.

3 comments:

  1. காதல் உங்களது பார்வையில்.. சரியாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  2. பொழுதுபோக்கிற்காக காதலிப்பவர்கள் படிக்கவேண்டிய உரை இது.........
    காதலை அருமையாக வெளிபடுத்தியிருக்கிரீர்கள்.

    ReplyDelete
  3. பொழுதுபோக்கிற்காக காதலிப்பவர்கள் படிக்கவேண்டிய உரை இது.........
    காதலை அருமையாக வெளிபடுத்தியிருக்கிரீர்கள்.

    ReplyDelete

 

வந்து போனவுங்க