Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Thursday, October 04, 2012

காதல்:திருமணம் :மனைவி

மாலைப் பேருந்தில் வீட்டை நோக்கி, முன்னிருக்கை நடுத்தர வயது ஆசாமிகளின் பேச்சுவார்த்தை காதிலும் மனதிலும்...."நீ யாரையாவது லவ் பண்ணீருக்கியா?" அடுத்தவன் வெறுமையாய் சிரிக்க, "தப்பிச்சே" என்றான் கேட்டவன். திருமணங்களில் காதல்னா என்ன? அது எங்கே இருக்கு? எப்படி வருது? எங்க போய் முடியுது? ,கூழாங்கற்களாய் மனதில் சரிந்த கேள்விகளை நோக்கியதே இந்தப் பதிவு.

"எதிர்பார்ப்புகள் இல்லாமல் வருவது காதல்", சரி இந்த இலக்கணத்தோடான மனதை எங்கே தேடுவதாம்? அவன் என்னை மட்டுமே நேசிக்க வேண்டுமென்கிற எதிர்பார்ப்பிலேயே இந்த காதல் இலக்கணம் பொய்த்து விடுகிறதே?.சில விஷயங்களை உணர்வுகளால் மட்டுமே அணுபவிக்கவும் கொண்டாடவும் முடியும் அந்த வகையில்தான் என்னுடைய காதல் சேர்த்தி என நினைக்கிறேன். வார்த்தைகள் பொய்த்துப் போய் நினைவுகளும் நிஜங்களும் என்னைக் கொண்டாடும் உணர்வுகள்தான் காதலாய் இருக்க முடியுமோ?

கல்யாணம் பண்ணிக் கொண்டவர்கள் எல்லாம் தங்கள் இனையை காதலித்துக் கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு சரியாக இருக்க முடியும்?. என் பார்வையில் எல்லா தம்பதியரிடமும் காமம் மிகுந்திருக்கும் அளவிற்கு காதல் மிகுந்திருக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி.எனக்குத் தெரிந்து சமுதாய நிர்பந்தங்களுக்காய் குடும்ப கட்டுக்குள் உழலும் தம்பதியர்தான் பெரும்பான்மையினர்.
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான் திருமணத்தின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கிறது.எதிர்பார்ப்புகளுடன் கூடிய திருமண உறவில் இந்தக் காதலின் விளைவுகள் எத்தகையது? ஆதரவாய் சாய்ந்து கொள்ள தோளும், அதைக் கொடுக்கும் பக்குவமும் இல்லாத போதுதான் அதன் விளைவுகள் குடும்ப கட்டமைப்பை மீறி பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்த்து வரை எதிரொலிக்கிறது.
வெற்றிகளைக் சேர்ந்து கொண்டாடத் தெரிந்த தம்பதியர் தோல்வியென வரும் போது தோளோடு தோள் நின்று எதிர்கொள்ளாது ஒருவரை ஒருவர் காயப்படுத்தி காதலையும் குடும்பத்தையும் தெரிந்தே அழிப்பது வேதனையான வேதனை.

பொருளாதார தேவைகளுக்கு இருவரும் போராடும் குடும்பங்களில் ஆண்களை விட பெண்களுக்கே தன் இனையின் ஆதரவும், அங்கீகாரமும், அருகாமையும் அதிகமாய் தேவைப்ப்டுகிறது.ஏனெனில் பொருளாதார பங்களிப்பையும் தாண்டி பெண்களின் பங்கு குடும்ப நிர்வாகம் முதல் குழந்தை வளர்ப்பு வரை நீள்வதை யாரும் மறுக்கமுடியாது.சகிப்புத்தன்மை, பரஸ்பர அங்கீகாரம், ஒத்த முடிவெடுக்கும் பாங்கு, பிரச்சினைகளை ஒரு சேர எதிர்கொள்ளும் நம்பகத்தன்மை இத்தனையும் தருவது காதல்தானே!

இதெல்லாம் தன் இனையிடம் கிடைக்காமல் ஏமாற்றமும், இயலாமையும் சூழ புழுங்கும் ஆனோ பெண்ணோ வெளியில் சின்னதாய் ஒரு ஆறுதல் கிடைத்தாலும் கொம்பினைச் சுற்றும் கொடியாய் பற்றிக் கொள்வது இயல்புதானே! பிறகு அழுது ஆர்ப்பாட்டம் செய்வதால் யாருக்கு பயன்? இதை தவிர்க்க ஒரே வழி, உங்கள் இனையை ஆதரிப்பதுதான். எல்லா வகையிலும்.
திருமணமாவர்களே உங்கள் காதலைக் கொண்டாடுங்கள்.

உன்மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ...

12 comments:

 1. முஸ்தப்பாThursday, October 04, 2012 12:24:00 PM

  இதெல்லாம் எல்லாருக்கும் தெரியும். ஆனாலும், அந்த நிமிடம் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே செய்து விடுகிறோம். சிலர் வேண்டுமானால், மனைவியை காதலிக்காமல் இருக்கலாம். ஆனால், நான் காதலிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு கல்யாணம் ஆனா, நானும் தாங்க காதலிப்பேன். யாரு பொண்ணு குடுக்க ரெடி. கல்யாணத்திற்கு நான் ரெடி..

   Delete
 2. Nice post about husband and wife.. congrats for getting 73rd rank in indiblogger

  ReplyDelete
 3. தம்பதியினர்கள் தங்கள் இணையை காதலிக்க வேண்டும் என்பதை அருமையாக கூறியுள்ளீர்கள் நண்பா...

  இது அனுபவக் கருத்தா இல்லை அவதானித்ததா?

  ReplyDelete
  Replies
  1. ஹலோ, அனுபவமா?? I am still Youth.. எல்லாம் அனுபவசாலிகளின் நிலைமையை நேரில் காண்கிறோம் அதிலிருந்து அவதானித்தது .

   Delete
  2. அவதானித்திருந்தால் மகிழ்ச்சி. அனுபவம் என்றால்???

   Delete
 4. நல்ல பகிர்வு சகோ,,,

  வாசிப்பனுபவத்தை சுவையாக்கியது,,

  ReplyDelete
 5. நல்ல அலசல்... பாராட்டுக்கள்...

  பெற்றோர்களும் மனங்களை இணைக்க வேண்டும்... பணங்களை இணைத்தால்...? குழந்தைகளை (ஆண்/பெண்) வளர்க்கும் விதத்தில் இருந்தே தவறு இருக்கிறது... ஆனால் முன்பை விட இப்போது எவ்வளவோ பரவாயில்லை எனலாம்...

  தனது தாயை நேசிக்கும் அளவிற்கு தாரத்தை விரும்பாதது ஏன்...? அப்படியானால் அவர்கள் உண்மையாக தாயை நேசிக்கவில்லை...

  இதைப்பற்றி நிறைய சொல்லலாம்... இவை அவரவர் சூழ்நிலைக்கேற்ப மாறுபடும்...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் என் தளத்தில் கருத்திட்டதால் உங்களின் தளம் தெரியும்... Follower ஆகி விட்டேன்... தொடர்கிறேன்...

   நன்றி தோழரே...

   Delete
  2. பின்தொடர்ந்ததர்க்கு நன்றி தோழரே.

   Delete
  3. தங்கள் கருத்துக்களுக்கு நன்றி... இப்போது இருக்கும் காலகட்டத்தில் அனைவரும் பணத்திற்காகவே வாழ்கிறார்கள். இப்படி பட்ட சூழ்நிலையில் எவ்வாறு நாம் அன்பை எதிர்பார்க்க முடியும்.

   Delete

 

வந்து போனவுங்க