Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Tuesday, October 02, 2012

அலி ஜி- இண்டா ஹவுஸ்



சேச்சா பேரான் கோஹேன் இவர் நடித்து கதை திரைகதை அமைத்து இயக்கிய இந்த படம் 2006இல் ரிலீஸ் ஆகி செம ஹிட் ஆனது. இந்த படம் ஐரோப்பா நாடுகளில் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டது. காரணம் இவரது முந்தய படமான போராட் படத்தின் காட்சி அமைப்பு அதை ஆசியா நாட்டில் ரிலீஸ் செய்ய விடாமல் செய்துவிட்டது.
இந்த படத்தில் கதை என்பது ஓரளவு இருக்கு என்றே வைத்துகொன்டாலும் அதை பின்னுக்கு தள்ளுவது படத்தின் காட்சியமைப்பு தான். போராட் பார்த்தவர்களுக்கு இது எப்படி இருக்கும் என்று தெரியும்.
சும்மா சுத்திட்டு திரியும் நாயகன் அவனுக்கு எல்லா பழக்கமும் உண்டு. ஒரு பள்ளியில் பாடமும் நடத்துகிறார். அது வாழ்க்கை பாடமே தவிர ஏட்டு சுரக்காய் அல்ல. திடீரென அந்த பள்ளிக்கு நிதி உதவி நிறுத்த படுகிறது. இதை எதிர்த்து ஹீரோ ஒரு வித்யாசமான முறையில் உண்ணாவிரதமிருக்கிறார்.
அப்போது, தான் பிரதமர் பதவிக்கு வரவேண்டும் என்று துணை பிரதமர் துடிக்கிறார். நடக்கவிருக்கும் இடை தேர்தலில் நாயகனை நிக்க வைத்தால் கண்டிப்பாக தோற்று விடுவோம். இதை காரணம் காட்டி மத்த எம்பி க்களின் ஆதரவை நாம் பெற்றுவிடலாம் என்றும் திட்டம் தீட்டி. நாயகனை தனது கட்சியின் வேட்பாளராக அறிவிக்கிறார்.
நாயகன் பிரச்சாரம் செய்யும் விதம் ஒரு தினுசாக இருக்கிறது. இருந்தும் நாயகன் எப்படியோ வெற்றி பெற்று விடுகிறார். இதன் பிறகு பல சுவாரசியமான காட்சிகள் படத்தில் இருக்கிறது.
 அவை அனைத்தும் சிரிப்பதர்க்கே தவிர. கதையா காணோமே என்று யோசித்தால் நீங்கள் புத்திசாலி ஆகிவிடலாம்.
நச்சுன்னு நாலு
மத்த படத்தின் விமர்சனம் எழுதுவது போல இதுல நாலு வசனம் எழுதினா அப்புரம் என்ன விரட்டி விரட்டி அடிப்பாங்க. ஏன்னா, ஒவ்வொரு வசனமும் அந்த அளவுக்கு ரன கொடுரமா இருக்கும். இருந்தாலும் ஒரு வசனம் எனக்கு புடிச்சத மட்டும் கஷ்டப்பட்டு கண்டுபுடிசிருக்கேன். இதோ,

1.நீ துணை பிரதமரா எனக்கு வலது கையா இருக்கனும். முடியுமா?
இல்ல, நான் வழிய காட்டேன். இனி நீங்க தான் பாத்துக்கணும்
கொசுறு:
இது அமெரிக்கன் பை, வான் வில்தர் சீரியஸ் போன்ற படம். இதை தனியாகவே பார்க்குமாறு அறிவுருதபடுகிறது. எடாகுடமா மாட்டிகிட்டா கம்பெனி பொருப்பல்ல>>>> 

5 comments:

  1. கிடைத்தால் இந்த படத்தையும் பார்த்துவிட வேண்டியதுதான்...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. பத்து படங்கள் திரை விமர்சனங்கள் வெளியிட்ட உங்களுக்கு என் பாராட்டுகள்...

    ReplyDelete
    Replies
    1. ஓ... நான் அதுக்குள்ளே பத்து படத்துக்கு விமர்சனம் எழுதீடனா. எனக்கே தெரியில்லை நண்பா...

      Delete
  3. கோஹனின் இந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை. சீக்கிரம் இதையும் பார்த்துடணும். :)

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பாருங்க. நல்லா இருக்கும்.

      Delete

 

வந்து போனவுங்க