Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Friday, July 20, 2012

டார்க் நைட் ரைசஸ் - The Epic Concludedகிறிஸ்டோபர் நோலன் கைவண்ணத்தில் கிறிஸ்டியன் பேல் நடித்த இத்திரைப்படம் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. காரணம் இதன் முந்தய இரண்டு பாகமும், இயக்குனர் மீது இருக்கும் நம்பிக்கையும் தான். உலகில் அதிக பிரிண்ட் போடப்பட்ட 2வது  படம் என்ற பெயரை வாங்கயுள்ளது 4404 திரைஅரங்கு.Twillight Saga-Eclipse 4468 பிரிண்ட் போட்டு முதல் இடத்தில் உள்ளது. அவேஞ்சர்ஸ் எல்லாம் அடுத்து தான்.
ப்ருஸ் வேயின், அல்பிரெட், பாக்ஸ் இவர்கள் தான் எப்போதும் போல இதிலும் தங்கள் வேலையை சரியாக செய்து வருகின்றனர். வில்லனாக ஒரு வித மாஸ்க் அணிந்து கொண்டு வரும் வில்லனின் பெயரும் வேயின் தான். கதை ஆரம்பம் ஆனது முதல் எதற்காக இந்த வில்லன் இவன் ஏன் மாஸ்க் அணிந்திருக்கிறான் என்றே சிந்திக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
கதை ஆரம்பம் ஆன உடனேயே போலீஸ் கமிஸ்னர் வில்லனிடம் உதை வாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார். ஹீரோ காலில் அடிப்பட்டு ஒரு பெண்ணிடம் பல முறை பல்பு வாங்குகிறார். ப்ருஸ் வேயினின் நிறுவனத்தை அவர் கைரேகைகை பயன்படுத்தி  வில்லன்கள் அவரது சொத்துக்களை ஷேர் மார்க்கெட்டில் புகுத்தி அவரை நடுத்தெருவில் நிறுத்துகின்றனர்.
முந்தய பாகங்களில் போலீஸ் கமிஸ்னர் செய்து வந்த வேலையை இதில் வேறுஒரு இளம் போலீஸ் அதிகாரியை செய்யவைத்துள்ளனர். கேட்வோமன் போன்ற ஒரு கேரேக்ட்டரை இதில் புகுதிஉள்ளார் இயக்குனர். வெறும் தோற்றம் மற்றுமே ஸ்பெஸல் பவர் கிடையாது. நாயகன் வைத்திருக்கும் நியூகிளியர் எநேர்ஜி ரியாக்ட்டர் மூலம் கோதம் நகரத்தையே அழிக்க வில்லன் ஒரு பிஸ்ஸன் மூலம் ஒரு குண்டை உருவாக்கி அதை வைத்து நகரத்தையே பயமுறுத்துகிறான்.
ஹீரோ வில்லனிடம் அடிவாங்கி, மிதிவாங்கி, உதைவாங்கி பல மாதங்களாக வில்லனின் சிறைசாலையில் உள்ளார். அந்த சிறைசாலையில் இருந்து வெளியே வர ஒரு கிணற்றின் மூலமாக தான் ஏறி வர வேண்டும். கதை உடனேயே பிளாஷ் பேக்கிற்கு செல்கிறது. இதுவரை ஒரே ஒரு குழந்தை மட்டுமே அந்த கிணற்றை ஏறி வெளியே வந்தது அது தான் வில்லன் என்று நம்மை இயக்குனர் நம்பவைத்துவிட்டு இறுதியில் அது ஒரு பெண் பெயர் மிரண்டா என்று நம்மை முட்டாள் ஆக்கி விடுகிறார். நாயகன் அந்த கிணற்றின் அடியில் இருந்து வெளியே வந்து எப்படி வில்லனை கொள்கிறார் என்பது மிச்ச கதை. வில்லன் ஏன் மாஸ்க் அணிந்திருக்கிறார் என்று இறுதியில் ஒரே ஸாட்டில் சொல்லிவிடுகிறார்.
அந்த குழந்தை அதாவது மிரண்டாவை அந்த சிறையில் இருந்து காப்பாற்றிய நபர் தான் அந்த முகமுடி அணிந்த வில்லன். மிரான்டா யார் என்று சொல்ல கதைக்குள் சிறு சிறு கதையை சொல்கிறார் இயக்குனர். இறுதியில் அந்த வெடிகுண்டை அழித்துவிட்டு தானும் இறந்துவிடுகிறார். பின்னர் அவரது சொத்துக்கள் யாவும் அநாதை இல்லத்திற்கு ஒப்படைக்க படுகின்றது. அந்த இளம் போலீஸ் அதிகாரியாக வரும் நபரிடம் தன் பேஸ்மென்ட் இடத்தை பற்றி தெரிவித்து அவரது ஆயுதங்கள் வைத்திருக்கும் இடத்தை அவரிடம் ஒப்படைக்கிறார். இறுதியில் அல்பிரெட் டிடம் சேர்கிறார்.

