Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Tuesday, January 24, 2012

நீ, நான்.




ஆண் :     ஒரு மின்னல் போல் நீ 
 வந்து ஆடுறாய், 
 அந்த ஜன்னல் வழியேதான் 
 என்னை தேடுறாய்.

            சொர்கத்தின் வாசல்கள் 
 நீதானடி,  
 உன் பிம்பத்தில் குளிர்காய 
 வந்தேனடி.  

பெண் :     என் வாழ்க்கை
            துணையாக நீயே இரு, 
            உன் வாழ்வின் 
            மிச்சத்தை எனக்கே கொடு. 

ஆண் :     நீ வேறு, நான் வேறு
            இல்லையடி.  
            இனி, நான் தானே 
            பந்தத்தின் சொந்தமடி. 

பெண் :     காற்றோடு காற்றாக
            என்னை இழு, 
            கடல்தாண்டி வரும் 
            அலையை தடு. 

ஆண் :     பூவில் ஒளிந்திருக்கும் 
 வண்டு நீதான்,
 இந்த பூமி பந்தின்
 மகளும் நீதான்.

 பார்த்தாலே படபடக்கும்
 பெண்ணும் நீதான்,
 தொட்டாலே ஷாக் அடிக்கும்
 கரண்ட்டும் நீதான்.

பெண் :     தினந்தோறும் நான் படிக்கும் 
 நாளிதழ் நீதான்,
 நாடெங்கும் போற்றிடும்
 ஆளும் நீதான்.

 கிட்ட நீ வந்தாலே
 நடு நடுங்குது,
 உள் நெஞ்சு தானாக
 பட படபடக்குது.

6 comments:

  1. ''...நீ வேறு, நான் வேறு
    இல்லையடி.
    இனி, நான் தானே
    பந்தத்தின் சொந்தமடி. ..''

    வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  2. தினந்தோறும் நான் படிக்கும் நாளிதழ் நீதான்//வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. பார்த்தாலே படபடக்கும்
    பெண்ணும் நீதான்,
    தொட்டாலே ஷாக் அடிக்கும்
    கரண்ட்டும் நீதான்.


    பார்த்து கரண்ட்கிட்ட ஜாக்கிரதை

    ReplyDelete
  4. தினந்தோறும் நான் படிக்கும் நாளிதழ்...மிகவும் அருமையான பிரயோகம்!

    ReplyDelete
  5. பாட்டும் எதிர் பாட்டும் அருமை .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. //காற்றோடு காற்றாக என்னை இழு, கடல்தாண்டி வரும் அலையை தடு. //இரட்டை அர்த்தமா அன்பரே

    ReplyDelete

 

வந்து போனவுங்க