Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Sunday, October 14, 2012

தமிழ் அறிவும்! உணர்வும்!

தமிழ் அறிவு எ‎ன்பதற்கும் தமிழ் உணர்வு எ‎ன்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. தமிழ் ‏இலக்கண இலக்கியங்களைப் படித்தும் சிறந்த தேர்ச்சியும் பெற்ற ஒருவர் தமிழ் அறிவு பெற்றவராக ஆக முடியும். ஆனால், அவர் தமிழ் உணர்வு பெற்றவராக ஆக முடியும் எ‎ன்பது நிச்சயமல்ல. தமிழைப் பற்றி ஒருவர் அறிந்து வைத்திருக்கி‎ன்ற செய்திகளை வைத்து தமிழ் அறிவு உண்டாகும். எந்தச் சூழலிலும் சொந்த மொழியையும் இனத்தையும் பண்பாட்டையும் பேணிக்காக்கும் மனவுறுதியே தமிழ் உணர்வு எ‎ன்பதாகும்.

எ‎ன் தாய்மொழியை நான் இழக்க முடியாது; என் தாய்மொழியை அழிக்க இன்னொரு மொழ¢க்கு இடந்தர முடியாது; எத்தனை மொழிகளைக் கற்றாலும் எ‎ன் தாய்மொழியைக் கல்லாமல் இருக்க முடியாது என்பவ தமிழ் உணர்வி‎ன் சில அடையாளங்கள்.

தமிழ் அறிவு ‏இருந்து தமிழ் உணர்வு இல்லாதவர்கள் தமிழுக்காகப் பெரிதாக எதுவும் செய்யமாட்டார்கள். தமிழ் உணர்வு ‏இருந்து தமிழ் அறிவு இல்லாதவர்கள் தமிழுக்குச் செய்வதாக எண்ணி இலக்கு தெரியாமல் எதையாவது செய்துவிடுவார்கள். தமிழ் அறிவோடு தமிழ் உணர்வும் பற்றவர்கள்தாம் தமிழுக்காகச் செய்யவேண்டிய உருப்படியான செயல்களைச் செவ்வனே செய்துமுடிப்பார்கள்.

தமிழால் கிடைக்கும் எல்லாவகையான ஏந்து(வசதி)களையும் வாய்ப்புகளையும் எப்பாடுபட்டாகிலும் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ ஆளாய்ப்பறக்கும் நம்மவர்கள் சிலர், தமிழுக்காக ஒரு சிறு ந‎ன்மையும் செய்வது கிடையாது. இவர்களி‎ன் இப்போக்கு மாறவேண்டும்; இவர்கள் உள்ளத்தில் தமிழ் உணர்வை ஏற்கவேண்டும்.

15 comments:

 1. தமிழ் அறிவு தொடர்பாக சரியான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்
  தமிழ் அறிவுக்காக தொண்டுசெய்யப்போய் அது இலக்குத் தவறி வேறொரு வடிவன் பெற்றது....
  இது தான் என் தமிழ் தொண்டு

  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. படித்தமைக்கு நன்றி நண்பரே. ஊருக்குள் நான் தமிழன் என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றும் கும்பல் இருக்கிறது. அது ஒழிய வேண்டும்.

   Delete
 2. உண்மை சகோதரரே தமிழ் தமிழ் என்று ஏமாற்றி அதில் ஆதாயம் பார்கின்றனரே தவிர தமிழுக்காக உண்மை உழைப்பாளிகள் குறைவாகவே உள்ளனர்

  ReplyDelete
  Replies
  1. நன்றி மோகன் அவர்களே. நீங்கள் கூறியது உண்மையே.

   Delete
 3. வணக்கம் நண்பா. தமிழ் அறிவிற்கும், தமிழ் பற்றுக்கும் நல்ல அருமையான விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள்.

  பதிவில் சில சொற்ப்பிழைகள் இருப்பதாக உணர்கிறேன். நேரம் கிடைக்கும் போது சரி செய்யுங்கள்...

  அருமையான விளக்கத்துடன் பதிவளித்தமைக்கும், கருத்துக்கும் வாழ்த்துகளுடன் நன்றிகள்...

  ReplyDelete
  Replies
  1. THANKS VETRI. i will try to correct the mistakes.. And thanks for your continous support.

   Delete
 4. சினிமா விமர்சனம் அல்லாத பதிவுகளை தற்ப்பொழுது தாங்கள் வெளியிடுவது மனதிற்கு மகிழ்ச்சியையும், புது உத்வேகத்தையும் அளிக்கிறது நண்பா...

  ReplyDelete
  Replies
  1. he he.. now im watching serials thats why i didnt write movie reviews.. can i write English serial reviews

   Delete
  2. அப்பா ராசா, படத்துக்கே தாங்க முடியல, இதுல சீரியல் வேறையா...

   தாங்காதுப்பா என் டாஷ்போர்ட்...

   ஹா ஹா ஹாஆஆஅ

   Delete
 5. முதல் பத்தியில் உள்ள அந்த மன உறுதி வேண்டும்...

  ReplyDelete
 6. அருமையா சொல்லி இருக்கீங்க.. நானும் இவ்வளவு நாள் தமிழ் அறிவுடன் மட்டுமே இருந்தேன், உணர்வுகள் இருந்தாலும் சரியாக வெளிப்படுத்த தெரியாது.. இனி அறிவுடன் உணர்வும் இணையும் என்று நம்புகிறேன்.. இந்த பதிவுகளை எல்லாம் ஏன் நீங்க நம்ம விப்ரோ blogsphere இல் பதிவு செய்யவில்லை...

  ReplyDelete
 7. தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று.

  சுப்பிரமணிய பாரதி, வ. உ. சிதம்பரம்பிள்ளை, சி. வி. இராமன், பெருந்தலைவர் காமராசர், சுப்பிரமணியன் சந்திரசேகர், ஆர். கே. நாராயண், ஆர். வெங்கட்ராமன், சி. என். அண்ணாதுரை , ஈ.வெ.ராமசாமி (பெரியார்), சீனிவாச ராமானுசன், அப்துல் கலாம், பாரதிதாசன், திரு.வி.க., கண்ணதாசன், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் மாநிலத்தின் நன்கு அறியப்பட்டவர்களில் சிலராவர். இவர்களோடு, இளங்கோவடிகள், கண்ணகி, திருவள்ளுவர், தொல்காப்பியர், ஔவையார், கம்பர், கரிகால்சோழன், இராசராச சோழன், மருதநாயகம் போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும்.

  ReplyDelete
 8. தமிழில் தட்டச்சு செய்ய ஒரு ஆன்ராய்டு அப்லிகேசன்...!

  https://play.google.com/store/apps/details?id=com.mathi.ezhuthukolfree

  தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் கொண்டே இதை செய்ததாகவே கருதுகிறேன்...!

  நன்றி...!

  ReplyDelete

 

வந்து போனவுங்க