நச்சுனு நாலு:
1.      இவர் கயிறை திரியாக்கி மறுபடியும் திரியை கயிறாக்கி அதில் வெளிச்சம் எடுப்பவர்.
2.      வீரம் என்பது உடலை பலப்டுத்துவது மட்டும் அல்ல, மனதை பலமாக வைத்துகொள்வதும் தான்.
3.      உனக்கு எது பயத்த தருதோ நீ, அதுவாகவே மாறனும்.
4.      நான் இங்கே உங்களை ஆட்டிபடைக்க வரவில்லை, நீங்கள் யார் என்று உங்களுக்கு புரியவைக்கதான் வந்தேன்.
கொசுறு:
முந்தய பாகத்தில் இருந்த சுறுசுறுப்பு பேட்மேனிடம் இல்லை. சற்றே தொங்கல் போல் கானபடுகிறார். ஹான்ஸ் ஜிம்மர்ரின் இசை ஒரு பலம் என்றாலும் அதிகமாக பயன்படுத்தவில்லை. இந்தியாவில் சோனி மியூசிக் நிறுவனம் இத்திரைப்படத்தின் பிஜிஏம் உரிமையை வாங்கி லாபம் பார்த்துவிட்டது. இதுவே முடிவு, அடுத்த பாகம் கிடையாது.

13 comments:

 1. சிறப்பாக கூறியுள்ளீர்கள் நண்பரே...

  ReplyDelete
 2. நோலன் இப்படத்தில் செய்த ஒரே பிட்த்தமான விஷயம், கிறிஸ்டியன் பேல் க்கு ரிடைர்மென்ட் கொடுத்தது. அடுத்த பாகத்தில் இருந்து Joseph Gordon-Levitt தான் பேட் மேன்.

  ReplyDelete
 3. நோலன் இப்படத்தில் செய்த ஒரே பிடித்தமான விஷயம், கிறிஸ்டியன் பேல் க்கு ரிடைர்மென்ட் கொடுத்தது. அடுத்த பாகத்தில் இருந்து Joseph Gordon-Levitt தான் பேட் மேன்.

  ReplyDelete
  Replies
  1. இவர் பொருந்துவார என்று தெரியவில்லை. ஆனால், இன்செப்சனில் இவரது நடிப்பு நன்றாக இருந்தது.

   Delete
 4. கண்டிப்பாக பேட் மேன் படங்கள் இத்தோடு முடிந்திடாது... எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் வந்தால் கண்டிப்பாக எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால், நோலன் அவர்களே இது தான் இறுதி என்று கூறிவிட்டார்.

   Delete
 5. almost முழு கதையையும் எழுதீட்டிங்க? இதெல்லாம் விமர்சனத்துல வராது!!!! this is ச்போயளீர்

  படிக்கிறவங்க இதை படிச்சிட்டு படம் பார்கனுமிங்கற ஆர்வம் வரணும். அதை விட்டுட்டு முழு கதையையும் சொன்ன சப்புன்னு இருக்காது?

  ReplyDelete
 6. it is supposed to be SPOILER

  ReplyDelete
 7. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

  ReplyDelete
 8. ஆஹா! கதையை நல்லா புரியற மாதிரி சொல்லிட்டீங்க.. அந்த 4 டயலாக்ஸும் நான் மறந்துட்டேன், குட் கவனிப்பு

  ReplyDelete
 9. அண்ணே, நீங்க மறந்தது இந்த நாலு மட்டும் தான். ஆனா, உங்க விமர்சனதுள்ள 34 வசனம் போற்றுகீங்க...என்னால அந்த அளவுக்கு முடியாது....

  ReplyDelete

 

வந்து போனவுங்க