Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Wednesday, January 02, 2013

நாமும் நம் தேச பற்றும்


படித்த இளைஞனே!

வா!

படித்து விட்டாயா?

வந்தவுடன் என்ன அவசரம்?

ஒபாமா  உன் கனவில் வருகிறாரா?

பில் கேட்ஸ் உன் முன் மாதிரியா?

சரி நீ!

இந்திய இளைஞனே தான்!

இந்தியாவை விட்டுப்

போய் விட வேண்டும் என்ற எண்ணம்

இந்திய இளைஞனைத் தவிர

எந்த இளைஞனுக்கும் வராது!

உன் அதிகபட்ச இலட்சியம்

ஆறாயிரம் மைல்கள் தாண்டிய

அமெரிக்கா!

உன் குறைந்தபட்சஇலட்சியம்

இரண்டாயிரம் மைல்கள் தாண்டிய

அரேபியா!

வயிற்றை

இந்தியாவில் நிரப்பிக் கொண்டு

மூளையை

அயல் நாட்டில் விற்கப் போகிறாய்!

உன்னை

இந்தியப் புழு என்றால்

அழுவாய்!

அமெரிக்கப் புழு என்றால்

ஆனந்தமாவாய்!


அமெரிக்க-பிரிட்டிஷ்

தூதரக சாலைகளை

நடந்து நடந்து தேய்ப்பாய்!

ஒரு வழியாய் பயணமாவாய்…

அதுவும்

இந்தியன் ஏர்லைன்ஸ் என்றால்

“ச்சீ” என்பாய்!

என்னே உன் தேசியப் பற்று!

நீ இந்தியத் தாயின்

கண்ணில் விழுந்த

தூசி அல்ல…ஊசி!

உனக்கு சின்ன வயதில்

சுதந்திர தினத்தன்று

தேசியக் கொடியை

குண்டூசியால் சட்டைப் பையில்

குத்தியிருக்கக் கூடாது!

ஒரு ஆணி வைத்து

இதயத்தில் அடித்திருக்க வேண்டும்!

—-யாரோ.


8 comments:

  1. நல்ல வசதிகளுடன் நல்ல சம்பளமும் கொடுத்தால் ஏன் அவன் அந்நிய தேசம் செல்லப் போகிறான்..

    வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்குத்தான் கிராக்கி அதிகம் எங்கிற நிலைப்பாடும் எம் சமூகத்தில் உள்ளதே

    ReplyDelete
  2. தேசப்பற்றுள்ள கவிதைக்கு வாழ்த்துகள். இவ்வளவு எழுதிய சேகுவாரா படத்தை ப்ரொபைலில் பொருத்தலாமா?

    ReplyDelete
  3. வலைச்சர அறிமுகம் மூலம் வந்தேன் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நல்ல இருக்கு ஆனா இங்கு இருப்பவர்கள் எல்லாம் தேச பற்று மி கவர்கள் தானா ?

    ReplyDelete
  5. தேசப்பற்றுள்ள கவிதை... வாழ்த்துகள் நண்பா... தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  6. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. அழகான கவிதை.... தேசப்பற்றுள்ள கவிதை...

    ReplyDelete

 

வந்து போனவுங்க